சனி, 23 பிப்ரவரி, 2013

27 லட்சத்தில் திருப்பதி உருவம் பதித்த Limited Edition கைக்கடிகாரம்

ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையானின் தங்க உருவம் பதித்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை சுவிட்சர்லாந்து நாட்டு கடிகார தயாரிப்பாளரான சென்ச்சுரி டைம்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான சென்ச்சுரி டைம்ஸ் திருப்பதி ஏழுமலையானின் உருவம் பதித்த கைக்கடிரகாரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த கைக்கடிகாரத்தில் ஏழுமலையானின் உருவம் தங்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.இது ஒரு லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரம்(அதாவது ஒரு சில கைக்கடிகாரங்களே செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்). மொத்தம் 333 கைக்கடிகாரங்களே செய்யப்பட்டுள்ளன. இந்த கைக்கடிகார விற்பனையில் வரும் பணம் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஊனமுற்றோருக்கான மருத்துவமனையான பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜரி, ரிசர்ச் மற்றும் ரிஹெபிலிடேஷன் ஆஃப் தி டிஸ்ஏபில்டுக்கு செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக