புதன், 11 ஏப்ரல், 2012

அஜித் டான்ஸ் ஆரம்பம்!

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் பில்லா-2. பெரும்பாலும் இந்த மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட பில்லா-2 மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது பில்லா-2 ரிலீஸ் பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளாரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.பில்லா-2 படத்தின் முன்னோட்டம் இந்த வாரத்திலும்,  பாடல்கள் இந்த மாத இறுதியிலும், முழு நீள டிரெய்லர் மே 1-ஆம் தேதியும் வெளியிடப்படுகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா” இந்த படத்தில் அஜித் சார் பிரேசில் மாடல் அழகி கேப்ரியலா பெடண்டே, மீனாக்‌ஷி தீக்‌ஷித் ஆகியோருடன் நடமாடுகிறார்” என்று கூறியுள்ளார். அஜித்தின் குத்தாட்டத்தை ரசிகர்கள்&எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக