ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கற்பழித்த 4 பேரும் என்னை கொல்வதாக மிரட்டினார்கள்: 9-ம் வகுப்பு மாணவி

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ரேவதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் தனது தாய்மாமா கோபால கிருஷ்ணன் மற்றும் 4 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் விசுவநாதன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான 72 வயது பாலசுந்தரம், சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரான ராகம் கருப்பசாமி, இன்னொரு கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் காமப்பிடியில் இருந்து தப்புவதற்காக 17 வயது வாலிபர் ஒரு வரை ரேவதி காதலிக்க தொடங்கினார். அவரும் ரேவதியை தொட்டுப்பாக்க ஆசைப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் காதலுடன் சென்றுவிட்டால் ரேவதியை தனது காம இச்சைக்கு இஷ்டம் போல பயன்படுத்த முடியாது என கருதி கோபால கிருஷ்ணன் உள்பட 4 பேரும் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர் இது பற்றி ரேவதி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தந்தை ஊனமுற்றவர், தாய் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இதனால் எனது தாய்மாமா கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். அவர்தான் என்னை வளர்ந்து படிக்க வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாமா கோபாலகிருஷ்ணன், பாலசுந்தரம் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் நான் மயக்கமாகி விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மயக்கம் தெளிந்து நான் கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. தனி அறையில் நான் இருந்தேன். அப்போதுதான் நான் கற்பழிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். மயக்க ஊசி போட்டு எனது கற்பு சூறையாடப்பட்டதை அறிந்து கதறி அழுதேன். அப்போது கோபாலகிருஷ்ணன், பாலசுந்தரம் ஆகியோர் வந்து இதை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர். சில நாட்கள் கழித்து பொள்ளாச்சியில் கருப்பசாமி என்பவரின் தென்னந்தோப்புக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்தும் கோபாலகிருஷ்ணனும், கருப்பசாமியும் என்னை மிரட்டி கற்பழித்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து ராகம் கருப்பசாமி என்பவரிடம் மாமா கோபாலகிருஷ்ணன் என்னை ஒப்படைத்தார். அவரும் என்னிடம் பாலியல் தொந்தரவு செய்து கற்பை சூறையாடினார். இப்படி எனது மாமாவே தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியதால் அவர்களின் பிடியில் இருந்து நான் விடுபட நினைத்தேன். இந்நிலையில்தான் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருடன் எனக்கு காதல் மலர்ந்தது. எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை அவரிடம் சொல்லி அழுதேன். 2 பேரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தோம். இதற்காக அந்த வாலிபருடன் கடந்த வாரம் சத்தியமங்கலத்துக்கு சென்றேன். ஆனால் மாமா கோபாலகிருஷ்ணன் இதை கண்டுப்பிடித்து என்னை இழுத்து வந்துவிட்டார். வாலிபருடன் பழகினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதன் பிறகே நான் போலீசில் புகார் செய்தேன இவ்வாறு ரேவதி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து மைனர் பெண்ணை கும்பலாக சேர்ந்து கற்பழித்தல், கொலை மிரட்டல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரேவதியுடன் பழகிய வாலிபர் மைனர் என்ற போதிலும், காதலை பயன்படுத்தி அவரும் ரேவதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அவர் மீதும் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாலிபர் அடைக்கப்பட்டுள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக