வெள்ளி, 13 ஏப்ரல், 2012

KKSSRR சிறையில் தரையில் படுத்துறங்கி பொழுதை கழிக்கிறார்.

ஜெயலலிதாவின் 29 எம் எல் ஏக்களை ஜானகி அணியிடம் இருந்து பாதுகாப்புக்காக கடத்தி ஒரு மாதவரையில் வடநாட்டில் ஒழித்து வைத்திருந்து ஜெயலலிதாவின் அரசியல்வாழ்வை காப்பாற்றிய இந்த சாத்தூர் ராமசந்திரன் இதன் காரணமாகவே மாட்டுக்காரவேலன் என்று எதிர்கட்சிகளால் குறிப்பாக சோவினால் கார்டூனில் இடம்பெற்றவர்
யாரிடம் இருந்தெல்லாம் உதவி பெற்றாரோ அவர்களையே முதலில் போட்டுத்தள்ளுவது ஒரு மன நோய்.இந்த மன நோய் மறைந்த ஒரு உலக பிரசித்த கொலைகாரனுக்கு  இருந்தது தெரிந்ததே
மதுரை: கொலை வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை சிறையில் முதல் வகுப்பு கிடைக்காததால், தரையில் படுத்துறங்கி பொழுதை கழிக்கிறார். விருதுநகர் போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக கூறி, இரு நாட்களுக்கு முன் சாத்தூர் ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.
வழக்கமாக, "மாஜிக்கள்' வருமான வரி கட்டக்கூடியவர்கள் என்பதால், சிறையில் முதல் வகுப்பு கிடைத்துவிடும். ஆனால் ராமச்சந்திரனுக்கு அத்தகுதி இருந்தும், கோர்ட் உத்தரவு இல்லாததால், முதல் வகுப்பை ஒதுக்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால், ஆறு அறைகள் மட்டுமே கொண்ட தனி பிளாக்கின், மூன்றாவது அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். தரையில் படுத்துறங்கி பொழுதை கழிக்கிறார்.
வெளியே ஏட்டு, காவலர் ஒருவர் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பிளாக்கிற்குள் மட்டுமே "வாக்கிங்' செல்ல அனுமதிக்கப்படுகிறார். "இதய நோயாளியான அவர், மற்ற கைதிகளை சந்திக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பெரிய பிரச்னை ஆகும் என்பதால் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. முதல்வகுப்பில் அனுமதிக்காததால் சிறப்பு உணவுகள் தரப்படவில்லை' என்கின்றனர் சிறை அதிகாரிகள். ராமச்சந்திரனுக்கு முதுகுவலி இருப்பதால், நேற்று முன் தினம் கட்டில், சேர் கேட்டார். ஆனால், கோர்ட் உத்தரவு இருந்தால் மட்டுமே தருவோம் என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஸ்டாலின் சந்திப்பாரா: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்யவும், ஏப்.,15ல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் நாளை(ஏப்.,14) மதியம் நெல்லையில் இருந்து மதுரை வருகிறார். அப்போது சிறையில் "சாத்தூரை' சந்திக்கலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. "ஏப்.,14,15 அரசு விடுமுறை நாட்கள் என்பதால், சந்திக்க வாய்ப்பில்லை' என்றுகூறும் சிறை அதிகாரிகள், "சிறை கண்காணிப்பாளர் நினைத்தால் சிறப்பு அனுமதி கொடுத்து சந்திக்க ஏற்பாடு செய்ய முடியும். அதற்கும் வாய்ப்பில்லை,' என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக