புதன், 20 பிப்ரவரி, 2013

காவிரி: தமிழகத்துக்கு நல்ல சேதி!

டபாய்த்து வந்த மத்திய அரசு இன்று இறங்கி வந்தது!

Viruvirupu
காவிரி நீர் விவகாரத்தில், தமிழகத்துக்கு சாதகமாக விஷயம் இன்று நடந்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழகம் பலகாலமாக விடுத்து வந்த கோரிக்கை இது. ஆனால் அதை மத்திய அரசு காதில் வாங்கி கொள்ளவே இல்லை. தொடர்ந்து கர்நாடகத்திற்கு சாதகமாக, அரசிதழில் வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியடப்பட்டுள்ளதால், டெக்னிகலாக, இனிமேல் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக அரசு கூற முடியாது. எப்பாடுபட்டாவது தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும்.
இந்த தீர்ப்பை மத்திய அரசு தொடர்ந்து அரசிதழில் வெளியிடாமல் டபாய்த்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட், இன்றைக்கு முன் அரசிதழில் வெளியிட கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது. அப்படியிருந்தும், நேற்று பகல் முழுவதும் இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது.
நேற்று இரவு நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது. பிரதமரின் அனுமதியைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து அரசிதழில் தீர்ப்பு வெளியானது. இறுதியில், சுப்ரீம் கோர்ட்டுக்கு பணிந்தது மத்திய அரசு!
இனிமேல் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது. நதி நீர்ப் பங்கீடு தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும், இதற்குரிய வாரியம் மற்றும் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவைதான் கவனிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக