வியாழன், 30 ஜனவரி, 2014

சமரசத்துக்கு அழகிரி 2 நிபந்தனைகள்!!


துரை: திமுக தலைமையுடன் சமரசத்துக்கு உடன்பட அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். மதுரையில் தமது பிறந்த நாளை கொண்டாடிய மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது பிறந்தநாள் சிறப்பாக இந்த ஆண்டு மிகச் சிறபாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் எனக்கு மீண்டும் முக்கியத்துவம் தருவதாக எந்த தகவலும் வரவில்லை. திமுக தலைமையுடன் சமரசத்துக்கு உடன்பட மு.க. அழகிரி 2 நிபந்தனைகள்!! தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்த 2 விஷயத்தையும் திமுக மேலிடம் ஏற்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. அப்படி செய்தால் சமரசத்துக்கு உடன்படுகிறேன். இவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்தார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக