ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையானின் தங்க உருவம் பதித்த விலை உயர்ந்த
கைக்கடிகாரத்தை சுவிட்சர்லாந்து நாட்டு கடிகார தயாரிப்பாளரான சென்ச்சுரி
டைம்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கடிகார
தயாரிப்பாளரான சென்ச்சுரி டைம்ஸ் திருப்பதி ஏழுமலையானின் உருவம் பதித்த
கைக்கடிரகாரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த
கைக்கடிகாரத்தில் ஏழுமலையானின் உருவம் தங்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள்
பதிக்கப்பட்டுள்ளன.இது ஒரு லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரம்(அதாவது ஒரு சில
கைக்கடிகாரங்களே செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்). மொத்தம் 333
கைக்கடிகாரங்களே செய்யப்பட்டுள்ளன. இந்த கைக்கடிகார விற்பனையில் வரும் பணம்
திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஊனமுற்றோருக்கான மருத்துவமனையான பாலாஜி
இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜரி, ரிசர்ச் மற்றும் ரிஹெபிலிடேஷன் ஆஃப் தி
டிஸ்ஏபில்டுக்கு செல்லும்.
சனி, 23 பிப்ரவரி, 2013
வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே வாழ்க்கையை தொடங்கலாம்
பைக் கொடுத்த லைஃப்
கடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய
தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம்
பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு
வந்திருந்தார். வாழ்க்கையை நகர்த்த எடுத்த சில முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றியை
எட்டவில்லை. கையில் எதுவுமே மிஞ்சவில்லை. அடுத்தது என்ன?
பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே
வாழ்க்கையை தொடங்கலாம் என்பது திட்டம். வண்டி நின்ற இடம் கரூர். அந்நகரில் அப்போது
ஏற்றுமதித் தொழில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்ததை கண்டார். சில நிறுவனங்களில்
சிலகாலம் பணியாற்றிவிட்டு, சொந்தமாகவே ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
இம்முறை அதிர்ஷ்டத் தேவதை ராகுலன் பக்கம் இருந்தாள். ஹாலந்து நாட்டிலிருந்து நிறைய
‘ஆர்டர்கள்’ இவரது நிறுவனத்துக்கு கிடைத்தது.
ஒருகட்டத்தில் வணிகத்தைப் பெருக்க ஹாலந்துக்கே குடிபெயர வேண்டிய அவசியமும்
ஏற்பட்டது. மனைவி, மகன், மகளோடு குடும்பமாக புலம் பெயர்ந்தார். அந்நாட்டின்
குடியுரிமையும் அவருக்குக் கிடைத்தது.
இப்போது நாற்பத்தியோரு வயதாகும் ராகுலனின் பின்புலம் இதுதான். ஹாலந்தில் அவரது
வாழ்க்கை நிலைபெற்று விட்டாலும், தாய்மண்ணான கும்பகோணம் அவரை ஈர்த்துக்கொண்டே
இருந்தது. கும்பகோணத்துக்கு அருகில் திருப்பனந்தாள் என்கிற கிராமம். விடுமுறைக்காக
ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இம்மாதிரி வந்தபோதுதான் சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்தார். குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவருவதாக நினைத்தார். விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்திருந்த காலக்கட்டம் மாறியிருந்தது. விவசாய நிலங்களில் பணிக்குச் சென்றதால் பணம் சம்பாதித்து, குடும்பத்தை கவுரவமாக நடத்திக் கொண்டிருந்த பெண்கள் அப்போது மிகச்சிரமமான நிலையில் இருந்ததை உணர்ந்தார்.

கேரளத்தில்அதிகமான படங்கள் போட்டி! செல்லுலாய்ட் சிறந்த படமாக விருது
ஒழிமுறி சென்ற வருடத்திற்கான கேரள அரசு சலச்சித்ர அக்காதமி விருதுகளில்
3 விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த இரண்டாவது சிறந்த படத்துக்கான
விருது, மிகச்சிறந்த பின்னணி இசைக்கான விருது, மிகச்சிறந்த
உடையலங்காரத்துக்கான விருது
கேரளத்தில் சமீபத்தில் சிறந்த படங்களுக்காக இவ்வளவு அதிகமான படங்கள் போட்டியிட்டதில்லை. போட்டிக்கு ஜூரி பார்த்த படங்கள் கிட்டத்தட்ட எண்பது. அவற்றில் பன்னிரண்டு படங்கள் விருதுக்களின் கடைசிப் பட்டியலில் இருந்தன. ஒழிமுறி சிறந்த படம் [மதுபால்] சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் [லால் ] சிறந்த நடிகை [மல்லிகா] ஆகிய தளங்களிலும் கடைசி மூன்றுபட்டியலில் இருந்தது.
சிறந்த திரைக்கதைக்கான விருது எதிர்பார்க்கப்பட்டாலும் மஞ்சாடிக்குரு படத்துக்காக அஞ்சலிமேனனுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச பெண்கள் திரைவிழாவில் அப்படம் பெற்ற விருது அதற்கு கூடுதல் மதிப்பெண் பெற உதவியது.
சிறந்த நடிகருக்கான விருது ஒழிமுறிக்காக லாலுக்கு அளிக்கப்படும் என்ற பேச்சு உறுதியாகவே இருந்தது. ஆனால் செல்லுலாய்டுக்காக பிரித்விராஜ் அந்த விருதை பெற்றார். டானியலாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் நடிகராக பலபடிகள் லால் முன்னணியில் இருக்கிறார் என்பதே ஊடகங்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது
தனிப்பட்ட முறையில் நான் செல்லுலாய்ட் சிறந்த படமாக விருது பெற்றதை வரவேற்கிறேன்.

Hydrabad 8 தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு
ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக
அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத
இயக்கம்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய 8
தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் நேற்று
முன்தினம் இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்குள்ள தில்சுக் நகரில் 2 இடங்களில்
அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில், பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக
அதிகரித்துள்ளது. காயமடைந்த 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். வர்களில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டு வெடித்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே
நேற்று காலை பார்வையிட்டார். அவருடன் ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், முதல்வர்
கிரண்குமார் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் என்.கே.சிங் உள்ளிட்டோர்
சென்றிருந்தனர். குண்டுவெடிப்பு குறித்த விவரங்களை ஆந்திரா போலீஸ் டி.ஜி.பி
தினேஷ் ரெட்டி தெரிவித்தார்.அங்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம் ஷிண்டே ஆலோசனை நடத்தினார்.
குண்டுவெடித்த இடத்தில் கிடைத்த தடயங்கள் குறித்து அவர்களிடம் ஷிண்டே
கேட்டறிந்தார்.
''எப்படி ஜெயித்தேன் - எம்ஜிஆர்'' IF I WERE A KING
1937 ஆண்டு. கல்கத்தாவில் மாயா மச்சீந்திரா என்கிற படத்தின் சூட்டிங்.
அப்போது எம்ஜிஆர் சாதாரண ராமசந்தராகத்தான் இருந்தார். புரட்சிதலைவரெல்லாம்
கிடையாது. துடிப்பான இளைஞரான எம்ஜிஆர் அக்காலகட்டத்தில் ஏகப்பட்ட
ஆங்கிலப்படங்கள் பார்க்கிறார். இத்தனைக்கும் எம்ஜிஆருக்கு அந்த சமயத்தில்
ஆங்கிலம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் சினிமாவின் மீது தீராத
ஆர்வமும் குறுகுறுப்பும் துறுதுறுப்புமாக திரிந்த காலம் அது.
ஒரு நாள் சில நண்பர்களுடன் ஆங்கில படம் ஒன்றை பார்க்கிறார். அப்படத்தின்
பெயர் 'இஃப் ஐ வேர் ஏ கிங்''. ரொனால்ட் கால்மேன் என்கிற நடிகர் நடித்த
சூப்பர் ஹிட் படம் அது. படம் முழுக்க IF I WERE A KING என்கிற வசனம் படம்
முழுக்க இடம்பெறுகிறது. அந்த வசனத்துக்கும் மட்டும்தான் அர்த்தம்
தெரிந்துவைத்திருந்தார் எம்ஜிஆர். படம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து
விதவிதமாக 'நான் மன்ன்னானால்' என்கிற வசனத்தை விதவிதமாக
சொல்லிப்பார்க்கிறார். ஒருவேளை தான் தமிழ்நாட்டுக்கே மன்னனானால்
என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்தித்துப்பார்க்கிறார்.
பிரதீபா காவேரி கப்பல் விபத்தில் பலியான இன்ஜினியரின் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை : உருக்கமான கடிதம்
அரக்கோணம்: சென்னை அருகே தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து
குதித்து பலியான இன்ஜினியரின் பெற்றோர், இன்று காலை தூக்குபோட்டு தற்கொலை
செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் நிலம் புயல்
தாக்கியது. அப்போது மும்பையில் இருந்து சென்னை வந்த பிரதீபா காவேரி என்ற
கப்பல், புயலில் சிக்கி சென்னையில் தரைதட்டி நின்றது. கப்பலில் இருந்த
இன்ஜினியர்களும் ஊழியர்களும் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். சிலர், உயிர்
பிழைப்பதற்காக கப்பலில் இருந்து கடலில் குதித்தனர். அவர்களில் 5
இன்ஜினியர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம்
அரக்கோணம் அருகே உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோதண்டபாணி (56) பாரதி
(51) தம்பதியரின் ஒரே மகனான மரைன் இன்ஜினியர் நிரஞ்சன் (24) என்பவரும்
பலியானவர்களில் ஒருவர். தங்களது ஒரே மகன் இறந்ததால் நிரஞ்சனின் பெற்றோர்
மிகுந்த சோகத்தில் இருந்தனர். தினமும் மகனை நினைத்து அழுது புலம்பி
வந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் மகன் இறந்த
துக்கம் அவர்களை வாட்டி வைத்தது. இந்நிலையில், இன்று காலை நீண்ட
நேரமாகியும் கோதண்டபாணி வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்
பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் ஒரே
கயிற்றில் கோதண்டபாணியும் பாரதியும் தூக்கில் தொங்கியதை கண்டு
அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கயிற்றை அறுத்து இருவரையும் இறக்கினர்.
அவர்கள் இறந்துவிட்டது தெரிந்தது.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
அமீரின் ஆதி-பகவன் உத்தரவாதமான சூப்பர் ஹிட்.
பூசாரிகள் சங்கம், பூ பறிப்போர் சங்கம் என்று யாரும் தடை கோர முடியாது. போராட்டம் நடத்துவதென்றால், ‘போலீஸ் என்கவுன்டர் செய்வோர் சங்கம்’ களத்தில் இறங்கலாம். கதை போலி என்கவுன்டர் பற்றியது.
விஸ்வரூபம் படத்துக்கும் இதற்கும் இடையே ஒரு ஆச்சர்ய ஒற்றுமை இருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் 8.2% அமெரிக்க NRI இந்தியர்கள்
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 8.2
சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு சமூகத்தினரிடம், அவர்களது வருமானம் உள்ளிட்ட விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4 கோடியே 27 லட்சம் அமெரிக்கர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர் எனத் தெரியவந்தது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைப் பொறுத்தவரை 8.2 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர்.
இதே போன்று, அமெரிக்க ஜப்பானியர்களில் 8.2 சதவீதத்தினர், வியத்நாமியர்களில் 14.7 சதவீதத்தினர், கொரியர்களில் 15 சதவீதத்தினர், பிலிப்பின்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த 5.8 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தின் அடிப்படையில் வறுமைக்கோடு வரையறுக்கப்படுகிறது. 2012-ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்துக்கு கீழே இருந்தால், அக்குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
வினவு
குடும்பம், பணியிடம், பொது இடங்கள் என்றும் கருவில் இருக்கும் போது
குழந்தையாக, மாணவியாக, மனைவியாக, உழைப்பாளியாக என்றும் பெண்ணின் மீது
சமூகம் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறையை செலுத்துகிறது.
இந்தியாவின் தெருக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பற்றவை என்பது விவாதத்திற்கு இடமற்ற விடயம். ஆனால், இந்தியக் குடும்பங்கள். . . .?
தெருக்களில் போகும் பெண்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத போக்கிரிகளிடமிருந்து மட்டும் ஆபத்து வருவதில்லை. படித்த, கண்ணியமாகத் தெரியும் ஆண் பிள்ளைகளிடமிருந்தும் ஆபத்துகள் – வக்கிரமாகப் பார்ப்பது தொடங்கி பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான ஆபத்துகள் – வருகின்றன. போக்கிரிகளை, வளர்ப்பு சரியில்லை, குடும்பம் சரியில்லை என்று குற்றஞ்சுமத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், பார்வைக்குக் கண்ணியமாகத் தெரியும் இந்த ஆபத்தான ஆண்களும்கூட வானத்திலிருந்து குதிப்பதில்லை. நல்ல, பண்பாடு மிக்கதாகச் சொல்லப்படும் குடும்பங்களிலிருந்துதான் இந்தக் கண்ணியவான்கள் வருகிறார்கள்.

மலிவு விலை உணவகத்தில் 5,000 பேருக்கு இட்லி சப்ளை
சென்னையில் திறக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு மக்களின்
ஆதரவு அதிகரித்து வருவதால், கூடுதலாக 4000 பேருக்கு உணவு வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 19ம்
தேதி 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகத்தில் ஒரு இட்லி
(100 கிராம்) ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) 5
ரூபாய்க்கும், தயிர் சாதம் (350 கிராம்) 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 1,000 பேருக்கு வழங்கும் வகையில் உணவு
தயாரிக்கப்பட்டது. உணவகம் தொடங்கிய அன்று சிறிது நேரத்தில் எல்லா உணவும்
தீர்ந்து விட்டன. முதல் நாளில் மட்டும் ரூ.40 ஆயிரம் வரை வசூலானது.
Readers Digest திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்!
நியூயார்க்: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக
அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன்
டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல்
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ.
1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின்
அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட்
அது.இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம்
நடத்தி வருகிறது. ஆனால், இதழின் விற்பனை சரிந்ததாலும் விளம்பரங்கள்
குறைந்துவிட்டதாலும் பெரும் நஷ்டத்தை ரீடர்ஸ் டைஜஸ்ட் சந்தித்து
வருகிறது.இதையடுத்து திவால் ஆகிவிட்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க திவால் நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம்
வெளியிட்டுள்ளதால், அதற்கு சில நிதியுதவிகள் கிடைப்பதோடு, இந்த கடன்கள்
மீதான வட்டி நெருக்கடியும் குறையும். மேலும் இந்த நிறுவனம் பிறருக்கு
செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளும் ரத்தாகும்.இப்போது சுமார் ரூ. 5,400
கோடியளவுக்கு கடன் நெருக்கடியில் இந்த நிறுவனம் உள்ளது. திவால்
ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால், இந்த நிறுவனம் எச்சிஎல் இதுவரை செய்து தந்த
பணிகளுக்கான கட்டணமான ரூ. 23 கோடியைக் கூட தருமா என்பது
சந்தேகமாகியுள்ளது.அதே போல விப்ரோ நிறுவனத்துக்கும் சுமார் ரூ. 5 கோடியை
இந்த நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது. அதுவும் வருமா என்பது
தெரியவில்லை.அமெரிக்க நீதிமன்றத்தில் சாப்டர் 11வது பிரிவின் கீழ் திவால்
ஆகிவிட்டதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் அதன் 464.4
மில்லியன் டாலர் அளவுக்கான கடன்கள் பங்குகளாக மாற்றப்பட்டுவிடும்.
இதன்மூலம் அதன் கடன் அளவு 70 மில்லியன் டாலர் அளவாகக் குறையும். இதன்மூலம் 4
மாதங்களில் கடன்களில் இருந்து வெளியே வந்து நிறுவனமும் தப்பிவிட
வாய்ப்புண்டு.ஆனால், நிலைமை மோசமாகி சாப்டர் 7வது பிரிவின் கீழ் திவால்
நோட்டீஸை இந்த நிறுவனம் தந்துவிட்டால், யாருக்கும் எந்தப் பணத்தையும் இந்த
நிறுவனம் செட்டில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படிப்பட்ட
நிலையில் எச்சிஎல், விப்ரோவுக்கு தர வேண்டிய பணத்தையும் தர வேண்டியதில்லை.
பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரை கடுங்குற்றவாளிகளாக கருதி சிறையில் அடைக்க உத்தரவு
சேலம்: தமிழகத்தில், பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரை,
கடுங்குற்றவாளிகளாக கருதி, அவர்களை மத்திய சிறையில் அடைக்க, போலீஸாருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி மாணவி ஒருவர், பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசும், கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. சில மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போல், தனியாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனை ஏற்படுத்தி வருகின்றன.
பெண்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப்படி, வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்கார முயற்சி, கற்பழிப்பு மற்றும் கொலை, கடத்தல், வன்முறை, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், 21 வயதுக்குட்பட்ட பெண்ணை விலைக்கு வாங்குதல் அல்லது விற்றல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி
ஐதராபாத்தின்
தில்சுக்நகர் பகுதியில் திரையரங்கம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பரபரப்பான
வர்த்தக பகுதியில் நிகழ்ந்த இரு வேறு தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் வரை
பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 20க்கும் மேற்பட்டோர் காயம்
அடைந்துள்ளனர்.ல்சுக் நகர் பகுதியில் நிகழ்ந்த குண்டு
வெடிப்பில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர்
ஆர்.கே.சிங் கூறியுள்ளார். ஆனால், போலீஸார் கூற்றுப்படி, 15 பேர்
பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் நெருக்கமுள்ள சந்தை, பேருந்து நிலையம், திரையரங்கு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமை, 3 குண்டுகள் வெடித்ததாகக் கூறியுள்ளது. 2
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த இடம் தெரியவந்துள்ளது. மூன்றாவது குண்டு
வெடித்த இடம் சரியாக அடையாளம் காணப்படவில்லை. போலீஸாரின் தகவல்
படி, முதல் குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்ததாம்.
இரண்டாவது குண்டு ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று
கூறப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் திரையரங்கத்தின் அருகே மாலை 7 மணி அளவில் குண்டு வெடித்துள்ளது.
வியாழன், 21 பிப்ரவரி, 2013
ஹரிதாஸ் நிச்சயம் பாருங்கள் பாராட்டிய வேண்டிய தரத்தில்
;நினைத்தாலே
இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலனிடமிருந்து
இப்படியொரு படமா? கோடம்பாக்கத்தின் சமீபத்திய ஆச்சரியம் இது.நாளை
ஹரிதாஸ் ரிலீஸ். படம் நன்றாக இருக்கிறது, பத்திரிகைகள் தூக்கி வைத்து
கொண்டாடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சென்ற ஞாயிறு படம்
பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. ஒரு வார்த்தையில் சொன்னால்
சூப்பர்.கிஷோர்
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு பாட்டியின்
அரவணைப்பில் இருக்கும் அவரது மகனை அவரே பார்த்துக் கொள்ளும் சூழல்
வருகிறது. மகனின் தேவைகளை புரிந்து கொள்ள முடியாமல் அவன் மீது பாசத்தை
கொட்டும் கதை ஒருபுறம். இதில் நல்ல உள்ளம் கொண்ட டீச்சராக சினேகா
வருகிறார். இன்னொருபுறம் தொழில் நிமித்தமான பிரச்சனைகள். இந்த இரண்டையும்
பேலன்ஸ் செய்திருக்கும் திரைக்கதை. வெங்கடேஷ் வசனம் எழுதியுள்ளார்.இந்த
வருடத்தின் முதல் கதைரீதியான விஸ்வரூபம் என ஹரிதாஸை சொல்லலாம். கிஷோரின்
மகனாக சிறுவன் பிருத்விராஜ் நடித்துள்ளார். காமெடிக்கு சூரி.விஜய்
ஆண்டனி இசை. ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் இடது வலது எல்லாமும். பிரதீப்
ராவத் வில்லனாக நடித்துள்ளார். சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கும்
இப்படம் அனைவரும் பார்த்து பாராட்டிய வேண்டிய தரத்தில் வெளிவந்துள்ளது.
திரையரங்கில் நிச்சயம் பாருங்கள்.
Ashok Leyland Luxura Magical சொகுசுப் பேருந்து
தடை காரணமாக விஸ்வரூபம் 150 கோடி வசூல் கோட்டை தாண்டிவிட்டது
எந்த மெசேஜ் மக்கள் மத்தியில் போகக்கூடாது என்று தடை கோரினார்களோ, அந்த
மெசேஜ், சும்மா விட்டால் போயிருக்கக்கூடிய மக்களைவிட பல மடங்கு மக்களிடம்
போய் சேர்ந்திருக்கிறது. என்ன கொடுமை சார் இது!
விஸ்வரூபம் படம் கமல் எதிர்பார்த்த மேக்சிமம் வசூலையும் கடந்து வாரிக் கொட்டி கொண்டு இருக்கிறது. சுமார் 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் சூப்பர்-ஹிட் ஆக வேண்டும் என்றால், 150 கோடி வசூல் கிடைக்க வேண்டும் என்று கமல் தமது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். விஸ்வரூபம் படம் அந்த கோட்டை தாண்டிவிட்டது. இன்னமும் தியேட்டர்களில் கணிசமாக கூட்டத்துடன் ஓடிக்கொண்டு உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளிலும் தொடர்ந்து விஸ்வரூபம் வசூலில் சக்கை போடுகிறது. மலேசியாவில் தற்போதுதான் தடை விலக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது.< தமிழகத்தில் போடப்பட்ட தடை காரணமாக, அருகில் உள்ள மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல். பிற மாநில வசூலில் தமிழக ரசிகர்கள் அங்கு சென்று பார்த்ததும் அடக்கம். கனடா, இங்கிலாந்து, அமெரிக்காவில் 4-வது வாரத்தை கடந்தும் இன்னமும் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படவில்லை. தமிழகத்தில், சமீபத்தில் எந்தப் படமும் ஓடாத ஓட்டம் இது. காரணம், நியூ ஈடியன்ஸ், மற்றும் ரிப்பீட்டட் ஆடியன்ஸ். கமல் படம் பார்க்காத, அல்லது தியேட்டர் பக்கமே போகாத பலரையும் படம் பார்க்க வைத்திருக்கிறது, படத்துக்கு போடப்பட்ட தடை. அதைவிட, ‘ஆர்வக்கோளாறு’ ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்த்து… அதில் என்ன காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை பார்க்க டி.வி.டி. வாங்கிப் பார்த்து… அதை எப்படி கட் பண்ணியிருக்கிறார்கள் என்று டபுள் செக் பண்ண மீண்டும் ஒரு தடவை தியேட்டரில் பார்த்து… பிய்த்துக்கொண்டு ஓடுகிறது படம்! எந்த மெசேஜ் மக்கள் மத்தியில் போகக்கூடாது என்று தடை கோரினார்களோ, அந்த மெசேஜ், சும்மா விட்டால் போயிருக்கக்கூடிய மக்களைவிட பல மடங்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. என்ன கொடுமை சார் இது! தடைக்கு ஆதரவு கேட்டீங்க.. தடை கிடைத்தது! காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கேட்டீங்க.. வெட்டு கிடைத்தது!! இவ்வளவும் கேட்டீங்களே.. தடை செய்தால் என்னாகும் என்று யாரிடமாவது அட்வைஸ் கேட்டீங்களா?< சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் வசூல் 120 கோடியை எட்டிவிட்டது என்பதை கமல் ஒப்புக்கொண்டிருந்தார். இன்றைய நிலையில், 150 கோடி என்ற கோட்டை கடந்துவிட்டது. 150 கோடி வரை வந்தாலே சூப்பர் ஹிட் லாபம். அதற்குமேல் வருவது, பம்பர் பரிசு! பெரு வெற்றிக்கு உதவிய 24 அமைப்புகளுக்கும் தலா 1 கோடி, தமிழக அரசுக்கு 2 கோடி நல்லெண்ண அடிப்படையில் கொடுத்தால்கூட, இது செம லாபம்! viruviruppu.com

நடிகையாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது.
சென்னை, கருத்துச் சுதந்திரம்
வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது
வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர்
கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும்
வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர
புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.
ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி
என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப்
பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும்
எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று
சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம்
சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?
மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு?
1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில்
இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக
இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப்
போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி,
பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.
இருவரின் உடல் களையும் அதிகாரிகள்
சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின்
காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து,
வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப்
பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை
நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை
ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே
தெரியப் போகிறது?
Jeyamohan :கடல்..முதற்சவால் திரைக்கதை சரியான விகிதத்தில் அமைவது
அந்தக் கலவை கடல் படத்தில் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இம்மாதிரி முயற்சிகளை ஆத்மார்த்தமாக மேற்கொள்ளவே முடியும், அவை அமைந்துவருவது நூற்றுக்கணக்கான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. கடைசியாக எஞ்சுவது என்பது பெரும்பாலும் ஒரு தற்செயலின் விளைவுதான்.
அதில் முதற்சவால் திரைக்கதை சரியான விகிதத்தில் அமைவது. எல்லாவற்றுக்கும் அதற்கான பங்கை அளித்து அதேசமயம் வேகத்தை நிலைநிறுத்துவது. திரைக்கதையை அமைக்கும்போது அதை அமைத்தாலும்கூடப் படத்தை எடுக்கும்போதும், கடைசியில் தொகுக்கும்போதும் அந்த விகிதாச்சாரம் குலைய எல்லா வாய்ப்பும் திரைப்படம் என்ற ஊடகத்தில் உள்ளது. திரைப்படம் பற்றித் தெரிந்தவர்களுக்கு அதைப்புரிந்துகொள்வதில் சிக்கலிருக்காது.
கடல் அந்த விகிதாச்சாரத்தை இடைவேளை வரை கச்சிதமாக கொண்டுவந்து நிறுத்தியது. இடைவேளையில் அரங்கில் எழுந்த கைதட்டல் அதற்குச் சான்று. இடைவேளைக்கு மேல் படம் வணிகக்கேளிக்கைப்படத்துக்கான தேவைகளை விட்டு விலகிச்சென்றது. அந்த விகிதாச்சாரம் குலைந்தது. இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக அமைந்ததனாலேயே இடைவேளைக்குப்பின் படம் பொதுவான திரை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
அப்படி நிகழ்ந்ததன் காரணம் இயக்குநர் படத்தின் தீவிரமான, நுட்பமான பகுதிகளில் அதிகமாக ஈடுபட்டு அதன் வணிகக்கேளிக்கை அம்சத்தை விட்டு விலகியதுதான்.
Titanic மூழ்கியபோது இசை கலைஞர் வாசித்த வயலின் ஏலம்
லண்டன்: கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட
வயலின் இசைக்கருவி ஏலத்துக்கு வருகிறது. இங்கிலாந்தின் சவுத்ஆம்டன்
துறைமுகத்தில் இருந்து மிகப் பெரிய சொகுசு கப்பல் ‘டைட்டானிக்’ கடந்த
1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நியூயார்க் புறப்பட்டது. அட்லான்டிக் கடலில்
சென்று கொண்டிருந்த போது ஏப்ரல் 15ம் தேதி பனிப்பாறையில் மோதி கப்பல்
இரண்டாக உடைந்து மூழ்கியது. இதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாயினர்.
உலகையே உலுக்கிய இந்த விபத்து, இன்றளவும் பேசப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன்
இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ஹாலிவுட்
திரைப்படம் ‘டைட்டானிக்’. இதில் ஒரு காட்சி வரும். கப்பல் மூழ்கிக்
கொண்டிருக்கும் நேரத்தில் பயணிகள் எல்லாரும் பதற்றத்துடனும் பரபரப்பாகவும்
உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்க.. எதை பற்றியும் கவலைப்படாமல் கப்பலின்
வாத்திய கோஷ்டி தொடர்ந்து வயலின் உள்ளிட்ட கருவிகளை இசைத்துக்
கொண்டிருப்பார்கள்.
நகைச்சுவை இழையோடும் இந்த சோக காட்சி
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இது வெறும் காட்சி அல்ல.
உண்மையிலேயே, டைட்டானிக் கப்பல் மூழ்கிய நேரத்தில் இசை குழுவினர் கருவிகளை
வாசித்தனர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி கொண்டிருந்த போது, இசை
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வாலஸ் ஹர்ட்லி என்ற பேண்ட் மாஸ்டர்
தலைமையில் 8 இசை கலைஞர்கள் பல்வேறு இசை கருவிகளை வாசித்தனர். கப்பல்
மூழ்கும் நேரத்திலும் சில பயணிகள் அதை ரசித்தனர். கப்பல் மூழ்கி அவர்களும்
பலியாயினர். டைட்டானிக் (1997) படத்தில் வாலஸ் ஹர்ட்லி கதாபாத்திரத்தில்
ஜோனாதன் இவான்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடித்தார். இவர் வயலின் கலைஞர் என்பது
குறிப்பிடத்தக்கது. அதன்பின், கப்பலில் இருந்து பல பொருட்கள் மீட்டு ஏலம்
விடப்பட்டது. இந்நிலையில், பேண்ட் மாஸ்டர் வாலசின் வயலின் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டது.
பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்
மும்பை :மகாராஷ்டிராவில், வறுமையால் பாதிக்கப்பட்டு, பசியால் வீட்டை விட்டு
வெளியேறிய, மூன்று சகோதரிகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ள
கொடூரம் நிகழ்ந்துள்ளது.நாக்பூர் அருகே உள்ள பாந்தாரா
மாவட்டத்தின், லக்னி என்ற கிராமத்தை சேர்ந்த, கணவனை இழந்த பெண்ணுக்கு, 11, 9
மற்றும் 5 வயதில், பெண் குழந்தைகள் இருந்தன.போதுமான வருமானம் இல்லாததால்,
வீடுகளில் வேலை பார்த்து வந்த அந்த பெண், கடந்த, 14ம் தேதி வேலைக்கு சென்று
விட்டார். தாய் வர தாமதம் ஆனதால், பசியால் துடித்த குழந்தைகள், வீட்டை
விட்டு வெளியேறி, சாலையில் சென்று கொண்டிருந்தன.அங்கிருந்த, "தாபா'
எனப்படும், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டலில், சாப்பாடு கேட்டுள்ளனர்.
அங்கிருந்த சிலர், சிறுமியர் என்றும் பாராமல், அவர்களை பாலியல் பலாத்காரம்
செய்ததுடன், கொன்று, அருகில் இருந்த கிணற்றில் வீசி எறிந்துள்ளனர்.கிணற்றில்
இருந்து துர்நாற்றம் வரவே, கிராமத்தினர் சென்று பார்த்த போது, மூன்று
சிறுமியர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீஸ் நடத்திய விசாரணையில்,
"வறுமை காரணமாக சிறுமியர் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்' எனக் கூறி,
கொலை வழக்கை, தற்கொலை வழக்கமாக மாற்ற பார்த்துள்ளனர்.சிறுமியர் பசியால்
அலைந்ததை அறிந்த கிராமத்தினர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு, சிறுமியர்
உடலை பரிசோதனை செய்ய வைத்தனர். பரிசோதனையில், சிறுமியர் மூவரும் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மது பாட்டில்கள், சிறுமியரின் செருப்பு, கிழிந்த உடைகளை கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும் .... இன்னும் எத்தனை காலம் இது போன்ற
செய்திகளைப் படிக்க வேண்டி வருமோ ...
புதன், 20 பிப்ரவரி, 2013
Kaveri தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல : வாசன் பேட்டி
அரசிதழில் காவிரி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது, தனிப்பட்ட கட்சிக்கு
கிடைத்த வெற்றி அல்ல என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
இது குறித்து ஜி.கே.வாசன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியாகி இருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது கர்நாடக அரசு, சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர், இரு மாநில முதல்வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடக முதல்வரை வற்புறுத்தியதின் காரணமாக இந்த கட்டளை நிறைவேறி உள்ளது.

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட் தடை நீட்டிப்பு : விசாரணை 6 மாதம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட விதிக்கப்பட்ட தடையை மறு
உத்தரவு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. சேலம்
மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பாலாறு அருகே
கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அதிரடிப்படை போலீசார் சந்தன கடத்தல்
வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த கண்ணி வெடி
தாக்குதலில் போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்பட 22 பேர் பலியாயினர்.
இதுதொடர்பான வழக்கு, மைசூர் தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 127 பேரில் 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
முக்கிய
குற்றவாளிகளான வீரப்பன் கூட்டாளிகள் பிலேந்திரன், மீசை மாதையன்,
ஞானப்பிரகாசம், சைமன் ஆகியோருக்கு 2001ல் ஆயுள் தண்டனை விதித்து மைசூர் தடா
கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆயுள் தண்டனை குறைவானது என
கூறி, 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 2004ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் தாக்கல் செய்திருந்த கருணை
மனுவை கடந்த 13ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். தூக்கு
தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்தனர்.
ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!
சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக்
கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை
வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம்
நாத்திகர்களா?
19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்”
என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை
சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு
தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று
நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!
முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.
பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். vinavu.com

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.
இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.
ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர். vinavu,com

காவிரி: தமிழகத்துக்கு நல்ல சேதி!
டபாய்த்து வந்த மத்திய அரசு இன்று இறங்கி வந்தது!
Viruvirupu
தமிழகம் பலகாலமாக விடுத்து வந்த கோரிக்கை இது. ஆனால் அதை மத்திய அரசு காதில் வாங்கி கொள்ளவே இல்லை. தொடர்ந்து கர்நாடகத்திற்கு சாதகமாக, அரசிதழில் வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியடப்பட்டுள்ளதால், டெக்னிகலாக, இனிமேல் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக அரசு கூற முடியாது. எப்பாடுபட்டாவது தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும்.
இந்த தீர்ப்பை மத்திய அரசு தொடர்ந்து அரசிதழில் வெளியிடாமல் டபாய்த்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட், இன்றைக்கு முன் அரசிதழில் வெளியிட கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது. அப்படியிருந்தும், நேற்று பகல் முழுவதும் இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது.
நேற்று இரவு நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது. பிரதமரின் அனுமதியைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து அரசிதழில் தீர்ப்பு வெளியானது. இறுதியில், சுப்ரீம் கோர்ட்டுக்கு பணிந்தது மத்திய அரசு!
இனிமேல் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது. நதி நீர்ப் பங்கீடு தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும், இதற்குரிய வாரியம் மற்றும் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவைதான் கவனிக்கும்
ஸ்ரீலட்சுமி ஜெகதி ஸ்ரீகுமாரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம் ஐயர் இன் பாகிஸ்தான்
சென்னை: காமெடி நடிகரின் ரகசிய காதலியின் மகள் நடிகையாக
அறிமுகமாகிறார். மலையாளத்தில் பிரபல காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். கடந்த
2 ஆண்டுக்கு முன் ஷூட்டிங்கில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்தில்
சிக்கினார். இதில் படுகாயம் அடைந்து நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான்
இளவயதில் தான் துணை நடிகை ஒருவரை குருவாயூர் கோயிலில் வைத்து ரகசிய
திருமணம் செய்து கொண்ட விஷயத்தை மனைவி மற்றும் குடும்பத்தாரிடம்
தெரிவித்தார். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு சொல்லவில்லை. ரகசிய
மனைவிக்கு ஸ்ரீலட்சுமி என்ற மகள் உள்ளார். மகளை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று
ஸ்ரீகுமார் கனவு கண்டார்.
இந்நிலையில் ஸ்ரீலட்சுமிக்கு ஹீரோயினாக
நடிக்க வாய்ப்பு வந்தது. ‘ஐயர் இன் பாகிஸ்தான் என்ற இப்படத்தை புதுமுக
இயக்குனர் பாசால் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீலட்சுமி தற்போது திருவனந்தபுரம்
கிறிஸ்ட் நகர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர்
கூறும்போது,‘எனது தந்தை நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டார்.
இதற்கிடையில் நடிக்க வாய்ப்பு வந்தது. மூத்த நடிகை சுகுமாரிக்கு என்னை
சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்தான் தயாரிப்பு நிர்வாகி ஒருவரிடம்
தெரிவித்திருக்கிறார். பின்னர் இயக்குனருக்கு தகவல் தெரிந்து என்னை
ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்தார். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.
நடிக்க வந்தாலும் படிப்பை நிறுத்தமாட்டேன் என்றார்.
பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதன் காரணம்
tamilpaper.net பள்ளி பயின்ற காலத்தில் எல்லாப்
பாடப் புத்தகத்தின் அட்டையிலும் இந்திய வரைபடத்தில் வெள்ளை புடவை சுற்றிய
ஒரு பெண் கையில் கொடியுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சி யளிப்பாள்.
அவளை நாம் இந்தியத்தாய் என்போம். நிலத்தை உழுவதற்கு முன் பூமி மாதாவை
வணங்குவோம். பூஜையறையில், கோயில்களில் விதவிதமான பெண் தெய்வங்களை
வழிபடுவோம். பெண் கடவுளுக்கு நிகரானவள் என்று நமக்கு எப்போதும்
போதிக்கப்படுகின்றது. இந்த வழக்கம் உலகில் வேறெங்கும் இல்லையென்றே
எண்ணுகிறேன்.(இயேசுநாதரின் தாயாக இருப்பதால் மட்டும் மேரி மாதாவுக்குச்
சிறப்பு).
ஐரோப்பாவிலும்,அமரிக்காவிலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகள்
அவர்கள் தாய் தந்தையுடன் வசிப்பது இல்லை. வேலை கிடைத்தவுடன் தனியாகத்தான்
இருப்பார்கள். திருமணம் செய்து கொள்வார்கள். சொந்த வீட்டுக்கே
விருந்தாளிகள் போலதான் வருவார்கள். ஆனால் இந்தியர்களான நாம் அப்படி
வளர்வதில்லை.அம்மா என்பவள் தெய்வம், அவள் சொல்லே வேதம் என்று அவள்
பாதங்களிலே கிடப்போம் அல்லது அப்படி சொல்வதில் பெருமை கொள்வோம். மேலும்
அக்காவை இன்னொரு தாயாகவும் தங்கையை பிள்ளையாகவு ம் பாவிப்போம்.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
தமிழகத்தில் விரைவில், ‘திகைக்க வைக்கும்’ மின் கட்டண எகிறல்! சாம்பிள் பார்க்க வாங்க!!
Viruvirupu
அது மட்டுமல்ல, மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்கவும் கட்டணம் வரப் போகிறது. இதற்கு, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
இதோ அடுத்த ஆக்ஷன் பிளான் ரெடி!
புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது… இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.
கட்டண எகிறல் எந்த அளவுக்கு இருக்கும்?
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண எகிறல் விபரங்களை பாருங்கள்:
• ஒரு முனை மின் இணைப்பு பெற: ரூ.900 (தற்போதைய கட்டணம், ரூ.250)
• மும்முனை இணைப்புக்கான கட்டணம்: ரூ.1,600 (தற்போதைய கட்டணம், ரூ500)
• வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம்: ரூ.10,000 (தற்போதைய கட்டணம், ரூ.3,000)
• புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)
• மின் மீட்டர்களுக்கு மாதாந்திர வாடகை: வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50.
• மீட்டர்களுக்கான டிபாசிட்: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.
• மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க: ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10, குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250.
• வெள்ளை அட்டையின் விலை: ரூ.10.
• மின்சார பாவனையில், ஒரேயொரு விஷயத்தில் கட்டணம் அறவிடப்பட மாட்டாது. உங்கள் வீட்டு சுவிட்சை நீங்களே ‘ஆன்’ செய்தால்… சர்விஸ் சார்ஜ் இலவசம்!
Deepika Padukon :எழுதப்பட்டிருக்கும கெமிஸ்ட்ரி பிலிமிற்கு வரவேண்டுமென்றால் ஹீரோவுடன்
எந்த ஹீரோவிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்கள்? நிறைய
ஹீரோக்களுடன் நடிக்கிறேன். ஒரு சிலருடன் நடிக்கும்போது கெமிஸ்ட்ரி நன்றாக
ஒர்க் அவுட் ஆகும். பேப்பரில் எழுதப்பட்டிருக்கும கெமிஸ்ட்ரி பிலிமிற்கு
வரவேண்டுமென்றால் ஹீரோவுடன் சகஜமாக பழகும் வாய்ப்பு அமைந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் ஹீரோஹீரோயின் கெமிஸ்ட்ரி பேப்பரில்தான் இருக்கும்.
திரையில் தெரியாது. அதிர்ஷ்டவசமாக எனது பல படங்களில் ஹீரோவுடன் ஜோடி நன்றாக
ஒர்க் அவுட் ஆகிறது. ‘ரன்பீருடன்தான் நெருக்கமாக நடிக்கிறீர்களே?
என்கிறார்கள். அவருடன் நடிக்கும்போதும், சைப்புடன் நடிக்கும்போதும் எங்கள்
ஜோடி பேசப்படுகிறது என்றார்.
கோலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்காமல் ‘கோச்சடையான் பட ரிலீசுக்காக காத்திருக்கிறார் தீபிகா படுகோன். இதற்கிடையில் இந்தியில் ‘சென்னை எக்ஸ்பிரஸ், ‘ராம் லீலா உள்பட 4 படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் கூறும்போது, ‘இரண்டொரு நாள் ஷூட்டிங் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அது நடக்கவில்லை. எப்போது விடுமுறை கிடைக்கிறதோ அப்போது கிடைக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இப்போதைக்கு விடுமுறை எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதேசமயம் கைநிறைய படங்கள் இருக்கிறது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. .tamilmurasu.org

ஒரே நாளில் விசா! இங்கிலாந்து செல்லும் வணிகர்கள் மாணவர்களுக்கு
இங்கிலாந்து நாட்டில் தொழில் முதலீடுகளை
மேற்கொள்ளும் இந்திய வணிகர்களுக்கும் அங்கு மேற்படிப்பு படிக்க விரும்பும்
மாணவர்களுக்கும் உடனடியாக விசா வழங்குவதில் எவ்விதத் தடையும் மேற்கொள்ளப்
போவதில்லை. அவர்களுக்கு இங்கிலாந்து செல்ல ஒரே நாளில் விசா வழங்கப்படும்.>உலகத்திலேயே
இந்தியாவில்தான் அதிகளவில் விசாக்கள் வழங்கப்படுகின்றன. எனவே,
இங்கிலாந்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்திய வணிகர்களுக்கும் மேற்படிப்பு
படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் உடனடியாக விசா வழங்க்ப்படும் என்று
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 18.02.2013 திங்கள்கிழமை அன்று
மும்பையில் அறிவித்தார் nakkheeran.in
திங்கள், 18 பிப்ரவரி, 2013
பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்க முடியாது
ஆண்களோடு பேசுவது, பழகுவது, தொடுவது, சிரிப்பது
இவையெல்லாம் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான்
பெண்ணடிமைத்தனம். இதனைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.
;திரு கோ இராமலிங்கம் B.Sc., B.L., வழக்கறிஞர், மாவட்ட அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், புதுக்கோட்டைநன்றியுரை
திரு அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லி மாநகரில் துணை மருத்துவ மாணவியை ஏழு பேர் கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு அவரை இரும்புத் தடியால் அடித்து துவைத்து குற்றுயிரும் கொலையிருமாக வீசியெறிந்து விட்டுப் போனது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவத்தையொட்டி டெல்லியில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு பாராளுமன்றம், நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றை முற்றுகையிட்டுப் பல நாட்கள் போராடினர். இந்தப் போராட்டம் இதுவரை பாலியல் வல்லுறவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கணிக்கப்பட்டது.
அசல் ரூ.20,000 – வட்டி ரூ 1,20,000 ! கந்து வட்டி
வினவு
வட்டிப் பணத்தை கேட்டு மிரட்டிய கருத்தம்மாளும், நோட்டு செல்வமும்
பணம் கிடைக்காத காரணத்தால் பெற்றோரின் கண் முன்னரே முத்துலட்சுமியை கடத்தி
சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி போலீசில் புகார் தந்தால், மகளை கொன்று
விடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு சின்னான் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள இ.நடுப்பட்டி காலனியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்துள்ளார். மூத்த மகன் தங்க பாண்டியின் திருமணத்திற்காக அதே பகுதியில் இருக்கும் கருத்தம்மாளிடம் ரூபாய்க்கு 5 பைசா வட்டி வீதத்தில் ரூ.20 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதற்கு வட்டியாக மாதா மாதம் ரூ 1,000 கட்டி வந்துள்ளார்.
மாயாவதி: நமது கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய
மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு
கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி
எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
நான்
இந்த நாட்டின் பிரதமராகி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி, சுதந்திர தின
உரையாற்ற வேண்டும். அதற்கேற்ப, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற
தேர்தலில் நமது கட்சிக்கு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடித்தரவேண்டும்.
சட்டசபை
தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் உங்களுக்கு லஞ்சம் கொடுத்து,
உங்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். நீங்கள் அவர்களின்
முயற்சிக்கு பலியாகாமல், விலைக்கு வாங்கும் பொருளாக மாறாமல், லஞ்சம்
கொடுப்பவர்களுக்கு விலை போகாமல், விழிப்புடன், உஷாராக இருக்க வேண்டும்.
எஸ்.சி,
எஸ்.டி.க்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம்
கொண்டு வர நாம் போராடி வருகிறோம். ஆனால், அந்த சட்டம் வரவிடாதபடி காங்கிரஸ்
கட்சியும், பா.ஜனதா கட்சியும் சதி செய்து செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ்
மற்றும் பா.ஜனதா கட்சிகளின் இந்த சதித்திட்டத்தை மக்களிடம்
எடுத்துச்சொல்லுங்கள். நமது
கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அந்த சட்டத்தை நிச்சயம்
நிறைவேற்றுவோம். அதற்காக நாம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று
மத்தியில் ஆட்சி அமைத்தாக வேண்டும். இந்த எண்ணம் நிறைவேற, பாராளுமன்ற
தேர்தலில் நாம் வெற்றிபெற, நீங்கள் முழு மூச்சுடன் உழைக்க வேண்டும்.
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியரசுத்தலைவரால்
கருணை மனு நிராகரிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் சார்பாக,
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.இவ்வழக்கு
விசாரணைக்கு போது, கர்நாடக அரசின் தரப்பில் வழக்குரைஞர்கள் யாரும்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மத்திய அரசின் சொலிசிகூட்டர் ஜெனரல் மட்டும்
ஆஜாராகியுள்ளார்.மனுதாக்கல்
செய்யப்பட்டவர்களின் தரப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும்
ஒன்பது ஆண்டுகளாக மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில்
உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் கடந்த இருபது வருடங்களாக தொடந்து
சிறையில் உள்ளனர். தவிர, அதில் இருவருக்கு வயது 60க்கும் மேல் ஆகிவிட்டது
என்று கூறியுள்ளனர்.>ஒன்பது
ஆண்டுகளாக அவர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் இருப்பதற்கு நாங்கள்
(ஜுடிசியல்) காரணமா? என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். இல்லை...
ஜனாதிபதியிடம் கருணை மனு நிலுவையில் இருந்தது என்று மனுதாரர்கள் தரப்பு
வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். அதற்க்கு,
எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு வழக்குரைஞர், இவர்கள் கொடும் குற்றம்
செய்துள்ளனர். இவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டக்கூடாது என்று
வாதிட்டுள்ளார்.இரு
தரப்பையும் கேட்ட நீதிபதிகள், வரும் புதன்கிழமை வரை, (20.2.2013) சைமன்,
மாதையன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரையும் தூக்கிலிட
இடைக்காலத்தடை விதித்துள்ளனர்.nakkheeran.in
குமுதம் அலுவலகம் முற்றுகை! வெளியே தி.மு.க.-வினர் கோஷம்!!
வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையில்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, மற்றும் அக்கட்சியின் பிரமுகர் நடிகை குஷ்பு
பற்றி வெளியான கட்டுரையை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தப் பத்திரிகை அலுவலகம், இன்று 2-வது நாளாக தி.மு.க.-வினரின்
முற்றுகைக்கு உள்ளானது.
சென்னையில் அமைந்துள்ள குமுதம் குழும நிறுவனத்தை 2-வது நாளாக சேகர் பாபு தலைமையில் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய தி.மு.க.-வினர் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நேற்றும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக தி.மு.க.வினரும், தி.க.வினரும் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட தி.மு.க.வினர் குவிந்ததில், 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கட்டுரை தொடர்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா, கட்சி ரீதியான போராட்டம் அறிவிப்பதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையை தி.மு.க.-வினர் யாரும் வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உட்பட பலர், பத்திரிகையில் வெளியான கட்டுரை விரசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக இணையத்தளங்களில் குஷ்புவிற்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கருணாநிதி, குஷ்பு ஆகியோரின் ரியாக்ஷனை கீழேயுள்ள லிங்குகளில் பார்க்கவும்

ஹெலிகாப்டர் ஊழல்: வந்தார் சுப்ரமணியம் சுவாமி! ஆவணம் எப்ப வரும் சாமியோவ்?
மேலே வெச்சிருக்கேன்.. வாங்கோ.. பேஷா காட்டலாம்!
டில்லி அரசியலை ஆட்டி வைத்துள்ள ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக நம்ம சுப்ரமணியம் சுவாமி அதிரடியாக ஏதாவது கூற வேண்டுமே… கூறிவிட்டார். இந்த ஊழலுக்கும், சோனியாகாந்தி குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி, “இந்த ஊழல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின் ஹெலிகாப்டரைதான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி, அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள்.
எல்லாமே கமிஷனுக்காகத்தான்.
இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.
இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது.
அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை. நேரு-காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.
சுவாமி இப்போதுதான், வார்ம்-அப் ஆகிறார். அடுத்து, நாலைந்து ஆதாரங்களை தூக்கி போடணுமே… எப்பங்க சுவாமி அது நடக்கும்? viruviruppu,com
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி: தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற போராட்டத்தில் குதிக்க வேண்டும்
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
பாலாறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நானும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கர்நாடக சிறையில் வாடினேன்.
பின்னர் நான் உள்பட பலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீசை மாதையன்,
ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து
விட்டது.
பாலாறு சம்பவத்தில் உயிர் தப்பிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் என்ற ஒருவர்
கொடுத்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் நானும் சில ஆண்டுகள் வீரப்பனுடன் இருந்தேன். ஆனால்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும், என் கணவருக்கும் எந்த தொடர்பும்
கிடையாது. அவர்கள் வீரப்பனை
பார்த்ததே இல்லை. அவர்கள் அப்பாவி மக்கள்.
எனவே அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
மயக்க ஊசி போட்டு பலாத்காரம் மாணவியை சீரழித்தவரின் வீட்டை நொறுக்கி, மறியல்
கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீடு உடைக்கப்பட்டது. குற்றவாளிகளை தூக்கில் போடக்கோரி மறியல் நடத்தினர். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 14 வயது மகள் 9ம் வகுப்பு மாணவி. இவரது பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்து விட்டதால், ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள அத்தை வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், சிறுமியை இவரது தாய்மாமன் கோ பாலகிருஷ்ணன் (60), கோ வை அரசு மருத்துவமனை யில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பாலசுந்தரம் (72), சுந்தராபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் கருப்பசாமி (50), கண்ணம்பா ளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கருப்பசாமி (52), ராமநாதபுரம் மருதூர் பகுதியை சேர்ந்த பெயிண்டரான 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்,,உலகின் மிக உயரமான ரயில்பாலம்
உலகின் மிக உயரமான ரயில்பாலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2016-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரெய்சி மாவட்டத்தில் உள்ள சீனாப் பாலத்தின் குறுக்கே பாராமுல்லா, ஸ்ரீநகரை இணைக்கும் பாலம் ரூ.20ஆயிரம் கோடி மதிப்பில் கட்டும் பணிகள் 2002-ம் ஆண்டு துவங்கின.
இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி தற்போது இந்த பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 2016-ம்ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
ஆடலாம் பாய்ஸ் சம்பவங்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்
இயக்குனர், நடனக்கலைஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டுள்ள ரெமோ இயக்கத்தில், சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரபுதேவா உட்பட பல நடனக் கலைஞர்களின் நடிப்பிலும், நடனத்திலும் வெளியான படம் ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ். இந்தியாவில் வெளியாகும் முதல் டான்ஸ் 3D திரைப்படம் என்ற பெயரோடு பலவித எதிர்பார்ப்புகளுடன் வெளியானது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்.புகழ்பெற்ற JCD என்ற நடனப் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் பிரபுதேவா. டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் JCD நடனப் பள்ளி போட்டியில் நடனமாடும் போது சொதப்பினாலும் முதல் பரிசை தட்டிச் சென்றுவிடும். இதனால் ஆச்சர்யமடைந்த பிரபுதேவா, JCD நடனப்பள்ளி உரிமையாளரிடம் ‘சரியாக ஆடாத நமக்கு எப்படி பரிசு
’ மக்கள் விருப்பம் எதுவோ அதை நிறைவேத்துனா தான் நமக்கு பணம் கிடைக்கும். பணம் தான் எல்லாத்துக்கும் முக்கியம்’ என்று உரிமையாளர் சொல்ல, பணத்திற்காக நடனத்தை விற்க மனமில்லாத பிரபுதேவா அந்த நடனப் பள்ளியிலிருந்து விலகிவிடுகிறார்.தனது நண்பனுடன் தங்கியிருக்கும் பிரபுதேவா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நடனத்தில் ஆர்வமுள்ள அற்புதமாக நடனமாடும் சில இளைஞர்களை சந்திப்பார். நடனத்தில் ஆர்வமும், கடும் உழைப்பும் இருக்கும் அந்த இளைஞர்கள் JCD நடனப் பள்ளியில் சேர்ந்து பெரிய நடனக் கலைஞராக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதையறிந்து பிரபுதேவா இலவசமாக அவர்களுக்கு நடனம் கற்றுத்தர முன்வருவார்.
கற்பழித்த 4 பேரும் என்னை கொல்வதாக மிரட்டினார்கள்: 9-ம் வகுப்பு மாணவி
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ரேவதி. (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் தனது தாய்மாமா கோபால
கிருஷ்ணன் மற்றும் 4 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர்
விசுவநாதன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
மேற்கொண்டனர். கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான 72 வயது
பாலசுந்தரம், சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரான ராகம் கருப்பசாமி, இன்னொரு
கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின்
காமப்பிடியில் இருந்து தப்புவதற்காக 17 வயது வாலிபர் ஒரு வரை ரேவதி
காதலிக்க தொடங்கினார். அவரும் ரேவதியை தொட்டுப்பாக்க ஆசைப்பட்டு கம்பி
எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் காதலுடன்
சென்றுவிட்டால் ரேவதியை தனது காம இச்சைக்கு இஷ்டம் போல பயன்படுத்த முடியாது
என கருதி கோபால கிருஷ்ணன் உள்பட 4 பேரும் அவரை கொன்று விடுவதாக
மிரட்டியுள்ளனர்
இது பற்றி ரேவதி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-