வியாழன், 21 பிப்ரவரி, 2013

பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்

மும்பை :மகாராஷ்டிராவில், வறுமையால் பாதிக்கப்பட்டு, பசியால் வீட்டை விட்டு வெளியேறிய, மூன்று சகோதரிகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.நாக்பூர் அருகே உள்ள பாந்தாரா மாவட்டத்தின், லக்னி என்ற கிராமத்தை சேர்ந்த, கணவனை இழந்த பெண்ணுக்கு, 11, 9 மற்றும் 5 வயதில், பெண் குழந்தைகள் இருந்தன.போதுமான வருமானம் இல்லாததால், வீடுகளில் வேலை பார்த்து வந்த அந்த பெண், கடந்த, 14ம் தேதி வேலைக்கு சென்று விட்டார். தாய் வர தாமதம் ஆனதால், பசியால் துடித்த குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் சென்று கொண்டிருந்தன.அங்கிருந்த, "தாபா' எனப்படும், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டலில், சாப்பாடு கேட்டுள்ளனர். அங்கிருந்த சிலர், சிறுமியர் என்றும் பாராமல், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொன்று, அருகில் இருந்த கிணற்றில் வீசி எறிந்துள்ளனர்.கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே, கிராமத்தினர் சென்று பார்த்த போது, மூன்று சிறுமியர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீஸ் நடத்திய விசாரணையில், "வறுமை காரணமாக சிறுமியர் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்' எனக் கூறி, கொலை வழக்கை, தற்கொலை வழக்கமாக மாற்ற பார்த்துள்ளனர்.சிறுமியர் பசியால் அலைந்ததை அறிந்த கிராமத்தினர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு, சிறுமியர் உடலை பரிசோதனை செய்ய வைத்தனர். பரிசோதனையில், சிறுமியர் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மது பாட்டில்கள், சிறுமியரின் செருப்பு, கிழிந்த உடைகளை கைப்பற்றியுள்ளனர்.  குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும் .... இன்னும் எத்தனை காலம் இது போன்ற செய்திகளைப் படிக்க வேண்டி வருமோ ...
இது குறித்து, நாக்பூர் போலீஸ் ஐ.ஜி., ராஜேந்திர சிங் கூறும் போது
, ""இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஏழு தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகிறோம். நூறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்,'' என்றார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக