புதன், 11 ஏப்ரல், 2012

தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு... ராவுத்தர், தேனப்பன், உள்பட 20 பேர் விலகல்!

அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திசேரகரன் பங்கேற்கப் போனதைக் கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குள் பெரும் மோதல் எழுந்துள்ளது.
இதனால் தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலர் பிஎல் தேனப்பன், ஆர்கே செல்வமணி, முரளிதரன் உள்பட 20 முக்கிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.
அத்துடன் தங்களுக்குள் புதிய அமைப்பையும் தொடங்கியுள்ளனர். இதற்கு அடோக் என பெயர் வைத்து, அதன் இடைக்கால தலைவராக இப்ராகிம் ராவுத்தரை நியமித்துள்ளனர்.
மேலும் விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

பெப்சியை உடைத்து புதிய தமிழ் சினிமா தொழிலாளர் சங்கம் அமைப்பதில் இந்தக் குழுதான் மிகத் தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பெப்சியுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கூறிவந்த இவர்கள், புதிய தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். கடந்த இரு தினங்களாக பெப்சியில் உடைப்பு வேலைகளும் மும்முரமாக நடந்தன. முதல்கட்டமாக நடனக் கலைஞர்கள் சங்கம் உடைந்தது.

ஆனால் அரசின் தலையீடு பலமாக இருந்ததால், வேறு வழியின்றி தயாரிப்பாளர் சங்கத்தினர் பெப்சியுடன் சமாதானமாகப் போக ஒப்புக் கொண்டனர். மேலும் புதிய சங்கம் ஆரம்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ள நிலையில், இப்போது தயாரிப்பாளர் சங்கமே உடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து எஸ்ஏ சந்திரசேகரனை நீக்குவதிலும் அதிருப்தி குழுவினர் மும்முரமாக உள்ளனர். எனவே விரைவில் தேர்தல் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக