வியாழன், 21 பிப்ரவரி, 2013

Ashok Leyland Luxura Magical சொகுசுப் பேருந்து

ஆடம்பரமான "ஜெட்" விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட பேருந்து டெல்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது. விமானங்களில் உள்ள வசதிகளை போல பேருந்துகளிலும் இருக்காதா என எண்ணிய பயணிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் டெல்லியில் அதிநவீன வசதியுடன் சொகுசுப் பேருந்து இயக்கப்பட உள்ளது.அசோக் லைலேண்ட் நிறுவனம் இந்த ஆடம்பர பேருந்தை உருவாக்கியுள்ளது. இந்த பேருந்திற்கு, "அசோக் லைலேண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்தில், குளிர்விக்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், குளியலறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.ஒன்பது பேர் பயணிக்கக் கூடிய இந்த ஆடம்பர பேருந்தின் வடிவமைப்பாளர் திலீப் சாப்ரியா கூறுகையில், தனியார் ஆடம்பர ஜெட் விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளை போல இந்த பேருந்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமானத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஆக்ரா சென்று அன்று மாலையிலேயே டெல்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவித்தார். டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பேருந்து டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக