புதன், 29 ஜனவரி, 2014

ஜில்லா கல்லா கட்டவே இல்லை களையும் கட்டவில்லை

‘ஜில்லா’ கலெக்‌ஷனில் கல்லாகட்டியது என்றும் அதனால் நஷ்டம் ஏற்படவில்லை என்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் சொன்னாலும், வேடிக்கையான திரைக்கதையாலும் சோர்வான காட்சிகளாலும் ஜில்லா விஜய் ரசிகர்கள் மத்தியில் களைக்கட்டமலேயே போனது. அதனால் அடுத்தத்த படங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். இதற்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திலும் விஜய்க்கு கசப்பான அனுபவமே மிஞ்சியது.  2012ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான துப்பாக்கி படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி கொடுத்தது. இப்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைகிறார் விஜய். தற்போதைக்கு தன் இந்திபட வேலைகளில் இருக்கும் முருகதாஸ் அதை விடித்துவிட்டு, பெயரிடப்பாடத படத்தில் விஜய்யை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இதுவரை வடிவேலு, சந்தானம், லாரன்ஸ் ராகவேந்திரா ஆகிய ஹீரோக்களுடன் பணிபுரிந்து நகைச்சுவை படங்களை கருத்துகொல்லும் களமாக மாற்றியவர் சிம்புதேவன். விஜய்யுடன் இணையும் படம் மாஸ் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படபிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.
ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லியுடன் ஒரு படம் நடிக்கிறார் விஜய். இயக்குனர் சுசீந்திரனிடமும் கதை கேட்டிருக்கிறார் விஜய். அதேநேரத்தில் இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரிடம் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் விஜய் தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.  ஜில்லா கல்லா கட்டவே இல்லை களையும் கட்டவில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக