வெள்ளி, 22 மார்ச், 2024

பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

 மாலை மலர் :  சென்னை பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக