திங்கள், 18 மார்ச், 2024

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு List !

 மாலை மலர் ; நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. அதே போல் கடந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியிலும் திமுக போட்டியிடுகிறது.



தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது

மதிமுக திருச்சியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் போட்டியிடுகிறது.

விசிகவிற்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக