வெள்ளி, 22 மார்ச், 2024

நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!

மின்னம்பலம் -indhu  :  The Election Commission allotted the "Mike" symbol to Naam Tamilar Party    
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை இன்று (மார்ச் 22) இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் ஆணையம் ’கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்கியது.
ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணப்பித்தார்கள் எனக்கூறி, கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்தும், கரும்பு விவசாயி சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னம்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக