வெள்ளி, 22 மார்ச், 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்! -

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராக தோழர் அருண் சித்தார்த் Arun Siddharth நியமிக்க பட்டுள்ளார்!.  
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார்.
இதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் மிக சரியான ஒரு பாதையில் பயணிக்கிறார் என்பதை மீண்டும் ஒரு தடவை செயலில் காட்டியுள்ளார்.  


அவர் இப்போது மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தை சரியாக புரிந்து கொண்டுள்ளார் என்றெண்ணுகிறேன்.
ஊழல் கறையும்  இரத்தக்கறையும் படிந்துள்ள ஏராளமான அரசியல்வாதிகளை புறந்தள்ளி ஒரு புதிய பாதையை இந்த நியமனத்தில் மூலம் அவர் காட்டியுள்ளார் என்று கூறலாம்!
சுயமரியாதை கோட்பாட்டை முழு மூச்சாக முன்னெடுத்து வரும் தோழர் அருண் சித்தார்த்தின் அரசியலில் இது ஒரு திருப்பு முனையாக அமையும்
ஒன்று பட்ட இலங்கையை மீண்டும் ஆசியாவின் நட்சத்திரமாக ஒளி வீச செய்யும் பணியில் ஜனாதிபதியின் கரங்களை தோழர் மேலும் வலுப்படுத்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக