திங்கள், 18 மார்ச், 2024

: யாழ்ப்பாணம் - கொலைகளும் மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???

May be an image of text

Poornima Karunaharan :  கொலைகளும் அதன் பின்னரான சமூகக் காரணியாக முன் வைக்கப்படுகின்ற மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???
உண்மையான காரணங்கள் வேறாகவும் இருக்கலாம். இன்றைய நிலையில் எந்த குற்றங்களுக்கும் விடையாக டிப்ரெஷன் என்பது திணிக்கப்பட்டு விடுகிறது.

Radha Manohar :  இதுதான் நமது பாரம்பரியம் இது வேடிக்கைக்காக கூறவில்லை .. இது வரலாற்று உண்மை!
ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்


அரசாங்கம் கவனிக்க வேண்டிய அதி முக்கிய அம்சங்கள்
பயங்கரமான படுகொலைகளும் பலிகளும் இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தினே தினே அதிகரித்த வண்ணமாக இருக்கிறது
குறைந்தது நாளொன்றுக்கு ஒரு கொலையாவது யாழ்ப்பாணத்தில் நடவாதிருப்பதாக தெரியவில்லை
காலையில் எழுந்து பத்திரிகையை கையில் எடுத்தவுடன் முதல் முதலாக கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்க பட்டிருப்பது கொலை நிகழ்ச்சிதான் , ஒருவன் மாண்டான் ஒருவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்
மற்றோருவன் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் உயிர் துறந்துவிட்டான்
அவனுக்கு மார்பிலே கத்தி குத்து .. இவனுக்கு கழுத்திலே வெட்டு என்ற செய்திகளையெல்லாம் பிரதி தினமும் பத்திரிகைகள் தினமும் பிரசுரித்த வண்ணம் இருக்கின்றான்
அன்பாயும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாக கொண்ட இந்து சமயத்தையும் பௌத்த சமயத்தையும் தழுவியோர் மலிந்துள்ள இத்தீவில் கத்தி குத்துக்களும் கொலைகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்வது அருவருக்கதக்க விஷயம்.
தேசத்திற்கு இதனால் எவ்வளவு கேவலம் வந்துள்ளது என்பதை ஒருவராலும் மிகைப்படுத்தி கூற முடியாது
யாழ்ப்பாணத்திற்கு இருந்த நல்லபெயருக்கும் கீர்த்திக்கும் இக்கொலை நிகழ்ச்சி என்றும் நீங்கா வசையை ஈட்டி கொடுக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
வரவர மாமியார் கழுத்தை போலானாள் என்பதை போல இது காலை யாழ்ப்பாண நகர் வரவர கொலைக்களமாக மாறி வருகின்றது என்றுதானே சொல்லவேண்டும்?
நாகரிக உலகத்தார் பார்த்து வெறுப்போடு பரிகசிக்க தக்கவாறு இத்தீவில் இப்பழிச்செயல்கள் அதிகரித்து விட்டன..
இங்கே நான் கோடிட்டு காட்டியிருப்பது இந்த நீண்ட கட்டுரையின் ஒரு சின்னசிறிய அறிமுக வரிகள்தான் உண்மையில் இது மிகப்பெரிய கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக