சனி, 14 ஏப்ரல், 2012

Rukmani: படம் கிடைத்தால் தானே நடிக்க முடியும்

பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடனக் கலைஞர் ருக்மணி, அடுத்து ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். பிறகு எந்த படத்திலும் அவரை பார்க்க முடியவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நேற்று கேரளாவில் படப்பிடிப்பிற்காக வந்த அவரை தொடர்பு கொண்டு சில கேள்விகளை கேட்டோம்.ஆனந்த தாண்டவம் படத்திற்குப் பிறகு உங்களை சினிமாவில் பார்க்க முடியவில்லையே?எனது உலகமே நடனம்தான். நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான் எனது விருப்பம். நடுவில் ஒரு சில சினிமா வாய்ப்புகள் வந்தது. நடித்தேன். அதன்பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை. அதனால் நான் வழக்கம் போல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுவிட்டேன்.
தற்போது மீண்டும் கோச்சடையானில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் நடிக்கிறேன் என்றார் பளிச்சென்று.கோச்சடையான் வாய்ப்பு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?கோச்சடையான் ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட படம். இதில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் மகிழ்ச்சியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக