வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அமீரின் ஆதி-பகவன் உத்தரவாதமான சூப்பர் ஹிட்.

அவர்களின் தடை கோரிக்கை.. இவர்களின் தடை கோரிக்கை.. தணிக்கைத்துறை கொடுத்த ‘ஏ’.. என்று ஏகப்பட்ட செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த ‘அமீரின் ஆதி-பகவன்’ ரிலீஸாகி விட்டது. அல்லது ரிலீஸாகி விட்டார்கள்… காரணம், டைட்டிலில் இருப்பது மூவர். டைரக்டர் அமீர், பாங்காக் கடத்தல்காரர் ஆதி, மும்பை என்கவுன்டரில் சிக்க வேண்டிய நபர் பகவன். டைரக்டர் அமீர், படத்துக்கு ‘ஏ’ கொடுக்கப்பட்டதில், ‘அழுத்தம்’ காரணம் என்று ஒரு அறிக்கை விடுத்ததை நாமும் செய்தியாக்கி இருந்தோம். அமீருடன் 100 சதவீதம் ஒத்துப் போகலாம். படத்துக்கு ஏன் ‘ஏ’ என்பது, புரியவே இல்லை. ஆபாசமும் கிடையாது, அதீத வன்முறையும் கிடையாது.
பூசாரிகள் சங்கம், பூ பறிப்போர் சங்கம் என்று யாரும் தடை கோர முடியாது. போராட்டம் நடத்துவதென்றால், ‘போலீஸ் என்கவுன்டர் செய்வோர் சங்கம்’ களத்தில் இறங்கலாம். கதை போலி என்கவுன்டர் பற்றியது.
விஸ்வரூபம் படத்துக்கும் இதற்கும் இடையே ஒரு ஆச்சர்ய ஒற்றுமை இருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

விஸ்வரூபத்தில் கமல் வரும் பெண்மை கலந்த கேரக்டர் போல ஒன்றில், ஜெயம் ரவி தூள் கிளப்புகிறார். சிம்ப்ளி சூப்பர்! ரவியிடம் யாரும் எதிர்பார்க்க முடியாத பர்ஃபோர்மன்ஸ். அவருக்காகவே பார்க்கலாம்.
படம் ஆரம்பத்தில் ஸ்லோ. அதன் பின்னர் படு ஸ்பீட்.
மிகவும் ஸ்டைலிஷ் ஆன மேக்கிங். வெளிநாட்டு லொகேஷன்களை ஒளிப்பதிவாளர் நன்றாக யூஸ் பண்ணியிருக்கிறார். கிரைம் த்ரில்லர் ரக படம். முதல் சில நிமிடங்கள் பொறுமை காத்தீர்கள் என்றால், மீதி சும்மா பிய்த்துக்கொண்டு போகும்.
பாங்காக் ஜெயம் ரவி, மும்பைக்கு போனபின் வரும் ட்விஸ்ட்டுக்கு பிறகுதான் ரியல் படம்.
அமீர், அந்த ஆரம்ப நிமிடத்தில் கவனம் செலுத்தியிருந்தால், உத்தரவாதமான சூப்பர் ஹிட். இப்போதுகூட ஹிட் அடிக்கும் என்பதே ஊகம்.
   பூசாரிகள் உட்பட அனைவரும் தாராளமாக பார்க்கலாம்.   viruviruppu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக