திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஹெலிகாப்டர் ஊழல்: வந்தார் சுப்ரமணியம் சுவாமி! ஆவணம் எப்ப வரும் சாமியோவ்?

மேலே வெச்சிருக்கேன்.. வாங்கோ.. பேஷா காட்டலாம்! டில்லி அரசியலை ஆட்டி வைத்துள்ள ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக நம்ம சுப்ரமணியம் சுவாமி அதிரடியாக ஏதாவது கூற வேண்டுமே… கூறிவிட்டார். இந்த ஊழலுக்கும், சோனியாகாந்தி குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி, “இந்த ஊழல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின் ஹெலிகாப்டரைதான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி, அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள். எல்லாமே கமிஷனுக்காகத்தான். இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை. நேரு-காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று கூறியுள்ளார். சுவாமி இப்போதுதான், வார்ம்-அப் ஆகிறார். அடுத்து, நாலைந்து ஆதாரங்களை தூக்கி போடணுமே… எப்பங்க சுவாமி அது நடக்கும்?  viruviruppu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக