புதன், 20 பிப்ரவரி, 2013

ஸ்ரீலட்சுமி ஜெகதி ஸ்ரீகுமாரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம் ஐயர் இன் பாகிஸ்தான்

சென்னை: காமெடி நடிகரின் ரகசிய காதலியின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் பிரபல காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். கடந்த 2 ஆண்டுக்கு முன் ஷூட்டிங்கில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்து நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இளவயதில் தான் துணை நடிகை ஒருவரை குருவாயூர் கோயிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயத்தை மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு சொல்லவில்லை. ரகசிய மனைவிக்கு ஸ்ரீலட்சுமி என்ற மகள் உள்ளார். மகளை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று ஸ்ரீகுமார் கனவு கண்டார். இந்நிலையில் ஸ்ரீலட்சுமிக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. ‘ஐயர் இன் பாகிஸ்தான் என்ற இப்படத்தை புதுமுக இயக்குனர் பாசால் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீலட்சுமி தற்போது  திருவனந்தபுரம் கிறிஸ்ட் நகர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் கூறும்போது,‘எனது தந்தை நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். இதற்கிடையில் நடிக்க வாய்ப்பு வந்தது. மூத்த நடிகை சுகுமாரிக்கு என்னை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்தான் தயாரிப்பு நிர்வாகி ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இயக்குனருக்கு தகவல் தெரிந்து என்னை ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்தார். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. நடிக்க வந்தாலும் படிப்பை நிறுத்தமாட்டேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக