வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி

hyderabadஐதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் திரையரங்கம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பரபரப்பான வர்த்தக பகுதியில் நிகழ்ந்த இரு வேறு தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அ‌டைந்துள்ளனர்.ல்சுக் நகர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார். ஆனால், போலீஸார் கூற்றுப்படி, 15 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் நெருக்கமுள்ள சந்தை, பேருந்து நிலையம், திரையரங்கு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை, 3 குண்டுகள் வெடித்ததாகக் கூறியுள்ளது. 2 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த இடம் தெரியவந்துள்ளது. மூன்றாவது குண்டு வெடித்த இடம் சரியாக அடையாளம் காணப்படவில்லை. போலீஸாரின் தகவல் படி, முதல் குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்ததாம். இரண்டாவது குண்டு ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் திரையரங்கத்தின் அருகே மாலை 7 மணி அளவில் குண்டு வெடித்துள்ளது.
* இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 48 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அறிவித்தார். தியேட்டர்களில் நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில், முதல் குண்டு வெங்கடாத்ரி திரையரங்கம் அருகிலும், அடுத்தது கோனார்க் திரையரங்கம் அருகிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.* இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளில் எத்தனை குண்டுகள் வெடித்தன, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் முழுவதும் உஷார் படுத்தப் பட்டுள்ளது.

* இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களில் பலரும் ஓஸ்மெனியா மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: உளவுத் துறை அதிகாரிகள் விரைவில் விரைவு
ஹைதரபாத் தில்சுக் நகர் பகுதியில் வியாழன் மாலை நிகழ்ந்த இருவேறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக உடனடி ஆய்வுகளை மேற்கொள்ள உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஹைதராபாத்துக்கு விரைந்துள்ளனர் என்று உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

இரு குண்டுகள் வெடித்துள்ளதாகவும், ஆந்திர மாநில அரசு, தலைமைச் செயலர், டி.ஜி.பி உள்ளிட்டோருடன் உள்துறைச் செயலகம் தொடர்பில் இருந்து வருவதாகவும் ஆர்.கே.சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு அமைப்பு இது குறித்துக் கூறுகையில், ஹைதரபாத்தில் 3 குண்டுகள் வெடித்துள்ளன என்றது. ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ளார்.

ஹைதராபாத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த சந்தைப் பகுதி தில்சுக் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக