வியாழன், 30 ஜனவரி, 2014

1984 சீக்கியர் படுகொலை ! விசாரிக்க புலனாய்வு குழு: கேஜ்ரிவால் அதிரடி!!


டெல்லி: 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். 1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1984 சீக்கியர் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: கேஜ்ரிவால் அதிரடி!! இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய ராஜிவ் காந்தி அரசு கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், 1984 சீக்கியர் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது குறித்து துணைநிலை ஆளுநரிடம் விவாதித்தேன். ஆளுநரும் சாதகமான பதிலை கூறினார் என்றார். பின்னர் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சட்டசபை சபாநாயகர் எம்.எஸ்.திர், 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை குறித்து தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றார்

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக