வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹரிதாஸ் நிச்சயம் பாருங்கள் பாராட்டிய வேண்டிய தரத்தில்

;நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலனிடமிருந்து இப்படியொரு படமா? கோடம்பாக்கத்தின் சமீபத்திய ஆச்சரியம் இது.நாளை ஹரிதாஸ் ரிலீஸ். படம் நன்றாக இருக்கிறது, பத்திரிகைகள் தூக்கி வைத்து கொண்டாடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சென்ற ஞாயிறு படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. ஒரு வார்த்தையில் சொன்னால் சூப்பர்.கிஷோர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு பாட்டியின் அரவணைப்பில் இருக்கும் அவரது மகனை அவரே பார்த்துக் கொள்ளும் சூழல் வருகிறது. மகனின் தேவைகளை புரிந்து கொள்ள முடியாமல் அவன் மீது பாசத்தை கொட்டும் கதை ஒருபுறம். இதில் நல்ல உள்ளம் கொண்ட டீச்சராக சினேகா வருகிறார். இன்னொருபுறம் தொழில் நிமித்தமான பிரச்சனைகள். இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்திருக்கும் திரைக்கதை. வெங்கடேஷ் வசனம் எழுதியுள்ளார்.இந்த வருடத்தின் முதல் கதைரீதியான விஸ்வரூபம் என ஹரிதாஸை சொல்லலாம். கிஷோரின் மகனாக சிறுவன் பிருத்விராஜ் நடித்துள்ளார். காமெடிக்கு சூரி.விஜய் ஆண்டனி இசை. ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் இடது வலது எல்லாமும். பிரதீப் ராவத் வில்லனாக நடித்துள்ளார். சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கும் இப்படம் அனைவரும் பார்த்து பாராட்டிய வேண்டிய தரத்தில் வெளிவந்துள்ளது. திரையரங்கில் நிச்சயம் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக