செவ்வாய், 19 மார்ச், 2024

நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கிய கமல்ஹாசன்! முக்தா ரவி பேட்டி

Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview

tamil.filmibeat.com  -  Mari S :  நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் 'நாயகன்' படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்த படத்தை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆரம்பத்தில் மணிரத்னம் அந்த படத்திற்கு வருவதற்கு முன்பே கமல்ஹாசனை வைத்து காட்ஃபாதர் படத்தை உருவாக்குவது தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் எண்ணமாக இருந்தது என்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து சிவாஜி கணேசன் நடிக்க கால்ஷீட் கொடுத்ததாகவும் முக்தா ரவி கூறியுள்ளார்.
ஆனால், திடீரென கமல்ஹாசன் மணிரத்னத்தை கொண்டு வந்து படத்தையே மாற்றி விட்டார் என்றும் சிவாஜி கணேசனை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார் என்றும் முக்தா ரவி பேசியுள்ளார்.
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview



நாயகன்: 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா சீனிவாசன் தயாரித்து இருந்தார். நாயகன் படத்தில் அப்பா, மகன் என கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து தேசிய விருதை கமல்ஹாசன் வென்றார்.

காட்ஃபாதர் ரீமேக்: நாயகன் படத்தை பார்த்த பலருக்கும் இந்த படம் காட்ஃபாதர் படத்தின் சாயல் இருக்கிறதே என்பதை பளிச்சென கண்டு பிடித்து விடுவார்கள். ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த படமாக இன்று வரை கருதப்படும் காட்ஃபாதர் படத்தில் மர்லன் பிராண்டோ அப்பாவாகவும் அல் பசினோ மகனாகவும் நடித்திருப்பார்கள். அந்த படத்தை கமல்ஹாசனை வைத்து தமிழில் உருவாக்கவே முக்தா ஸ்ரீனிவாஸ் முடிவெடுத்தார் என்றும் அதன் பின்னர் அந்த படம் நாயகனாக மாறிவிட்டது என முக்தா ரவி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview

சிவாஜி நடிக்க வேண்டியது: மர்லன் பிராண்டோ கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க பேசி அவர் கால்ஷீட்டும் ஒதுக்கி விட்டார். ஆனால், கமல்ஹாசன் இந்த படத்தில் அப்பா மற்றும் மகனாக தானே நடிக்கலாம் என நினைத்த நிலையில், சிவாஜியை நீக்கி விட்டு வரதராஜ முதலியார் கதையை கொண்டு வந்து மிக்ஸ் செய்து நாயகனாக மணிரத்னத்தை வைத்து எடுத்து விட்டார் என பகீர் கிளப்பி உள்ளார் முக்தா ரவி.

6 மணி நேர படம்: இந்தியன் 2 மட்டுமல்ல அப்பவே 6 மணி நேர படமாக நாயகன் எடுக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட ரீல்களை ஏப்பம் விட்டு எடுத்துள்ளன்ர். இந்த படத்தை எப்படி 2.25 மணி நேரம் படமாக மாற்றுவது என தெரியாமல் குழம்பிய நிலையில், லெனின் தான் மொத்த படத்தையும் பார்த்து தேவையானவற்றை கட் செய்து படமாக மாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக