சனி, 14 ஏப்ரல், 2012

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் விவாதங்களையும் அரசியல் சண்டைகளையும் காணும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த விவாதங்களை எப்படி அணுகுவது? உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?
முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது. ஒரு ராசியைக் கடந்த பிறகே மறு மாதம் தொடங்கும். இதனால்தான் பொங்கல் அன்று மாதம் எப்போது பிறக்கிறது என்ற கேள்வி எழும். சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்.

Stalin:நானும் அழகிரி ஆதரவாளர்தான்

ஸ்டாலின் ஆதரவாளர்கள் -
அழகிரி ஆதரவாளர்கள் :
மதுரையில் பரபரப்பு

மதுரையில் நகர் மற்றும் புறநகர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.  திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  இன்று ( 14.4.2012)  மாலை மற்றும் நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மதுரையில் முதன்முறையாக அழகிரி இல்லாமல் திமுக நேர்காணல் நடப்பது இதுவே முதல் முறை என்கிறது மதுரை திமுக வட்டாரம்.
இன்று காலையில் அழகிரி ஆதரவாளர்கள் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள  தமிழ்நாடு ஓட்டலில் ஒன்று கூடி, இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நேர்காணல் கூட்டத்தையும், நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு  செய்துள்ளனர்.  இதையறிந்த ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

உதயநிதி:நிஜமாவே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை

ஒரு கல் ஒரு கண்ணாடி ஜெயிக்கும் என்று நம்பியிருப்பார்கள்... ஆனால் இந்த அளவு மிகப்பெரிய வவேற்பு கிடைக்கும், அதுவும் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு என்று உதயநிதி எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
படத்தைப் பார்க்காமலே, சந்தானம் கலக்குகிறார், அவர்தான் ஹீரோ என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள், இப்போது உதயநிதியின் நடிப்பை ஓஹோவெனப் புகழ ஆரம்பித்துள்ளனர்.
அறிமுக ஹீரோ என்று சொல்ல முடியாத அளவுக்கு நகைச்சுவை, ரொமான்ஸ், பாட்டு என பட்டையைக் கிளப்பிவிட்டார் உதயநிதி என விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.

தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

அரசுத்துறை நிறுவனங்களையும் இயற்கை மூலவளங்களையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துவரும் இந்திய ஆட்சியாளர்கள்,  இயற்கையின் கொடையான தண்ணீரையும் தனியார்மயமாக்க மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார்கள்.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை பெருமுதலாளிகளின் இலாபத்திற்கான வணிகப் பொருளாக, காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றும் அநீதியை கொள்கை அறிவிப்பாக இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது (PDF).

அகிலேஷ் யாதவுக்கு மாயாவதி எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் எனது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் நினைவிடங்களை இடித்துவிட்டு வேறு ஏதேனும் கட்ட முயற்சித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், மாநிலம் மட்டுமல்ல நாடு முழுவதும் பிரச்சினையை ஏற்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு முன்னாள் முதலமைச்சர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாயாவதி பூங்காக்கள் பள்ளி, மருத்துவமனைகளாக மாற்றப்படும்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொணட் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இது பிரதமருடன் அகிலேஷ்யாதவின் முதல் சந்திப்பாகும்.
சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மத்திய அரசு திட்டங்களுக்கான பணத்தை விரைவில் வழங்க கேட்டு கொண்டதாக கூறினார். பிரதமருடன், கங்கை ஆற்றை சுத்தப்படுத்துதல் மற்றும் மாநில மின்சார நிலையங்களில் நிலக்கரி சப்ளை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் ஏற்கெனவே நாங்கள் கூறியபடி பள்ளி கூடங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றப்படும் என்று கூறினார்.

மமதாவை விமர்சித்து facebookகில் கார்ட்டூன்: பேராசிரியர், உறவினர் கைது


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கொள்கைகளை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் கேலிச்சித்திரங்களைப் வெளியிட்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மற்றும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்..
ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் அம்பிகேஷ். அரசின் கொள்கைகளை விமர்சித்து கேலிச்சித்தரங்களை போட்டுத் தள்ளியதுடன் தமது பேஸ்புக் பக்கத்திலும் உலவ விட்டுள்ளார்.

Rahul Gandhi: நான் பிராமணன்...அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்


Rahul Gandhi
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது!

Rukmani: படம் கிடைத்தால் தானே நடிக்க முடியும்

பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடனக் கலைஞர் ருக்மணி, அடுத்து ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். பிறகு எந்த படத்திலும் அவரை பார்க்க முடியவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நேற்று கேரளாவில் படப்பிடிப்பிற்காக வந்த அவரை தொடர்பு கொண்டு சில கேள்விகளை கேட்டோம்.ஆனந்த தாண்டவம் படத்திற்குப் பிறகு உங்களை சினிமாவில் பார்க்க முடியவில்லையே?எனது உலகமே நடனம்தான். நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான் எனது விருப்பம். நடுவில் ஒரு சில சினிமா வாய்ப்புகள் வந்தது. நடித்தேன். அதன்பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை. அதனால் நான் வழக்கம் போல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுவிட்டேன்.

7 பேர் Gang Rape விபசார அழகி கடத்தி கற்பழிப்பு


சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 35 வயது நிரம்பிய இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் இறந்த பிறகு, விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த வியாழன் அன்று நள்ளிரவு செல்வராணி போதையில் அசோக்பில்லர் அருகே ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார்.
அப்போது 3 ஆட்டோ டிரைவர்கள் அவரை உல்லாசத்துக்கு அழைத்தனர். அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் செல்வராணியை ஆட்டோவில் கடத்திச் சென்று எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 7 பேர் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
காரியம் முடிந்தபிறகு எனக்கு பணமாவது கொடுங்கள் என்று செல்வராணி கெஞ்சி இருக்கிறார். ஆனால் 7 பேரும் செல்வராணியை அனாதையாக விட்டுச் சென்று விட்டனர்.

தூத்துக்குடி ஓரே நாளில் 559 போலீசார் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள் என ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த போலீசார் அனைவரும் இடமாற்றம் செய்ய எஸ்பி ராஜேந்திரன் முடிவு செய்தார். இதையடுத்து முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 15 சப் இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து 41 காவல் நிலையங்கள் மற்றும் 7 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் முதல் நிலை காவலர்கள், ஏட்டுகள், சிறப்பு எஸ்ஐக்கள், பெண் போலீசார் என 544 பேர் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டனர்.

உ.பி.யில் மாணவிகளுக்கு இலவச கல்வி என்ஜினியரிங், மெடிக்கல் கல்லூரிகளில்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

லக்னோ நகரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ் பேசியதாவது:
அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டுகளில் மாணவிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். முக்கிய நகரங்களில் அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ஒரு உண்மை தெரிஞ்ஜாகணும்?த்ரி படம் வெற்றியா தோல்வியா

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 3 படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படமாகும். கொலவெறி பாடல் வெற்றி, தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படம்,
மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை என பல்வேறு விளம்பரங்களுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.இப்படம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷிடம் கேட்டதற்கு, படம் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் தெரியாது, பட விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் கிடைத்துவிட்டது என்று மட்டும் தெரியும் என்று பதில் அளித்தார்.இவரே இப்படி சொன்னால் நாம் யாரிடம் கேட்பது. படம் பார்த்த ரசிகர்களே நீங்களாவது சொல்லுங்கள்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும். ஏழாம் அறிவு போல இதுவும் ஒரு கப்சாவா?

அட்சய' திருதியை மூட நம்பிக்கையால் போண்டியாகும் குடும்பங்கள்

"அட்சய' திருதியை முன்னிட்டு, தங்க நாணயம் வாங்கும் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க, தமிழக தபால் துறை திட்டமிட்டுள்ளது.
"அட்சய' திருதியை நாளில், தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை, கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகரித்து வருகிறது. நகைக்கடைகளில், அன்றைய நாளில் தங்கம் வாங்க ஆயிரக் கணக்கில் மக்கள் குவிகின்றனர். அடுத்த பத்து நாட்களுக்கு முன் கூட்டியே பணத்தைக் கட்டி பதிவு செய்து வைத்துவிட்டு, குறித்த அட்சய திருதியைநாளில் நகைகளை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை, நகைக்கடை நிறுவனங்கள் இந்த ஆண்டும் அறிவித்துள்ளன. தபால் துறையும், சில ஆண்டுகளாக தங்கம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் நகைக்கடையுடன் போட்டி போடும் அளவுக்கு விற்பனைத் திறன் கிடையாது.

சிறையில் பெண் வார்டனுடன் "உறவாடிய' போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி

திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற பெண், தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி, சிறையில் பெண் வார்டனிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தினார். இந்த "உறவுக்கு' தடையாக இருந்த வார்டனின் கணவரை, அபாண்டமாக புகார்களைக் கூறி, வீட்டிலிருந்து துரத்தினார் போலி பெண் அதிகாரி. காக்கி பேன்ட், வெள்ளை நிற சட்டையில், காரில் சுற்றி வந்த போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசு மாத ஊதியமாக. 1,20,000/-தொழிலாளர்களுக்கோ மாநில மாத ஊதியமாக ரூ.8,500/-

தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஊதிய விகிதப்படி சம்பளம் தரவேண்டும். என்.டி.சி. அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு மாத ஊதியமாக சுமார் ரூ. 1,20,000/-ஐ எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தனது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் என்.டி.சி தொழிலாளர்களுக்கோ மாநில அரசின் ஊதிய விகிதப்படி மாத ஊதியமாக சுமார் ரூ.8,500/- மட்டும் கொடுக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் ரூ.8,500/- சம்பளத்தை கொண்டு குடும்பத்தின் உணவு செலவையும், குழந்தைகளின் கல்விச் செலவையும், இன்ன பிற செலவுகளையும் சமாளிக்க இயலாமல் பாதி நாட்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு நிறுவன ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பு.ஜ.தொ.மு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஆகிய சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரண்டு 29.02.2012-அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி+அ.தி.மு.க+BJP

உச்சநீதிமன்றம் சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு உறுதுணையாக நின்றது பி.ஜே.பி.யோடு அ.தி.மு.கழகம்

சேது சமுத்திரத் திட்டம் தமிழ் மண்ணின் 150 ஆண்டுகாலக் கனவு. அந்தத் திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும் என்று அவ்வப்போது தமிழக அரசியல் களம் சூடேறியிருக்கிறது. திராவிட இயக்கம் தோன்றிய பின்னர் அந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. சேது சமுத்திரத் திட் டத்தை அண்ணா லட்சிய முழக்க மாக்கினார். சேலம் இரும்பாலை, நெய்வேலி நிலக்கரி, தூத்துக்குடி துறைமுகம் என்று அவர் முன் வைத்த முழக்கங்களெல்லாம் செயல்வடிவம் பெற்றுவிட்டன. சேது சமுத்திரத் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை.

ராமஜெயம் கொலை ஆவியோடு பேச போலீஸ் மோகனூர் போயிருக்​காங்க..


ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப்​பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக்​காங்க...’ -
போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது.
மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவ​மே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’
நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர். 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணி’ன்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ஒரு NGOவின் தில்லு முல்லு தயாநிதி மாறன் உத்தமராம் திடீரென பல்டி

தயாநிதி மாறனுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணையில் தனது போக்கில் இருந்து யு-டர்ன் அடித்து, தயாரிதிக்கு ஆதரவாக திரும்பியிருக்கிறது Telecom Watchdog என்ற அரசு சார்பற்ற தன்னார்வ நிறுவனம் (என்.ஜி.ஓ.).
முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற பார்ட்டிகளில் இந்த அமைப்பு முக்கியமானது. திடீரென இவர்கள் பல்டி அடித்திருப்பது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தயாநிதி மாறன், தமக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை ஒவ்வொருவராக ஆஃப் பண்ணும் முயற்சியில் முதல் படி என்று கூறப்படுகிறது.
வெளி நிதியுதவிகளில் இயங்கும் அரசு சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களை, நிதியுதவிகளை வைத்தே திருப்ப முடியும் என்ற பரவலான குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்துவருகிறது.

ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!ஒரு கல் ஒரு கண்ணாடி

 உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ்எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு - ரெட் ஜெயன்ட்
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.
அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று 'பாஸ்ட் பார்வர்டு' கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!
இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

காதல் முடிந்தது! ஒரே கொண்டாட்டம் தான்!!

பிரபு தேவா - நயன்தாரா காதல் முறிந்தது என்பது தான் திரைவட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. ஆனால் இந்த பிரிவு இருவருக்குமே சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் யூகிக்க முடிகிறது.  
ஒருபக்கம் பிரபு தேவா கொண்டாடுகிறார் இன்னொரு பக்கம் நயன்தாரா கொண்டாடுகிறார். பிரிவில் அவ்வளவு சந்தோஷமா!
ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். ஏற்கனவே நயன்தாராவுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு.

கர்ப்பிணி மனைவி எரித்து கொலை காதலித்து திருமணம்


ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த எலக்காயலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மது (26). இவரும், சந்தப்பேட்டை கொத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஜஸ்வந்த் என்ற குழந்தை இருந்தது. பிரியா, தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவர்கள் திருமணத்துக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டு பெற்றோரும் குழந்தை பிறந்த பிறகு ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பிரியாவின் பெற்றோர் ரூ.1 லட்சம், 6 சவரன் நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் போலீஸ் வேலைக்கு மது விண்ணப்பித்துள்ளார். அப்போது ‘எனக்கு வேலை விஷயமாக ரூ.1 லட்சம் வேண்டி உள்ளது. உனது வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வா’ என பிரியாவிடம் கேட்டாராம்.

Indian Railway பயணிகள் முதலாளிகளா – கோமாளிகளா – ஏமாளிகளா ?


சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், 9 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகளின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 150 கி.மீ மேல், கி.மீ. ஒன்றுக்கு  இரண்டாம் வகுப்பு கட்டணம் ஐந்து பைசாவும், ஏ.சி சேர் கார் கட்டணம் பத்து பைசாவும், மற்றும் முதல் வகுப்பு, ஏ.சி கட்டணமும் உயர்த்தப்பட்டன. பயணிகளின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததலால் (உபயம்: மம்தா), ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மூலமாக, முதல் மற்றும் ஏ.சி வகுப்பு கட்டணங்களை தவிர்த்து, மற்ற கட்டண உயர்வுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சராசரி மக்கள் இந்த ரயில் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்கள் மாநிலத்தில் பால் மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதாவும் மம்தாவும் கண்டித்ததுதான் வேடிக்கை கலந்த வேதனை.

KKSSRR சிறையில் தரையில் படுத்துறங்கி பொழுதை கழிக்கிறார்.

ஜெயலலிதாவின் 29 எம் எல் ஏக்களை ஜானகி அணியிடம் இருந்து பாதுகாப்புக்காக கடத்தி ஒரு மாதவரையில் வடநாட்டில் ஒழித்து வைத்திருந்து ஜெயலலிதாவின் அரசியல்வாழ்வை காப்பாற்றிய இந்த சாத்தூர் ராமசந்திரன் இதன் காரணமாகவே மாட்டுக்காரவேலன் என்று எதிர்கட்சிகளால் குறிப்பாக சோவினால் கார்டூனில் இடம்பெற்றவர்
யாரிடம் இருந்தெல்லாம் உதவி பெற்றாரோ அவர்களையே முதலில் போட்டுத்தள்ளுவது ஒரு மன நோய்.இந்த மன நோய் மறைந்த ஒரு உலக பிரசித்த கொலைகாரனுக்கு  இருந்தது தெரிந்ததே
மதுரை: கொலை வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை சிறையில் முதல் வகுப்பு கிடைக்காததால், தரையில் படுத்துறங்கி பொழுதை கழிக்கிறார். விருதுநகர் போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக கூறி, இரு நாட்களுக்கு முன் சாத்தூர் ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.

A parade for "Sexual freedom" in Delhi

From R. Vasudevan—Reporting from New Delhi
New Delhi, 12 April (Asiantribune.com):
National Capital New Delhi is used to witnessing rallies and protests for different causes, but a unique one is planned at the favourite Jantar Mantar.
It will be a 'demonstration with a difference' as prostitutes, pornographic actors and brothel owners prepare to lay siege to the historic monument to demand sexual freedom - legalizing prostitution, sex toys, pornography and homosexuality. Indians, a little known organization that is spearheading this movement, claims to have invited film maker Mahesh Bhatt who is a votary for more liberal censorship rules for screen like in West and porn actor Sunny Leone as chief guests.

வியாழன், 12 ஏப்ரல், 2012

திருமணத்தை பதிவு செய்வது இனி கட்டாயம்!: மதம் குறித்த தகவலை சொல்ல வேண்டியதில்லை!!

Marriage
டெல்லி: இந்தியாவில் திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதே போல மணமகன், மணமகள் ஆகியோர் தங்கள் மதம் குறித்த தகவலை வெளிப்படுத்தாமலேயே திருமணங்களை பதிவு செய்வதை அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திருமணப் பதிவை எளிதாக்கவும், கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவும் வகையிலும் இந்திய திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

குஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை! இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது ஓடே கிராமத்தில் 23 பேரை உயிருடன் தீவைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். பலர் வாய் விட்டுக் கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. இது அநீதியானது. இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல என்று அவர்கள் குமுறினர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் கூடியிருந்தனர். அத்தனை பேரும் தீர்ப்பை எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குஜராத் முழுவதும் பெரும் மதக் கலவரம் மூண்டது. இந்த நிலையில், ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் புகுந்த வெறியர்கள், அங்கிருந்த முஸ்லீம்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு 3 மாடிக் கட்டடத்தில் முஸ்லீ்ம் குடும்பங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வீட்டை வெறியர்கள் தீவைத்து விட்டனர். இதில் 23 பேரும் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.
இந்தக் கோரச் சம்பவத்தில் மஜீத் மியான் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதவாத தாக்குதலில் ஓடே கிராம சம்பவமும் ஒன்றாகும். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 35 பேர் பிறழ் சாட்சியாகி விட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார்.
தற்போது தண்டனைக்குள்ளாகியுள்ள 46 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடந்த 9 மதக் கலவர வழக்குகளில் தற்போது 2வது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 33 பேரின் உயிரைப் பறித்த சர்தார்புரா படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்புக் கோர்ட் தீர்ப்பளித்தது.
2002ம் ஆண்டு குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் தலை விரித்தாடிய கலவரத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் ன்பது நினைவிருக்கலாம்.

Jeyalalitha இடைத் தேர்தல் வருதுல்ல.. புதுக்கோட்டைக்கு ரூ. 50 கோடி சிறப்பு நிதி

பார்ப்பன தேர்தல் கமிஷன் பாரபட்சம்
சென்னை: புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்த நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் விபத்தில் பலியானதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நீடித்து வரும் நிலையில், அந்தக் கட்சியிடம் ஆலோசனை ஏதும் நடத்தாமலேயே, அங்கு அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வனயுத்தம் வீரப்பன் படம் இடைக்கால தடைநக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில்,


நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வனயுத்தம்' என்ற தமிழ் படத்தையும், 'அட்டகாசம்' என்ற கன்னட படத்தையும் வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப்பனை பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, நிருபருடன் காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்கு கொடுத்தோம்.

ராஜ்குமார் மீட்பு

அமைச்சர்களுக்காக புதுக்கோட்டையில் 32 வீடுகள் ரெடியா? இல்லையா?

Viruvirupu
தமிழக அமைச்சர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சங்கரன்கோவில் கடும் உழைப்பைக் காட்டிவிட்டு, சற்றே ரிவாக்ஸ் பண்ணலாம் என்றால், மீண்டும் பெட்டி படுக்கையுடன் புதுக்கோட்டைக்கு
புறப்பட தயாராக வேண்டும் போலிருக்கிறது.
பாவம் நம்ம அமைச்சர்கள். சொந்த ஊரில் ஒரு வீடு, பின்கட்டில் பசுமாடு, சென்னையில் ஒரு பங்களா, அதில் ஜெனரேட்டர் கனெக்ட் பண்ணப்பட்ட ஏ.சி. வசதி… இவ்வளவும் இருந்தென்ன, சங்கரன்கோவிலிலும், புதுக்கோட்டையிலும் ஓடியோடி டெம்பரரியாக வீடு பிடிக்க வேண்டி உள்ளது.
அவர்கள் வீட்டு இல்லத்தரசிகளால், “நம்ம வீட்டுக்காரர் உத்தியோகம் பார்க்க கோட்டைக்கு போயிருக்கிறார்” என்றுகூட பெருமையாக நாலு பேருக்கு கூறமுடியாமல் உள்ளது.

தயாநிதி மீது புகார் சொன்ன NGO 'பல்டி' சிவசங்கரன் தான் குற்றவாளி என்கிறது!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது 'பல்டி' அடிப்பது ஏன் என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற என்ஜிஓ அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமாக இருந்த ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது.
ஆனால் லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிவசங்கரன் குற்றம் சாட்டினார்.

நித்தியானந்தா - ரஞ்சிதா மதுரை ஆதீன மடத்தில் தங்கினர் .ஹனிமூன்???

நித்தியானந்தாவும் - ரஞ்சிதாவும் இன்று ( 11.4.2012)  மதியம் 12.30  மணிக்கு மதுரை சென்றனர். இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்தட் பலரும் சென்றனர். மதுரையில் ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.அங்கே மடத்தின் மாடியில் நவீன வசதி கொண்ட அறைகள் உள்ளன. அங்குள்ள அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர்.
நித்தியானந்தா மட்டும் வந்து ஆதீனத்தை சந்தித்தார்.ஆதீனத்தை நித்தியானந்தா, அவருக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் அளித்தார். பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு செங்கோல் ஒன்றை அளித்தார்.

சுனாமி ஆர்வமாக இருந்த சென்னை மக்கள்!அடடா, வராமல் போய் விட்டதே


Marina Beach
 
சென்னை: சுனாமி வந்து விடுமோ என்ற பயத்தில் ஊரே நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் மட்டும் மக்களிடையே பயத்தை விட ஒரு வித ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்திருந்தும் கூட மக்கள் கடற்கரைப் பக்கம் அலைமோதியபடியே இருந்தனர். சுனாமி வராது என்று அறிவிப்பு வெளியானதும் பலருக்கு நி்ம்மதியை விட ஏமாற்றமே தெரிந்தது வியப்பளிப்பதாக இருந்தது.

உச்ச நீதிமன்றம் கேள்வி?தயாநிதி வழக்கில் முரண்பட்ட நிலை ஏன்?

ஏப். 11: "2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  "2ஜி அலைக்கற்றை' முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.  இந்த வழக்கில் "பொதுநல வழக்கு மையம்' (சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன்) என்ற அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார்.  "தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

சினிமா நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்த ரகுராம்: புதிய சங்கத்தை அறிவித்தார்!

Raghuram,  Prabhu Deva and Srikanth
சென்னை: நடனக் கலைஞர்கள் சங்கத்தை இரண்டாக உடைத்தார் மூத்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம். தனது தலைமையில் நடன இயக்குநர்கள் சங்கத்தை அறிவித்துள்ள அவர், யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம். எந்த அணியிலும் நாங்கள் இல்லை என அறிவித்துள்ளார்.
இது, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் எனத் தெரிகிறது.

காமராஜரா, எம்.ஜி.ஆரா?சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது


சென்னை, ஏப்.11: சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா என்பது தொடர்பாக அமைச்சர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:  தேமுதிக உறுப்பினர் கே.தமிழழகன் (திட்டக்குடி): வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.  அமைச்சர் பா.வளர்மதி: தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.  காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை): காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தைதான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார்.

நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு..’ என்ற பாணி பார்ப்பன பாரதியார்

புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

அதென்னங்க பார்ப்பன இந்துப் பார்வை?
-என். குமார்.
அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அவளை கடத்தி சென்று கை படாமல் வைத்திருந்தாலும் அவன் ஒழுக்கக்கேடன். அவனுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பு என்று ராவணன் மூலமாக நீதி சொன்ன பார்ப்பனியம்,
அடுத்தவர்களின் ஏகப்பட்ட மனைவிகளை கவர்ந்து அவர்களிடம் உடல்ரீதியாக உறவும் வைத்துக் கொண்ட பெண் பித்தன் இந்திரனை தேவர்களின் தலைவர்களாக கொண்டாடுவதை பழைய புராண, இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்து பார்வை என்று சொல்லலாம்..

தந்தையால் குழந்தை மரணம்: தூக்கு விதிக்க தாய் கதறல்

பெங்களூரு: மூன்று மாத பெண் குழந்தையை, பெற்ற தந்தையே சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தினார். நான்கு நாள் சிகிச்சை பலனின்றி குழந்தை, நேற்று பரிதாபமாக இறந்தது. குழந்தையை கொன்ற கணவருக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என, தாயார் கதறினார்.
பெங்களூரு, தேவர் ஜீவனஹள்ளி குஷால் நகரில் வசிக்கும், உமர்பாரூக், 23,வுக்கும், அதே பகுதியில் மோதி ரோட்டில் வசிக்கும், அப்துல்கரீம் மகள் ரேஷ்மா பானுவுக்கும், 2010 டிச., 5ம் தேதி திருமணம் நடந்தது. பாரூக் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து, மூன்று மாதம் குடும்பம் நடத்தி விட்டு, விவாகரத்து பெற்றவர்.

300 ஆண்டாக தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்

ராசிபுரம் அருகே, 300 ஆண்டுகளுக்கும் மேல் கொண்டாடப்படும் பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சி, பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில், பிரசித்தி பெற்ற பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில்,

புதன், 11 ஏப்ரல், 2012

மனம் கொத்தி பறவை முன்னோட்டம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்டர் எழில் இயக்கும் புதிய படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தின் டைரக்டராக மற்றும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார் எழில். மனம் கொத்தி பறவை படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆத்மியா அறிமுகமாகிறார்.

படம் குறித்து டைரக்டர் எழில் கூறும்போது, இது ஒரு காதல் கதை. கதாநாயகி உட்பட நிறைய புதுமுகங்களை இப்டத்தில் அறிமுகம் செய்கிறேன். கும்பகோணத்தில் இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது என்றார்.

கோவிலின் உச்சியிலிருந்து குழந்தை தூக்கி எறியப்பட்ட கொடுமை!




பெங்களூரு, ஏப்.10- நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்க, ஒரு குழந்தை 30 அடி கோயிலின் உச்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டது. இச்சம்பவம் மதச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, கருநாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர்வாசிகள் இவ்வாறு செய்தால் புதிதாக பிறந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என நம்புகின்றனர்.
இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்படும் குழந்தைகள் 2 வயதுக்கும் கீழே இருப்பவையே. அவ்வாறு தூக்கி வீசப்பட்டு காற்றில் தடுமாறும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் துண்டினைப் போட்டு பிடித்துக் கொள்கின்றனர்.

சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்! ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கண்ணோட்டத்தில்

ஹரி மசூதி
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார்.  மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses)  எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது.  இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு... ராவுத்தர், தேனப்பன், உள்பட 20 பேர் விலகல்!

அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திசேரகரன் பங்கேற்கப் போனதைக் கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குள் பெரும் மோதல் எழுந்துள்ளது.
இதனால் தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலர் பிஎல் தேனப்பன், ஆர்கே செல்வமணி, முரளிதரன் உள்பட 20 முக்கிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.
அத்துடன் தங்களுக்குள் புதிய அமைப்பையும் தொடங்கியுள்ளனர். இதற்கு அடோக் என பெயர் வைத்து, அதன் இடைக்கால தலைவராக இப்ராகிம் ராவுத்தரை நியமித்துள்ளனர்.

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்- கண்காணிப்பு நீடிப்பு!

சென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் எழாததால், இதற்கான வாய்ப்பு குறைந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை 8.5 ரிக்டர் அளவிலான ஆப்டர்ஷாக் எனப்படும் பின் அதிர்வு ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியாவில் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

3 படத்தை வெளியிட்டு பெரும் நஷ்டம் தயாரிப்பாளர் புகார்

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தை தெலுங்கில் பெரும் விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நட்டி குமார் புகார் தெரிவித்துள்ளார்.
தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

நிலநடுக்கம் : மெரினாவை விட்டு மக்கள் வெளியேற்றம்

தமிழகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக ராமநாதபுரத்தில் 10 அடி உயரத்துக்கு எழும்பிய கடல் அலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காரேந்தல், லாந்தை,கருங்குளம் தொழுவலூரை ராட்சத அலைகள் தாக்கின.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால், சென்னை கடலோர  பகுதி மக்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை மக்களூக்கு எச்சரிக்கை விடப்பட்டதால், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மெரினாவை விட்டு வெளியேறினர்.


புதுவையில் மாலை 4.30 மணிக்கும், சென்னையில் 5 மணிக்கு சுனாமி தாக்கலாம்?

 Tsunami
சென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாலை நாலரை மணியளவில் புதுவையை சுனாமி தாக்கலாம் என்றும் தகவல்கள் கூறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சென்னை முழுவதும் நிலநடுக்கம்-கட்டடங்கள் ஆடின-மக்கள் ஓட்டம்-பெரும் பீதி

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.
இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.
அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.
யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது

இந்தோனேஷியாவில் மிக பயங்கர நிலநடுக்கம்-28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை-சென்னை-பெங்களூரிலும் தாக்கம

ஜகார்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று பகல் 2 மணிக்கு (இந்தோனேஷிய நேரப்படி இரவு 7 மணிக்கு) இந்தியப் பெருங் கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.

சங்கரமடத்து 4 பேர் போனில் மிரட்டியதால் பல்டி அடித்தோம் மறுவிசாரணை நடத்த வேண்டும்- சங்கரராமனின் மனைவி

Jayendrar

மிரட்டியதால் பல்டி சாட்சி.. எங்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும்- சங்கரராமனின் மனைவி, மகன் கோரிக்கை

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக எங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் சங்கரராமனின் மனைவி, மகன் மனு கொடுத்துள்ளனர்.

காஞ்சி சங்கரமட மேலாளரும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகியுமான சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

புல்லட் ப்ரூப் நானோ கார்: டாடா வடிவமைப்பு

Tata Bullet Proof Car

5 கோடி+ 75,000 ஜீவனாம்சம்- மாஸ்டர் சுந்தரம் மீது 'முதல் மனைவி' தாரா வழக்கு!


Dance Master Sundaram

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துடன் நடந்த திருமணத்தை செல்லும் என்று அறிவிக்கக் கோரியும் தனக்கு ரூ 5 கோடி ரொக்கம் மற்றும் மாதம் ரூ 75000 ஜீவனாம்சம் கோரியும் சென்னை குடும்பநல கோர்ட்டில் டான்ஸ் மாஸ்டர் தாரா (வயது 62) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு எதிராக டான்ஸ் மாஸ்டர் என்.ஏ.தாரா, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீசு அனுப்பியது.

19 வயது தொழிலாளியை, 29 வயது பெண் கடத்தியதாக


சிவகாசி அருகே 19 வயது தொழிலாளியை, 29 வயது பெண் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி சிவகாமிபுரத்தை சேர்ந்த பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவில்,  ‘’ நான் பால் வியாபாரம் செய்கிறேன். எனக்கு 2 மகள், 3 மகன்கள். மகன் சிதம்பரம்,19, சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவர் 2010 நவம்பரில் மாயமானார். அவரை மாரியம்மாள்,29, என்பவர் கடத்தியிருக்கலாம் என தெரிந்தது.

அஜித் டான்ஸ் ஆரம்பம்!

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் பில்லா-2. பெரும்பாலும் இந்த மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட பில்லா-2 மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது பில்லா-2 ரிலீஸ் பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளாரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.பில்லா-2 படத்தின் முன்னோட்டம் இந்த வாரத்திலும்,  பாடல்கள் இந்த மாத இறுதியிலும், முழு நீள டிரெய்லர் மே 1-ஆம் தேதியும் வெளியிடப்படுகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பூமிதித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு குண்டம் விழா, மார்ச் 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 27ம் தேதி இரவு பண்ணாரி கோவிலில் இருந்து பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு வீதியுலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. ஏப்., 3ம் தேதி மீண்டும், பண்ணாரி கோவிலை அம்மன் வந்தடைந்தார். இதையடுத்து, கோவில் முன் உள்ள அக்னி குழியில் கம்பம் நடப்பட்டது.

Bore Well இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்

வீட்டில் ஏகப்பட்ட ஆழ்துளை கிணறுகளைப் போட்டு, நிலத்தடி நீரை இனி இஷ்டம் போல உறிஞ்ச முடியாத நிலை உருவாகப் போகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், "தேசிய தண்ணீர் வாரம்' என்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
அதிகம் வீணடிப்பு: குடிதண்ணீர், விவசாயம் என, இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் பெருகி வரும் தண்ணீர் தேவை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கான தீர்வை கண்டறியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

மறைந்த என்.வரதராஜன் மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் என்.வரதராஜன்
மருத்துவமனையில் இன்று (10.04.2012) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. அவருக்கு ஜெககுரு என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கல்யாண சுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளராக உள்ளார். பாரதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மாயாவதி மீது ஊழல் விசாரணை ஆணையம்: முதலமைச்சர் அகிலேஷ் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை கொடுத்துள்ளார். அடுத்த கட்டமாக மாயாவதி ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல துறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் இதுபெரிய பிரச்சினையாக பேசப்பட்டது.   குறிப்பாக தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து இருப்பதை சி.பி.அய். கண்டுபிடித்து விசாரித்து வருகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.அய். அதிரடி சோதனை நடத்தியது. மாயாவதி தோல்விக்கு இந்த ஊழல் புகாரும் காரணமாக அமைந்தது.  

விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்

நடிகை ஸ்ரேயாவுக்கு சமூக சேவை பணிகளில் நாட்டம் அதிகம். ஏழைகளுக்கு விளம்பரம் இல்லாமல் உதவி வருகிறார். அத்துடன் ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுகிறார்.

விலை மாதுகளின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை மிகவும் கலங்கடித்துள்ளதாம்.
வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள், ஏழ்மையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கடத்தி போய் விபசாரத்தில் தள்ளப்படும் பெண்கள்

போன்றோரின் நிலையை கண்டு வருந்தி அவர்களுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பை துவங்க ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.

தொழிலாளி வெள்ளையனின் வாயில் மலம் திணித்த முதலாளி

வல்லரசு முகத்தில் வழியும் மலம்கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம். இது பற்றி, அத்தி பூத்தாற் போலத் தினப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் எளிதில் கடந்து சென்று விடுகிறோம்.
உண்மை அத்தனை எளிதில் கடக்கக் கூடியதாய் இல்லை. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 40 வயதான வெள்ளையன். கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை இவரது வீட்டுக்கு வந்த கல்குவாரி முதலாளி துரையின் அடியாட்கள் இவரைச் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கல்குவாரியில் சம்மட்டி ஒன்றைத் திருடிவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தன்னுடன் வேலை செய்யும் வீரப்பன் என்பவரது சம்மட்டியை  இவர் 300 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்ததுதான் இவர் மீது சந்தேகப்படக் காரணம். இந்தச் சந்தேகத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாகத் தண்டனைதான்.
முதலாளி துரையிடம், தான் திருடவில்லை  என்று வெள்ளையன் மன்றாடியுள்ளார்; ஒரு கட்டத்தில் சம்மட்டிக்கான தொகையை வேலை பார்த்துக் கழித்துக் கொள்வதாகச் சொல்லி, தன்னை விட்டுவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.  எதையும் பொருட்படுத்தாத கல்குவாரி முதலாளி, உன்ன மாதிரி ஆட்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் பார்க்கிற மத்தவனுக்கும் புத்தி வரும் என்று சொல்லி, அங்கேயே ஒரு சட்டியைக் கொண்டுவரச் செய்து, மறைவாகச் சென்று தானே அதில் மலம் கழித்து, அதனைக் கொண்டு வந்து வெள்ளையனின் வாயில் திணித்துள்ளான்.

விபசாரத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை கைது


ஹைதராபாத்: சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை தாரா சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் முதல் போலீஸ் டி.ஜி.பி. வரை அவருடன் தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலம் ஆனார். இந்தநிலையில் இப்போது இவர் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தொண்டு அமைப்பு ஒன்றின் மூலமாக அந்த புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர், "எனக்கு நடிகை தாரா சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினார். அதன்பேரில் என்னை வரவழைத்து, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார்.

Sasikala:பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கூடுதல் ஆவணம் வேண்டும்

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கூடுதல் ஆவணங்கள் கேட்டு சசிகலா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

சவூதியில் 18 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்பு

துபாய்: கடந்த 18 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்கப்பட்டார். அவர் விரைவில் சொந்த ஊர் திரும்பவிருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பி.பெரியசாமி (45). அவர் திருமணம் முடிந்து ஓராண்டான நிலையில் தனது 27வயதில் கடந்த 1994ம் ஆண்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் ஹெயில் என்ற பகுதியில் ஒட்டகம் மேய்த்து வந்தார். அவருக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தவர் அதாவது ஸ்பான்சர் அவருக்கு சம்பளத்தை கொடுக்காமல், அவரை சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சவூதிக்கு வந்து இப்படி சிக்கிக் கொண்டோமே என்று மனமுடைந்த பெரியசாமி வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

ஜெயேந்திர, விஜயேந்திரரிடம் இருந்து பாதுகாப்புக் கோரி சங்கரராமன் மனைவி மனு


Sankararaman Murder
 
புதுச்சேரி: சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு சங்கர்ராமனின் மனைவி பத்மா தனது மகனுடன் திடீரென வந்து நீதிபதியை சந்தித்து தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்குமாறு கோரி மனு கொடுத்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் ஆஜராயினர்.
இன்று வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது. அப்போது சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென நீதிமன்றத்துக்கு வந்தனர்.
பத்மாவிடம் ஏற்கனவே சாட்சி விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் திடீரென நீதிமன்றத்துக்கு ஒரு மனுவோடு வந்தார்.

கேகேஎஸ்எஸ்ஆர் கைது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை


KKSSR Ramachandran
விருதுநகர்: முன்னாள் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது. இவருக்கும், சேதுராஜபுரத்தைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் லட்சுமணனின் மனைவிக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இந் நிலையில் கடந்த 2007ம் ஆண்டு லட்சுமணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்போது போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டது.