வெள்ளி, 22 மார்ச், 2024

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு-நாளை தீர்ப்பு!

 tamil.oneindia.com  -  Vigneshkumar :  டெல்லி: 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
திமுகவுக்கு மிக பெரிய தலைவலியைக் கொடுத்த வழக்குகளில் முக்கியமானது 2ஜ வழக்கு. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் மத்திய டெலிகாம் துறை அமைச்சராக இருந்தவர் ஆ ராசா.
Delhi HC to pronounce order on CBI s plea against acquittal of A Raja others in 2G case
அப்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்குப் பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.



இருப்பினும், இந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, கனிமொழி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இருந்தது. அவர்கள் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து இருந்தது. சிபிஐ தாக்கல் செய்த அந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

அதாவது மத்திய டெலிகாம் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது சிஏஐ குற்றச்சாட்டு. இதனடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்தது.

அவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2018-ம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

.சிபிஐ மற்றும் அமலாக்க துறை என இரு இந்த தீர்ப்பை எதிர்த்து 2018 மார்ச் 19ஆம் தேதி அமலாக்க துறை சென்னை ஐகோர்ட்டை அணுகியது. மறுநாளே சிபிஐயும் உயர் நீதிமன்றத்தில் அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சரியானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. இந்த வழக்கில் தான் இப்போது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக