திங்கள், 18 பிப்ரவரி, 2013

மயக்க ஊசி போட்டு பலாத்காரம் மாணவியை சீரழித்தவரின் வீட்டை நொறுக்கி, மறியல்



 கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீடு உடைக்கப்பட்டது. குற்றவாளிகளை தூக்கில் போடக்கோரி மறியல் நடத்தினர்.  கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 14 வயது மகள் 9ம் வகுப்பு மாணவி. இவரது பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்து விட்டதால், ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள அத்தை வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், சிறுமியை இவரது தாய்மாமன் கோ பாலகிருஷ்ணன் (60), கோ வை அரசு மருத்துவமனை யில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பாலசுந்தரம் (72), சுந்தராபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் கருப்பசாமி (50), கண்ணம்பா ளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கருப்பசாமி (52), ராமநாதபுரம் மருதூர் பகுதியை சேர்ந்த பெயிண்டரான 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.


இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், கிழக்கு பகுதி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, 5 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில், பெயிண்டர் மைனர் என்பதால் அவர் மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். இச்செய்தி ராமநாதபுரம் பகுதியில் நேற்று பரவியது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவரான சவுண்ட் சர்வீஸ் கருப்பசாமியின் வீடு முன்பு நேற்று திரண்டனர். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்பிடித்தார்.

ஆத்திரத்தில் இருந்த மக்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்கினர். வீட்டை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தள்ளினர். 5 பேரையும் தூக்கில் போடக்கோரி திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் போலீசார் சமாதான பேச்சு நடத்தினர். சட்டப் படி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல், கோவை ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 21 பேரை கைது போலீசார் செய்தனர்.

எம்எல்ஏவை திருப்பியனுப்பினர்

அப்போது கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சேலஞ்சர் துரை அங்கு வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்குவதாகவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதற்கு மக்கள், ‘‘உங்கள் சமாதானமும், நிவாரணமும் எங்களுக்கு தேவையில்லை. முதலில் இடத்தை காலி செய்யுங்கள்,‘‘ என கூறி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பணம் கொடுத்தோம்; அனுபவித்தோம்

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘'கோபாலகிருஷ்ணன் ஒரு புரோக்கராக செயல்பட்டார். 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுத்தோம். அந்த மாணவியை அழைத்து வந்தார். நாங்கள் பலமுறை சுகம் அனுபவித்தோம்‘‘ என்றனர். தாய்மாமன் கோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில், ''‘எனது குடும்பமும் சிரமத்தில் உள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவியை அவர்களுக்கு விருந்தாக்கினேன்'‘ எனக்கூறியுள்ளார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக