வியாழன், 12 ஏப்ரல், 2012

திருமணத்தை பதிவு செய்வது இனி கட்டாயம்!: மதம் குறித்த தகவலை சொல்ல வேண்டியதில்லை!!

Marriage
டெல்லி: இந்தியாவில் திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதே போல மணமகன், மணமகள் ஆகியோர் தங்கள் மதம் குறித்த தகவலை வெளிப்படுத்தாமலேயே திருமணங்களை பதிவு செய்வதை அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திருமணப் பதிவை எளிதாக்கவும், கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவும் வகையிலும் இந்திய திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சட்ட அமைச்சகத்தின் இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி இந்தியாவில் எல்லா திருமணங்களையும் பதிவு செய்வது கட்டாயமாகிறது.

அதே நேரத்தில் பதிவுத் திருமணம் செய்வோர் தங்களது மதம் குறித்த தகவலை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்ற நிலையும் உருவாகவுள்ளது.

இதன்மூலம் இரு வேறு மதத்தினர் திருமணம் செய்வதற்கு உள்ள சிக்கல்கள் தீர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக