புதன், 11 ஏப்ரல், 2012

சங்கரமடத்து 4 பேர் போனில் மிரட்டியதால் பல்டி அடித்தோம் மறுவிசாரணை நடத்த வேண்டும்- சங்கரராமனின் மனைவி

Jayendrar

மிரட்டியதால் பல்டி சாட்சி.. எங்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும்- சங்கரராமனின் மனைவி, மகன் கோரிக்கை

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக எங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் சங்கரராமனின் மனைவி, மகன் மனு கொடுத்துள்ளனர்.

காஞ்சி சங்கரமட மேலாளரும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகியுமான சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி சி.எஸ். முருகன் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் நேற்று முதல் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது.

இந் நிலையில் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென நீதிமன்றம் வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம் முடிந்த பின் இருவரும் நீதிபதியை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 4 பேர் என்னை போனில் மிரட்டியதால் பிறழ் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தோம். எனவே என்னையும் மகன் ஆனந்த் சர்மா, மகள் உமா மைத்ரேயையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து நீதிபதி இரு தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டார். பின்னர் இந்த மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும். அப்போது பத்மா, ஆனந்த் சர்மா, உமா மைத்ரேயி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சங்கரமடத்து
பின்னர் நிருபர்களிடம் பேசிய சங்கர்ராமனின் மகன் ஆனந்த சர்மா, எனது தந்தை கொலை குறித்து நானும், எனது தாயார் பத்மா, சகோதரி உமா மைத்ரேயி ஆகியோர் வாக்குமூலம் அளித்தோம். அதில் உண்மையான வாக்குமூலத்தை அளித்தோம். ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது எங்களை 3 ரவுடிகள் மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து நாங்கள் 3 பேரும் சாட்சியத்தை மாற்றிக் கூறினோம். எனவே தான் எங்கள் 3 பேரிடமும் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இப்போது நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம்.

இந்த மனுவை கடந்த மாதமே சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுக்கச் சென்றோம். ஆனால் விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் இதை தாக்கல் செய்யும்படி அவர்கள் தெரிவித்தனர். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை சந்தித்து மனுவை கொடுத்துள்ளோம் என்றார். பல்டி அடித்தோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக