வெள்ளி, 31 ஜனவரி, 2014

Raid ! S.R,Gopi,,,,.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!

மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினர். இந்த சோதனையால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல முன்னாள் செயலாளருமான மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை மதுரையில் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் எஸ்.ஆர்.கோபி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக