சனி, 14 ஏப்ரல், 2012

அட்சய' திருதியை மூட நம்பிக்கையால் போண்டியாகும் குடும்பங்கள்

"அட்சய' திருதியை முன்னிட்டு, தங்க நாணயம் வாங்கும் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க, தமிழக தபால் துறை திட்டமிட்டுள்ளது.
"அட்சய' திருதியை நாளில், தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை, கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகரித்து வருகிறது. நகைக்கடைகளில், அன்றைய நாளில் தங்கம் வாங்க ஆயிரக் கணக்கில் மக்கள் குவிகின்றனர். அடுத்த பத்து நாட்களுக்கு முன் கூட்டியே பணத்தைக் கட்டி பதிவு செய்து வைத்துவிட்டு, குறித்த அட்சய திருதியைநாளில் நகைகளை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை, நகைக்கடை நிறுவனங்கள் இந்த ஆண்டும் அறிவித்துள்ளன. தபால் துறையும், சில ஆண்டுகளாக தங்கம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் நகைக்கடையுடன் போட்டி போடும் அளவுக்கு விற்பனைத் திறன் கிடையாது.

மூட நம்பிக்கையால் போண்டியாகும் குடும்பங்கள்
தர உத்தரவாதம்: நகைக் கடைகளில் முட்டி மோதுவதை விட, தரமான தங்கத்தை அரசு உத்தரவாதத்துடன், தபால் நிலையங்களிலேயே "ஹால்மார்க்' தங்கக் காசுகளை வாங்க முடியும் என்ற கருத்தில் , தபால் நிலையங்களை நாடுபவர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி யுள்ளது. இதற்காக, "ரிலையன்ஸ்' பண கட்டமைப்புடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தங்க நாணய விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, கடந்த 2008 முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், தங்க நாணய விற்பனை நடக்கிறது. ஆனால் பிரத்யேக விளம்பரம் இல்லாமல் நடக்கிறது.தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும், 0.5 கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம், 10 கிராம், 20 கிராம் மற்றும் 50 கிராம் நாணயங்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள"வால்காம்பி' என்ற பிரபல சான்றிதழ் முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தர உத்தரவாதம் இதனால்அங்கீகரிக்கப்படுகிறது.

183 இடங்கள்: சென்னை நகர மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள, 183 தபால் நிலையங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய நகரங்களில் இன்னமும் இந்த வசதி வரவில்லை. இத்திட்டம் துவங்கிய, மூன்றாண்டுகளில், 254 கிலோ அளவிற்கு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. தங்க நாணய விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் முயற்சியில் தற்போது தமிழக தபால் துறை ஈடுபட்டுள்ளது.

சலுகை உண்டா: தமிழக தபால் வட்ட வர்த்தக வளர்ச்சி பிரிவு உயரதிகாரி கூறும்போது,""அட்சய திருதியை' (24ம்தேதி) நாளன்று, அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தபால் நிலையங்களில் விற்பனையாகும் தங்க நாணயங்களை வாங்கும் பொதுமக்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும். என்ன மாதிரியான சலுகைகள் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக