வியாழன், 21 மார்ச், 2024

கர்நாடகத்தில் திராவிடக் குரல்கள்!! .. வழக்கறிஞர் அருள்மொழி - திராவிடர் கழகம்

May be an image of 9 people and text

Annamalai Arulmozhi  : கர்நாடகத்தில் திராவிடக் குரல்கள்!!
தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கர்நாடக மாநில மகளிர் கூட்டமைப்பு என்ற அமைப்பு , 2024 மார்ச் 8 ஆம் நாள் கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் நான் தொடக்க உரையாற்றினேன்.
முதல்நாள் இரவே அங்கு சென்று விட்டதால் அந்த அமைப்பினை நடத்தும் பொறுப்பில் இருக்கும் பெண்களோடு உரையாட நேரம் கிடைத்தது. வழக்கறிஞர் மருத்துவர் பேராசிரியர் மற்றும் பல்வேறு பணிகளில் உள்ளவர்கள்  என்றாலும் அவர்களுக்குள் கன்னட மொழியிலும் என்னோடு ஆங்கிலத்திலும் உரையாடினர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கவனித்தால் அதிகமான சொற்கள் தமிழாகவே இருப்பதை உணர முடிந்தது. அதனை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி தமிழும் கன்னடமும் திராவிட மொழிகள்தானே! என்று மகிழ்வோடு கூறி மேலும் ஆர்வமாகக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.

மறுநாள் காலை மார்ச் 8 ஆம் தேதி உடுப்பி டவுன்ஹாலில் கூடிய விழாவில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பலர் கல்லூரி மாணவியர் .
என்னுடைய தொடக்க உரையில்
தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் முதல்நாள் நடந்த உரையாடலையும் திராவிட மொழிகள் திராவிட மாநிலங்கள் பற்றிய கருத்தையும் குறிப்பிட்டபோது அரங்கில் எழுந்த கைதட்டலும் வரவேற்பும் ஆரவாரமும் மகிழ்ச்சி அளித்தன.
மெண்களுக்கு எதிராக இந்தியாவில் அதிகரித்து  வரும் வன்முறைகளையும் அவற்றைத் தடுப்பதற்கு தேவையான நடைமுறைகளைப் பற்றியும் நிர்பயா வழக்கு கத்துவா சிறுமி வழக்கு பில்கிஸ்பானு வழக்கு ஆகியவற்றின் பரிமாணங்களை எடுத்துக்காட்டியபோது உணர்வுப் பூர்வமான ஆதரவுடன் கேட்டார்கள்.
இன்றைய சமூக அரசியல் சூழ்நிலையில் திராவிட மாநிலங்களின் ஒற்றுமையை முன்னெடுக்க வேண்டும்,  அதனை பெண்களால்தான் சாதிக்க முடியும் , ஏனெனில் பெண்கள்தான் எல்லையற்றவர்கள், ஆண்கள் உருவாக்கிய சாதி மத இன மொழிப் பிரிவினைத் தடைகளைத் தாண்டி பெண்களால்தான் சிந்திக்க முடியும் என்றும் தந்தை பெரியாரின் சிந்தனை வழியில்தான்  தடைகளைத் தாண்டி சிந்திக்கும் , செயல்படும் பெண்கள் உருவாக முடியும் என்றும் இந்தியாவில் பெண்களுக்கெதிராக திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தும் மதவெறி அமைப்புகளை பெண்கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினேன். அதுவும் நல்ல வண்ணம் கேட்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதன்மையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன.
படித்த பெண்கள் பலர்  தந்தை பெரியாரைப் பற்றி ஆர்வத்துடன் கேட்கிறார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் திராவிட மாநிலங்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பலத்த கையொலி எழுப்பி வரவேற்றார்கள் .
மூன்றாவது ஒன்றிருக்கிறது. அவர்கள் விழாவை நடத்திய முறை. உரைகளுக் கிடையில் ஒவ்வொரு குழுவும் சொந்தமாகப் பாடல்களைப் பாடுகிறார்கள். நடனமாடுகிறார்கள். அதில் எல்லோரும் இணைந்து கொள்கிறார்கள். சீர்திருத்தக் கருத்துகள் அந்தப் பாடல்களில் ஒலிக்கின்றன. விசில் சத்தம் பறக்கிறது. மனத்தடைகள் தகர்கின்றன.
எனக்கு நெகிழ்ச்சி அளித்தது அவர்கள் வரவேற்றுப் பாராட்டிய முறை .பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள் தங்கள் கைகளால் நூல்வேலைப்பாடு செய்து உருவாக்கிய ஒரு போர்வையை சால்வையாக அணிவித்தார்கள். அதை அவர்கள் வழங்கிய முறை  அதைவிட சிறப்பு. ( புகைப்படத்தில் பாருங்கள்).
இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் மிகச் சிறப்பாக அமைந்தது Women in Black நிகழ்ச்சி. கருப்பு உடைப்  மெண்கள் மாலையில் மெழுகுவத்தி ஏந்திய மனிதச்சங்கிலியாக இரண்டு மணிநேரம் அமைதியாக நின்று பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்த காட்சி.
இந்த நிகழ்ச்சி குறித்து கர்நாடக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதாவது கர்நாடகத்திலும் திராவிடச் சிந்தனைகள் ஒலிக்கின்றன.!!!!!!

Lion Ruso Batcha :  தங்கை Annamalai Arulmozhi ,கர்நாடகத்தில் கருப்பு உடை பெண்கள் என்றதும் நினைவில் வாழும் கர்நாடக வீராங்கனை விசாலாட்சி சிவலிங்கம் அவர்கள் நினைவுக்கு வருகின்றார்கள்.

Mohamed Yousuff :  Annamalai Arulmozhiபாராட்டத்தக்கது

Annamalai Arulmozhi : கர்நாடகத்தில் திராவிடக் குரல்கள்!!
தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கர்நாடக மாநில மகளிர் கூட்டமைப்பு என்ற அமைப்பு , 2024 மார்ச் 8 ஆம் நாள் கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் நான் தொடக்க உரையாற்றினேன்.
முதல்நாள் இரவே அங்கு சென்று விட்டதால் அந்த அமைப்பினை நடத்தும் பொறுப்பில் இருக்கும் பெண்களோடு உரையாட நேரம் கிடைத்தது. வழக்கறிஞர் மருத்துவர் பேராசிரியர் மற்றும் பல்வேறு பணிகளில் உள்ளவர்கள் என்றாலும் அவர்களுக்குள் கன்னட மொழியிலும் என்னோடு ஆங்கிலத்திலும் உரையாடினர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கவனித்தால் அதிகமான சொற்கள் தமிழாகவே இருப்பதை உணர முடிந்தது. அதனை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி தமிழும் கன்னடமும் திராவிட மொழிகள்தானே! என்று மகிழ்வோடு கூறி மேலும் ஆர்வமாகக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.

Gauthaman Munusamy : மிகவும் சிறப்பான நிகழ்வு . அண்டை மாநிலங்களிலும் நம் கோட்டாடுகள் மேலும் பரவுவதில் எல்லையில்லா மகிழ்வு

Bharath Thamizh : விசாலாட்சி சிவலிங்கம் ஞாபகத்துக்கு வருகிறார். உங்களுக்கும் வந்திருப்பார் தோழரம்மா!

DrMeena
மிகவும் சிறப்பு

Swaminathan Devadoss
மானுட பற்றாளர் தந்தை பெரியாரின் சித்தாந்தங்களுக்கு பூகோள எல்லைகள் இல்லை என்ற
நிதர்சனத்தை புரியவைக்கும் தங்களின் கருத்துக்கள். பெரியாரியம் வெல்லும்.
மகிழ்ச்சி!
நன்றி.

Govindaraju Narayanasamy
மிக்க சிறப்பு …. கர்நாடகத்திலும் சகோதரியின் வெள்ளி நாக்கிலிருந்து வெண்கலக் குரல் …ஆங்கிலத்தில் உரையாற்றியிருப்பாரகள் என நினைக்கிறேன் … U Tube ல் இன்னும் உரை வரவில்லை….உரைக்காக காத்திருக்கிறேன் …

Poyyamozhi Radhakrishnan
வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. அறிவு பூர்வமான சிந்தனைகளைத் தூண்டி பெண்கள் மூலம் அவற்றை பரவச் செய்யும் முயற்சி நிலைத்து நிற்பது மட்டுமல்லாமல் குடும்பத்தினருக்கும் வழி காட்டும் வண்ணம் இருக்கும். மிகவும் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக