சனி, 1 பிப்ரவரி, 2014

ஒன்றரை வயது குழந்தை சாவு: இந்திய பெற்றோர் கைது


அமெரிக்காவில் பணிப்பெண் தாக்கியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், முன்னெச்சரிக்கையை மீறி அந்தப் பணிப்பெண்ணிடம் குழந்தையை விட்டுச் சென்ற இந்தியப் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் மணி சிவகுமார் (33) மற்றும் தேன்மொழி (24) ஆகியார், தங்கள் குழந்தை அதியனை கவனித்துக்கொள்ள கிஞ்சால் படேல் (27) என்பவரை பணியமர்த்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி குழந்தை அதியன் முகத்தில் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்ததையடுத்து அவனை கிஞ்சாலிடம் விடவேண்டாம் என பெற்றோரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், ஜனவரி 16}ஆம் தேதி தலையில் பலத்த காயம் பட்ட குழந்தை அதியன் 19-ஆம் தேதி உயிரிழந்தான். அவன் மீது ஆத்திரத்தில் தாக்கியதாகவும், அப்போது தலையில் அடிபட்டதாகவும் கைது செய்யப்பட்ட கிஞ்சால் படேல் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, எச்சரிக்கையையும் மீறி குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக மணி மற்றும் தேன்மொழியை போலீஸார் கைது செய்தனர்.dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக