சனி, 23 மார்ச், 2024
சென்னை கால்டாக்சி ஓட்டுனரை முகத்தில் அடித்து கொலை செய்த போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள்! கைது
சென்னை: சென்னை மதுரவாயல் தலைமை காவலர் மார்பு பகுதியில் தாக்கியதில்,சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். கால் டாக்சி ஓட்டுனர். ராஜ்குமார் நேற்று முன் தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
Call taxi driver dies in Maduravoyal after police attack him Head constable arrested
ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 93 பேர் பலி, 11 பேர் கைது; முன்பே எச்சரித்த அமெரிக்கா – என்ன நடந்தது?
BBC Tamil : மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கெஜ்ரிவால் கைது.ஜெர்மனி கண்டனம்! . ஜெர்மன் வெளியுறவு துறை அறிக்கை! பாஜக அதிர்ச்சி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்குக் கைதுக்கு எதிராக ஜெர்மனி சில கருத்துகளைக் கூறி இருந்தது.
இதற்கிடையே ஜெர்மன் தூதரகத்தின் மூத்த தூதரக அதிகாரிக்குச் சம்மன் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். கெஜ்ரிவால் வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று நம்புகிறோம் என்பது போல கருத்து கூறியிருந்தார்.
தோழர் அருண் சித்தார்த் - இலங்கை தமிழர்களின் சுயமரியாதை குரல்!
Vijaya Baskaran : யாழ்ப்பாண பரபரப்பு
யாழ் மாவட்ட ஐ தே க அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.இங்கே அருண் சித்தார்த் ஐ தே க வில் சேர்ந்தது பிரச்சினை அல்ல. ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் ஒரு தேசிய கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டது உயர்சாதியினருக்கும் அதற்குச் சேவகம் செய்யும் ஊடகத்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுவரைக்கும் வடக்கே நிலவும் சாதிப் பாகுபாடுகளை எவரும் தெற்கே ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரவில்லை. அதை இதுவரை எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் செய்யவில்லை. செய்ய துணிந்ததும் இல்லை. அந்த வகையில் இந்த விசயங்களை யாழ்ப்பாணத்துக்கு வெளியே கொண்டு வந்து தமிழ்த் தேசியத்தின் முகத்திரையை கிழித்தவர் என்ற வகையில் எனக்கு அருண் சித்தார்த் மேல் ஒரு மரியாதை உண்டு.ஆனால் இன்று அவர் தேர்ந்தெடுத்த கட்சியும் எனக்கு உடன்பாடானதும் அல்ல.
இஸ்லாமியர்கள் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்? அதற்கென்று ஒரு பாரம் இருக்கிறதாம்.
Karthikeyan Fastura : நான் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த பதிவு இது. எங்களிடம் வரும் சில இஸ்லாமிய நண்பர்கள் கூறும் கதைகளை வைத்து இதனை எழுதுகின்றேன்.
இஸ்லாமியர்களில் பலர் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கிறார்கள். அதற்கென்று ஒரு பாரம் இருக்கிறதாம்.
ஆகவே பலர் FD, RD எதுவும் போடுவதில்லை. Debt instruments என சொல்லப்படும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை.
பங்குச் சந்தையில் ஈடுபட்டாலும், வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்வதில்லை.
அவர்களிடம் நெருக்கமாக பழகும் சில இந்துக்கள் கோடிக்கணக்கில் இஸ்லாமியர்களிடம் வட்டி இல்லாத கடன் வாங்கி இவர்கள் வட்டிக்கு விட்டு பெருமளவு சம்பாதிக்கிறார்கள்.
இது என்ன அபத்தம்? என்று தோன்றுகிறது அல்லவா.? அளவுக்கு அதிகமாக மதத்தை பின்பற்றுவதால் வரும் வினை. ஒரு யோகி சாகும் தருவாயில் சீடர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்த பூனையை கட்டிப் போடச் சொன்னாராம். அந்த யோகி இறந்தவுடன் அடுத்து குருவாக வந்த தலைமை சீடர், வகுப்பு எடுக்கும் போது தூணில் பூனை இல்லாததை பார்த்து எங்கே பூனை என்று கேட்டாராம். அன்று முதல் வகுப்பில் பூனையை கட்டி போடும் வழக்கம் வந்ததாம்.
இப்படித்தான் சாஸ்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பன பலவும் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய மணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திரா நூயி.. வீடியோ பதிவு..!!
மேலும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கும், அமெரிக்கா வரப்போகும் இந்திய மாணவர்களுக்கும் எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்பான துயர சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பெப்சிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'நிருத்ய' என்ற சொல்லிலிருந்த்துதான் ' நாட்டியம்' வந்ததாம் பத்மா சுப்பிரமணியம் தெனாவெட்டு
முனைவர் ச.சு.இளங்கோ |
Muthu Selvan : பத்மா சுப்பிரமணியனுக்கு ஒரு நினைவூட்டல்!
1980 இல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு! மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரம்பல நிகழ்ச்சியில், பத்மா சுப்பிரமணியம் தமிழில் நாட்டியத்திற்குச் சொல் இல்லை. 'நிருத்ய' என்ற சொல்லிலிருந்த்துதான் ' நாட்டியம்' வந்ததென்று தன் ஆதாய்ச்சி முடிவாகக் கூறிக்கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர்.
அவையிலிருந்த தமிழறிஞர் ஏனோ அமைதியாகக் கேட்டுக் கொண்டிரும்தனர். எம்சியார் கூட்டிய கூட்டமாயிற்றே என்னும்.அச்சமோ என்னவோ?!
வெள்ளி, 22 மார்ச், 2024
அரவிந்த் கெஜ்ரிவால் கைது அடக்குமுறை.. சர்வதேச கண்டனம் . உலக ஊடகங்கள் விளாசல்
tamil.oneindia.com - Halley Karthik : நியூயார்க்: டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச ஊடகங்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளன.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருந்தது. எனவே வழக்கின் விசாரணைக்காக தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால், கெஜ்ரிவால் எதற்கும் பிடி கொடுக்காமல் பறந்து வந்தார். மறுபுறம் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கிக்கொண்டே வந்தது.
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை இன்று (மார்ச் 22) இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் ஆணையம் ’கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்கியது.
ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணப்பித்தார்கள் எனக்கூறி, கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு
மாலை மலர் : சென்னை பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விசா நீட்டிப்புக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கார்த்தி எம்.பி., மீது குற்றப்பத்திரிகை
அப்போது, பஞ்சாபின் மான்சா என்ற இடத்தில், 'தால்வாண்டி சாபோ பவர்' என்ற தனியார் நிறுவனம், மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி வந்தது. இந்த பணியில் ஈடுபடுவதற்காக, சீனாவைச் சேர்ந்த 263 பணியாளர்கள் பஞ்சாப் வந்தனர்.
இவர்களுக்கு அளிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்த நிலையில், அந்த விசாவையே மீண்டும் பயன்படுத்தி பணியை தொடர, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இதற்காக, அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி வாயிலாக, விசா மறுபயன்பாட்டுக்கான அனுமதியை சீன பணியாளர்கள் பெற்றனர்.
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு-நாளை தீர்ப்பு!
tamil.oneindia.com - Vigneshkumar : டெல்லி: 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
திமுகவுக்கு மிக பெரிய தலைவலியைக் கொடுத்த வழக்குகளில் முக்கியமானது 2ஜ வழக்கு. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் மத்திய டெலிகாம் துறை அமைச்சராக இருந்தவர் ஆ ராசா.
Delhi HC to pronounce order on CBI s plea against acquittal of A Raja others in 2G case
அப்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்குப் பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்! -
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராக தோழர் அருண் சித்தார்த் Arun Siddharth நியமிக்க பட்டுள்ளார்!.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார்.
இதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் மிக சரியான ஒரு பாதையில் பயணிக்கிறார் என்பதை மீண்டும் ஒரு தடவை செயலில் காட்டியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜிரிவால் கைது
nakkheeran.in : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
வியாழன், 21 மார்ச், 2024
கர்நாடகத்தில் திராவிடக் குரல்கள்!! .. வழக்கறிஞர் அருள்மொழி - திராவிடர் கழகம்
Annamalai Arulmozhi : கர்நாடகத்தில் திராவிடக் குரல்கள்!!
தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கர்நாடக மாநில மகளிர் கூட்டமைப்பு என்ற அமைப்பு , 2024 மார்ச் 8 ஆம் நாள் கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் நான் தொடக்க உரையாற்றினேன்.
முதல்நாள் இரவே அங்கு சென்று விட்டதால் அந்த அமைப்பினை நடத்தும் பொறுப்பில் இருக்கும் பெண்களோடு உரையாட நேரம் கிடைத்தது. வழக்கறிஞர் மருத்துவர் பேராசிரியர் மற்றும் பல்வேறு பணிகளில் உள்ளவர்கள் என்றாலும் அவர்களுக்குள் கன்னட மொழியிலும் என்னோடு ஆங்கிலத்திலும் உரையாடினர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கவனித்தால் அதிகமான சொற்கள் தமிழாகவே இருப்பதை உணர முடிந்தது. அதனை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி தமிழும் கன்னடமும் திராவிட மொழிகள்தானே! என்று மகிழ்வோடு கூறி மேலும் ஆர்வமாகக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
இலங்கை மக்கள் சராசரியை விட மூன்று மடங்கு அதிக சீனியை உட்கொள்கிறார்கள்
ஜாப்னா முஸ்லீம் : இலங்கை மக்கள் சராசரியை விட மூன்று மடங்கு அதிக சீனியை உட்கொள்கிறார்கள் .. பல்வியாதி.. டயாபெட்டீஸ் போன்றவற்றின் மூல காரணம்
இலங்கை மக்கள் உட் கொள்ளும் சீனி குறித்து அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என வரையறுத்துள்ளது.
எனினும் இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர் - உச்சநீதிமன்றத்தின் குட்டு..
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
கடந்த 13ஆம் தேதி அனுப்பிய கடிதத்துக்கு 17ஆம் தேதி பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு! நீலகிரி - எல்.முருகன்- கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - ஏ.சி.சண்முகம்...
nakkheeran.in : நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில்,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன.
ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது.
திமுகவில் 11 எம்.பி.க்களுக்கு சீட் மறுப்பு, 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு - பின்னணி என்ன? -நாடாளுமன்ற தேர்தல்:
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.
மீதமுள்ள 17 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், ஆகியவை தலா ஒரு இடத்திலும் காங்கிரஸ் கட்சி ஒன்பது இடத்திலும் போட்டியிடுகிறது. புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழச்சி Vs தமிழிசை Vs ஜெயவர்தனன் தென்சென்னையில் சூடு பிடிக்கும் களம்!
முதலில் தமிழிசை செளந்தர்ராஜன், தான் துணைநிலை ஆளுநராக இருந்த புதுச்சேரி தொகுதியில் தான் போட்டியிடுவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், சமீப காலங்களில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வுகள் அவரது முடிவினை மாற்றியிருக்கிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் கடும் அதிர்வை ஏற்படுத்தியதுடன் புதுச்சேரி அரசை நோக்கியும், ஆளுநரான தமிழிசையை நோக்கியும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
புதன், 20 மார்ச், 2024
கோவை ஜாக்கி வாசுதேவ் அப்போலோவில் .. மூலையில் இரத்த கசிவு .. அறுவை சிகிச்சை ...
மின்னம்பலம் -vivekanandhan : மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் ஜாக்கி வாசுதேவ்
ஜாக்கி வாசுதேவிற்கு மூளையில் மிக ஆபத்தான ரத்தக் கசிவு இருந்து வந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாகவும் ஈஷா மையம் தெரிவித்துள்ளது. ஜாக்கி வாசுதேவ்வின் உடல்நிலை குறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு: ஜாக்கி வாசுதேவ்விற்கு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலி இருந்து வந்தது. வலியின் வீரியம் அதிகமாக இருந்தபோதும் அவர் தனது வழக்கமான பணிகளை தொடர்ந்து கொண்டிருந்ததுடன், மார்ச் 8 ஆம் தேதியன்று மகா சிவராத்திரி நிகழ்ச்சியையும் நடத்தினார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றபோது வலி மிகவும் அதிகமானது.
2024 - திமுக-வின் “47” தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்
தினகரன் :“திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது..
இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் ‘இந்தியா’ கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.
1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்
.3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.
5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.
6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக (சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் இன்னும் கேக்கல)
நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அதிமுக.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டிற்கே நேரடியாகச் சென்று கூட்டணி தொடர்பாக பேசிவிட்டு வந்தனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பாமக, தேமுதிக இரண்டையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள தீவிரமாக முயற்சித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
பாமக 9 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டுமென்று அதிமுகவிடம் கேட்டது. இறுதியில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா என்று முடிவான நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.
அதிக வெப்பம் காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடம் தேடும் காலம் .. கவனிக்க வேண்டிய விடயங்கள்
Dayalan Balasubramaniyiam : காலத்திற்கேற்ற பதிவு....
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
செவ்வாய், 19 மார்ச், 2024
தமிழக கடற்றொழிலை கண்காணிக்க Sea Scouts படையை நிறுவ முயற்சி! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கையின் கடல் எல்லைக்குள் கனரக கடற்றொழில் படகுகள் அடிக்கடி நுழைவது, உள்ளூர் கடற்றொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
குறைந்தபட்சம் 500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகின்றன.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு சராசரியாக 900 இந்திய இழுவை படகுகள் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைகின்றன!
.
ஒவ்வொரு படகும் 1,000 கிலோ மீன்கள் மற்றும் இறால்களை பிடிக்கின்றன!
இந்த சட்டவிரோத இழுவைப் படகு மூலம் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் 350 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அமைச்சரவை குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மீன்படியாளர்களின் சட்டவிரோ கடற்றொழிலை கண்காணிக்க “கடல் சாரணர்” படையை நிறுவுவதற்கு விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்!
பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள்- உத்தேச பட்டியல்!
tamil.asianetnews.com -Ajmal Khan : தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து தொகுதிகளையும் அறிவித்து விட்டது. இதனையடுத்து இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிடப்படவுள்ளது
நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கிய கமல்ஹாசன்! முக்தா ரவி பேட்டி
tamil.filmibeat.com - Mari S : நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் 'நாயகன்' படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்த படத்தை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆரம்பத்தில் மணிரத்னம் அந்த படத்திற்கு வருவதற்கு முன்பே கமல்ஹாசனை வைத்து காட்ஃபாதர் படத்தை உருவாக்குவது தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் எண்ணமாக இருந்தது என்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து சிவாஜி கணேசன் நடிக்க கால்ஷீட் கொடுத்ததாகவும் முக்தா ரவி கூறியுள்ளார்.
ஆனால், திடீரென கமல்ஹாசன் மணிரத்னத்தை கொண்டு வந்து படத்தையே மாற்றி விட்டார் என்றும் சிவாஜி கணேசனை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார் என்றும் முக்தா ரவி பேசியுள்ளார்.
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview
மோடியின் ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு!
பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவில் கூட்டத்தை காட்டுவதற்காக அரசுப்பள்ளி மாணவ , மாணவிகளை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருக்கும் பாஜக . இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நக்கீரன் : நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது
சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது ( டி.என்.ரே 1939)
வேதகால மக்கள் "பிபிதகா" என்ற தான்றி கொட்டைகளை ( Terminalia Bellirica ) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்.
"சாலகா" என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுவது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுகோணப் பகடைகள் ( cubic dice) கிடைத்துள்ளன.
"வல்லு" எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்!
வல்லப் பலகை ( அகநானூறு 377); சங்குகளில் துளையிட்டு செய்த பகடைகள் ( அகநானூறு 135); சோழ மன்னன் தம்பியுடன் தாமப்பல் கண்ணணார் என்ற புலவர் ஆடிய பகடை விளையாட்டு ( புறநானூறு 43) போன்ற சங்க இலக்கியங்களுக்கு இணையான நடைமுறை சார்ந்த ஆவணம் வேறு எந்த மொழியிலும் இல்லை.
பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளில் EVM வெற்றி - தேர்தல் கமிஷன் EVM மோசடி அம்பலம்
புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 350 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 'நியூஸ் 18' ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.
பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?
“நேற்று (மார்ச்17) மாலை 4.15 மணி முதல் 6.15 மணி வரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்துக்கு சென்ற பாமக எம்.எல்.ஏ. அருள், டாக்டர் ராமதாஸ் சொன்ன செய்திகளை எடப்பாடியிடம் தெரிவித்தார். அதன் பின் அருளின் ஐ போன் மூலமாகவே எடப்பாடி டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசினார்.
தேர்தல் விதியை காட்டி பெரியார் சிலையை மூடிய அதிகாரிகள் .. திராவிடர் கழகம் அதிரடி நடவடிக்கை
nakkheeran.in :தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திங்கள், 18 மார்ச், 2024
ஆந்திரா: ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா?
மின்னம்பலம் vivekanandhan : ஆந்திராவைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
அங்கு 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் உள்ளன.
ஆந்திராவில் இரு பெரும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இரண்டுமே இந்தியா மற்றும் என்.டி.ஏ என்று தேசிய அளவிலான எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்து வந்தன.
அதனால் 2024 பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் ஆந்திரா மாநிலத்தின் நிலை என்பது பெரிய அளவில் விவாதப் பொருளாக இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஆந்திர அரசியலை பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. திடீர் திருப்புமுனையாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன.
தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவி ராஜினாமா தேர்தலில் போட்டி இடுகிறார்
அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து,
ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்! list
மின்னம்பலம் - christopher : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது குறித்த உடன்படிக்கை இன்று (மார்ச் 18) திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுச்சேரி உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அந்த 9 தொகுதிகள் என்னென்ன என்பது கேள்வியாக எழுந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் சார்பில், அசோக் கெலாட், அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு List !
மாலை மலர் ; நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. அதே போல் கடந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியிலும் திமுக போட்டியிடுகிறது.
ரஷ்ய - 5ஆவது முறையாகவும் அதிபரானார் விளாடிமிர் புதின்
tamilmirror : ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா.. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான்.
1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புதின் ஓவர்கேட் செய்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்
தென் சென்னையில் அதிமுக ஜெயவர்தன்.. வட சென்னையில் ராயபுரம் மனோ?
tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில், மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக சார்பில் சென்னையில் யார் யார் எங்கு போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது, மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் உள்ளன.
who are going to contest in south Chennai and north chennai on behalf of AIADMK
: யாழ்ப்பாணம் - கொலைகளும் மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???
Poornima Karunaharan : கொலைகளும் அதன் பின்னரான சமூகக் காரணியாக முன் வைக்கப்படுகின்ற மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???
உண்மையான காரணங்கள் வேறாகவும் இருக்கலாம். இன்றைய நிலையில் எந்த குற்றங்களுக்கும் விடையாக டிப்ரெஷன் என்பது திணிக்கப்பட்டு விடுகிறது.
Radha Manohar : இதுதான் நமது பாரம்பரியம் இது வேடிக்கைக்காக கூறவில்லை .. இது வரலாற்று உண்மை!
ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்
வீரகேசரி : கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி“ என்ற நூலில், பாதுகாப்பு உயர்மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ.
அவர் எதனைப் பலமாக கருதினாரோ அதுவே அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதனைப் பலப்படுத்தியதாக கூறினாரோ, அதன் பலவீனங்களை அவரே இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தன்னுடன் நீண்டகாலம் பணியாற்றிய படை அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொண்டார்.
தன்னைச் சூழ, தனக்கு நெருக்கமானவர்களை வைத்திருப்பது பாதுகாப்பானது என்று அவர் கருதினார். தனக்கு நம்பிக்கையானவர்களை அருகில் வைத்திருப்பதன் மூலம் இலகுவாக அதிகாரத்தைச் செலுத்தலாம் என்று அவர் எண்ணினார்.
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பையும் திரும்பப் பெறப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார்.
ஞாயிறு, 17 மார்ச், 2024
பாஜக மொத்தம் ரூ.6,986.5 கோடி - மார்ட்டின் நிறுவனத்திடம் - தேர்தல் பத்திர புதிய விவரம்
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
மும்பையில் ஸ்டாலின் : “பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” -
இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமலாக்கத் துறையில் லஞ்சம்! சகித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம்
Kalaignar Seithigal - Praveen : திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.51 கோடி வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சப்பணத்தை வாங்க வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்றது தெரியவந்தது.