சனி, 1 பிப்ரவரி, 2014

வட கொரிய ஜனாதிபதி உத்தரவில் மாமா குடும்பத்தில் 100 பேர் -இரு தூதர்கள் உட்பட- சுட்டு கொலை!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தமது மாமாவின் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் – பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் – கொன்றுவிட உத்தரவிட்டதாகவும், அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும், தென்கொரியாவின் யொன்ஹாப் நியூஸ் ஏஜென்சி பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மாமாவின் உறவினர்கள் என சுட்டு கொல்லப்பட்டவர்களில், வட கொரியாவின் வெளிநாட்டு தூதர்களாக இருந்த இருவரும் அடக்கம்!
கடந்த டிசெம்பரில் வட கொரிய இளம் ஜனாதிபதி கிம் ஜொங் உத்தரவுப்படி, ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் இடைநடுவே அவரது மாமா ஜாங் சொங்-தீக் காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில், அவரை சுட்டுக் கொல்லும்படி ஜனாதிபதியின் உத்தரவு வந்தது.மாமாவுக்கு மரணதண்டனை உத்தரவை பிறப்பித்தபோது, ஜனாதிபதி கிம் ஜொங் ‘தலை தூக்க முடியாத அளவில்’ போதையில் இருந்தார் எனவும், தகவல் வெளியானது.

மாமாவை கொலை செய்ய உத்தரவிட்ட ஜனாதிபதி, அதன்பின் அவரது குடும்பத்தின் எந்த சுவடும் இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார் என்கிறது, தென்கொரியாவின் யொன்ஹாப் நியூஸ் ஏஜென்
 இதையடுத்து, கொல்லப்பட்ட மாமாவின் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள், அவர்களது குழந்தைகள் என சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது வீடுகளுக்கு ‘கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்’ சகிதம் சென்ற வட கொரிய பாதுகாப்பு படையினர், மற்றையவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிஸ்டல்களால் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்டவர்களில், மாமா ஜாங்கின் சகோதரி ஜாங் கை சன், அவரது கணவர் ஜொன் யொங் ஜின் (கியூபாவுக்கான வடகொரிய தூதர்), மருமகன் ஜாங் யொன்-சொல் (மலேசியாவில் வட கொரிய தூதர்) ஆகியோரும் அடங்குவர்.
வெவ்வேறு இடங்களில் இருந்த இவர்கள் அனைவரையும் தலைநகர் யொங்-யாங்குக்கு புறப்பட்டு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும், அதன்பின் ஒரே தினத்தில் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
மாமா குடும்பத்தின் எந்த சுவடும் இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டதால், மாமா குடும்பத்தில் திருமணம் மூலம் இணைந்த (ரத்த உறவு அற்ற) சிலர் கொல்லப்படவில்லை. உதாரணமாக, மலேசியாவில் வட கொரிய தூதராக இருந்த ஜாங் யொன்-சொல்லின் மனைவி கொல்லப்படவில்லை. ஆனால், அவரின் குழந்தைகள் இரண்டும், (தந்தை வழியில் ரத்த உறவினர் என்பதால்) கொல்லப்பட்டனர்.
கொல்லப்படாமல் விடப்பட்டவர்களின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டு, தலைநகரில் இருந்து கிராமங்களுக்கு போகும்படி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக