புதன், 29 ஜனவரி, 2014

BJP கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி? தொழிலதிபர் வீட்டில் நடந்த பேச்சில் சுமுக உடன்பாடு

'தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க.,வை புறந்தள்ளி விட்டு, பா.ஜ., அணியில் இடம் பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், தே.மு.தி.க., முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 தொகுதிகள்: பி ஜே பி கூட்டணி தலைவர்கள் வேட்பாளர்கள் எதுக்கும் ஹெல்மட் போட்டுக்கிட்டு விருசிககாந்தோட மேடையேறுவது நல்லது இல்லைனா நங்கு நங்குன்னு கேப்டன் வெக்குற கொட்டுல தலை மாம்பழம் சைஸ்ல வீங்கிக்கும்

பா.ஜ., அணியில், ம.தி.மு.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. விருதுநகர் உட்பட, 10 தொகுதிகளில் போட்டியிட, அக்கட்சித் தலைவர், வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய, பா.ஜ., முன் வந்துள்ளது. பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பூர்வாங்க பேச்சுவார்த்தையை, முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணியிடம், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ் நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், பா.ம.க., கேட்ட, 10 தொகுதிகளுக்குப் பதிலாக, ஏழு தொகுதிகளை தர, பா.ஜ., முன்வந்துள்ளது.


இதற்கிடையில், சென்னையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், ஆந்திராவை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரும், தே.மு.தி.க., முன்னணி தலைவர் ஒருவரும் சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது, 16 தொகுதிகளை, தே.மு.தி.க., வுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில், தே.மு.தி.க., தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் செயல்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்ற கோஷத்தை அடுத்த மாதம், 2ம் தேதி, உளுந்தூர் பேட்டையில் நடக்கும், தே.மு.தி.க., மாநாட்டில், அக்கட்சியினர் தெரிவிக்க உள்ளனர். அதனால், அன்றைய, பா.ஜ., உடனான, கூட்டணி குறித்த, முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன்பின், வரும், 8ம் தேதி, வண்டலூரில் நடைபெறவுள்ள, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியுடன் விஜயகாந்தும் கைகோர்க்க உள்ளார்.






'சராசரி தமிழன்':
உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த பின், தே.மு.தி.க., அலுவலகத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளீதர்ராவ் ஆகியோர் சென்று, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்கின்றனர். அதன்பின், கமலாலயத்திற்கு விஜயகாந்த் சென்று, பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், 'பா.ஜ., அணியில், தே.மு.தி.க., இடம் பெற வேண்டும்' என, விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை கையில் எடுத்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், பார்த்திபன் ஆகியோர், பேஸ்புக்கில் உள்ள தங்களின் வலைப்பக்கத்தில், 'சராசரி தமிழன்' என்ற பெயரில், விஜயகாந்துக்கு எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ தமிழகத்தை ஆளக்கூடது என, தே.மு.தி.க.,வை ஆரம்பித்தீர்கள். அப்படி இருக்கும்போது, அவ்விரு கட்சிகளுடன், எப்படி கூட்டணி அமைக்க முடியும். இப்போது, அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர மாட்டீர்கள். ஆனால், தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்தால் என்ன என, உங்களுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டுள்ளது. பூனைக்கு பயந்து, புலியிடம் மாட்டிக் கொண்ட கதையாக்கி விடாதீர்கள். எனவே, பா.ஜ.,- தே.மு.தி.க.,- பா.ம.க.,- ம.தி.மு.க., கூட்டணியே பொறுத்தமானது. உங்களுக்கான தொகுதிகளை பெற்று, வெற்றி பெறுங்கள். மத்திய மத்திரி சபையில் இடம் பெறுங்கள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.





தே.மு.தி.க., கூட்டணி நிச்சயம்;

பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி: ''ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்தும் விஜயகாந்த், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி அமைப்பார். அவர் மாநாடு நடத்துவதே, பா.ஜ.,வுடன் கூட்டணி என்பதை சொல்லத் தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பல்வேறு கட்சிகளை இணைத்து, பா.ஜ., தலைமையில் கூட்டணி அமையப்போகிறது. இதற்கான, பணிகள் விரைவாக நடந்துக நடந்து வருகின்றன. தே.மு.தி.க., - பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பதில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த், பிப்., 2ம் தேதி, ஊழலுக்கு எதிரான மாநாட்டை நடத்துகிறார். ஊழலுக்கு எதிரான மாநாடு, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றுக்கு எதிராகத் தான் நடத்த முடியும். ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்திவிட்டு, அக்கட்சிகளுடன், தே.மு.தி.க., எப்படி கூட்டணி அமைக்கும். ஊழலுக்கு எதிராக, விஜயகாந்த் மாநாடு நடத்துவதன் நோக்கமே, பா.ஜ.,வுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும், என்பதை உணர்த்துவதற்குத் தான். எனவே, பா.ஜ., தே.மு.தி.க., கூட்டணி உறுதியான ஒன்று. இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

- நமது நிருபர் -
dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக