சனி, 14 ஏப்ரல், 2012

உ.பி.யில் மாணவிகளுக்கு இலவச கல்வி என்ஜினியரிங், மெடிக்கல் கல்லூரிகளில்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

லக்னோ நகரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ் பேசியதாவது:
அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டுகளில் மாணவிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். முக்கிய நகரங்களில் அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற புதிதாக தொழிற்சாலைகள் தொடங்க தேவையான வசதிகளையும் தமது அரசு செய்து கொடுக்கும்.
ஆங்கில மொழிக்கும், கணிணிக்கும் சமாஜ்வாதி கட்சி எதிரி என்று பொது மக்களில் ஒரு சாரார் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தவறான எண்ணத்தைப் போக்க இந்த முறை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கணிணிகளும், கால்குலேட்டர்களும் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக