சனி, 14 ஏப்ரல், 2012

ஒரு உண்மை தெரிஞ்ஜாகணும்?த்ரி படம் வெற்றியா தோல்வியா

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 3 படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படமாகும். கொலவெறி பாடல் வெற்றி, தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படம்,
மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை என பல்வேறு விளம்பரங்களுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.இப்படம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷிடம் கேட்டதற்கு, படம் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் தெரியாது, பட விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் கிடைத்துவிட்டது என்று மட்டும் தெரியும் என்று பதில் அளித்தார்.இவரே இப்படி சொன்னால் நாம் யாரிடம் கேட்பது. படம் பார்த்த ரசிகர்களே நீங்களாவது சொல்லுங்கள்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும். ஏழாம் அறிவு போல இதுவும் ஒரு கப்சாவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக