வியாழன், 30 ஜனவரி, 2014

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மு.க.அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை மதுரையில் கொண்டாடப்பட்டது. டி.வி.எஸ்.நகர் பகுதி சாய் நகரில் உள்ள தனது வீட்டில் மு.க. அழகிரி வியாழக்கிழமை காலை பிறந்தநாள் கேக் வெட்டினார். உடன் அவரது மனைவி, மகள், மகன், மருமகள் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கு கேக் ஊட்டினார். மு.க.அழகிரிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், ஆதரவாளர்கள் புடைசூழ அழகிரியை நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்துக்கு அழைத்து சென்றனர்.
அழகிரி வரும் வழியெங்கும் மேளதாளம், கரகாட்டம், சிலம்பாட்டம் என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜா முத்தையா மன்றத்துக்கு வந்ததும் சுமார் 63 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி, அழகிரி பிறந்த நாளை கொண்டாடுகிறார். மன்றத்தைச் சுற்றிலும், வாழ்த்துத் தெரிவிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக