செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

Deepika Padukon :எழுதப்பட்டிருக்கும கெமிஸ்ட்ரி பிலிமிற்கு வரவேண்டுமென்றால் ஹீரோவுடன்

எந்த ஹீரோவிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்கள்? நிறைய ஹீரோக்களுடன் நடிக்கிறேன். ஒரு சிலருடன் நடிக்கும்போது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். பேப்பரில் எழுதப்பட்டிருக்கும கெமிஸ்ட்ரி பிலிமிற்கு வரவேண்டுமென்றால் ஹீரோவுடன் சகஜமாக பழகும் வாய்ப்பு அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஹீரோஹீரோயின் கெமிஸ்ட்ரி பேப்பரில்தான் இருக்கும். திரையில் தெரியாது. அதிர்ஷ்டவசமாக எனது பல படங்களில் ஹீரோவுடன் ஜோடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. ‘ரன்பீருடன்தான் நெருக்கமாக நடிக்கிறீர்களே? என்கிறார்கள். அவருடன் நடிக்கும்போதும், சைப்புடன் நடிக்கும்போதும் எங்கள் ஜோடி பேசப்படுகிறது என்றார்.    
கோலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்காமல் ‘கோச்சடையான் பட ரிலீசுக்காக காத்திருக்கிறார் தீபிகா படுகோன். இதற்கிடையில் இந்தியில் ‘சென்னை எக்ஸ்பிரஸ், ‘ராம் லீலா உள்பட 4 படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் கூறும்போது, ‘இரண்டொரு நாள் ஷூட்டிங் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அது நடக்கவில்லை. எப்போது விடுமுறை கிடைக்கிறதோ அப்போது கிடைக்கட்டும் என்று  விட்டுவிட்டேன். இப்போதைக்கு விடுமுறை எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதேசமயம் கைநிறைய படங்கள் இருக்கிறது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக