சனி, 25 செப்டம்பர், 2021

"நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?"- பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு:  "Do land grabbing courts work?" - Supreme Court ordered to respond!  
சட்ட விரோத நிலங்கள் அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவைத் தமிழ்நாடு அரசு உருவாகியிருந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் என்பது கடந்த 2011- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக, இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்துக் கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு 36 சிறப்பு நில அபகரிப்பு நீதிமன்றங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இது சம்பந்தமான ஒரு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முதல்வர் ஸ்டாலினுக்கு பிகார் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை! ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தாருங்கள்

Velayuthan Murali | Samayam Tamil  : ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அங்கு ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவும் இதே நிலைப்பாட்டில் இருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என, அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சிவகங்கை . 5 வயது சிறுமி மீது மூன்று சிறுவர்கள் பாலியல் பலாத்காரம்

 tamil.asianetnews.com : கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வந்தன. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தகைய கொடுமைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. சிவகங்கையில் நடந்துள்ள இச்செயல் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்  அடுத்த  கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி  திருப்பாச்சேத்தியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அங்கு ஓடிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேருமே சிறுவர்கள் ஆவர். சிறுமியை மீட்டு, மூன்று பொடிசுகளை பிடித்த பொதுமக்கள் அவர்களை திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

மின்னம்பலம் : தமிழ்நாடு நிதி அமைச்சரான பி.டி.ஆர். தியாகராஜன் மீது கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகள் மையம் கொண்டு வருகின்றன.
தன் மீது விமர்சனங்களை வைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் நிதி அமைச்சரும் அதிமுக பிரமுகருமான ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மீது கடுமையான வார்த்தைகளை ஏவிவரும் பிடிஆர், ஒரு ஆங்கில சேனலுக்கு இந்த விவகாரம் பற்றி பேட்டி அளித்ததற்காக திமுகவின் செய்தித் தொடர்பாளரான டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி.யைக் கூட கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் வறுத்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன், பிடிஆர் பற்றிய சில முக்கியமான விஷயங்களை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

  மாலைமலர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால் தான், இந்த முதல்-அமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் - இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

அனுமதியின்றி கோவையில் தார் ஆலை: மிரட்டல் விடும் வடமாநிலத்தவர், பீதியில் மக்கள்!


Akash G - Samayam Tamil : கோவை செட்டிபாளையம் பகுதியில் செயல்படத் துவங்கியுள்ள தார் உற்பத்தி ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கோவை செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் தனியார் தார் உற்பத்தி ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த ஆலை அமைப்பதற்கு பகுதி மக்களிடம் ஆலோசனை எதுவும் நடத்தாமல் ஆலையின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் குடியிருப்புக்கு அருகே தார் உற்பத்தி ஆலை செயல்பட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அதேபோல நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கண்ணகி முருகேசன்.

BBC : தமிழ்நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இனி தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

விஐபி" மகனை தட்டி கேட்டதால் வால்பாறை வன ரேஞ்சர் கைது.. வனத்துறை ஊழியர்கள் போராட்டம்

போராட்டம்
 விஐபி மகனுடன் வாக்குவாதம்
Veerakumar  -   Oneindia Tamil :   கோவை மாவட்டம் வால்பாறை வனச் சரகர் ஜெயச்சந்திரன் என்பவர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக வனத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வால்பாறை வனச்சரகத்தில் ரேஞ்சராக பணியாற்றுபவர் ஜெயச்சந்திரன். இவர் மது போதையில் பணியில் இருந்ததாக கூறி, வால்பாறை போலீசில், சட்டப்பிரிவு 294 பி, 506 (1) மற்றும் 4 (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், வனத் துறையில் ஜெயசந்திரனுடன் பணியாற்றும் ஊழியர்கள், இது பொய் புகார் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
இது தொடர்பாக, பெயர் தெரிவிக்க விரும்பாத, வால்பாறை வனச்சரகத்தில் உள்ள வனத்துறை ஊழியர்கள் சிலர் கூறுகையில், "ஜெயச்சந்திரன் இயல்பாக பணியில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டானவர். வன பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே உறுதியாக இருப்பார்.

மோடியின் அமெரிக்க பயணம்! அலட்சியப்படுத்திய கமலா ஹாரிஸ்!

Modi's US tour! Ignored Kamala Harris!

நக்கீரன்  -இரா. இளையசெல்வன்  :  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி! அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து உரையாடினார் மோடி.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைப் பற்றி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, துணை அதிபருக்குரிய ட்விட்டர் பக்கத்திலோ பதிவு எதையும் வெளியிடவில்லை கமலா ஹாரிஸ். சந்திப்பு முடிந்து பல மணி நேரம் கடந்தும் கூட  எந்த பதிவையும் போடவில்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டுள்ளார்.130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்திருக்கிறார் கமலா ஹாரிஸ்! தவிர்த்ததற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவும் இல்லை.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் மரணம் ! பலர் காயம்!

  கலைஞர் செய்திகள் :    5வது முறையாக துப்பாக்கிச் சூடு; தலைநகரிலேயே மோடி அரசின் லட்சணம் இதுதான்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் நான்கு முறை இதே ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது.
பிரபல தாதாவான ஜிதேந்தர் கோகி குற்ற வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்கு சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கிறார். அப்போது அவரது எதிரிகள் வழக்கறிஞர் உடையில் வந்து ஜிதேந்தரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் ரவுடியை சுட்டவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜிதேந்தர் உட்பட மூவர் பலியானதோடு சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும் நீதிமன்றத்தை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

வடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை

 சினிமா மாலைமலர் : தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகர் வடிவேலுவின் நிலத்தை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டு இருக்கிறார்கள்.
வடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை
வடிவேலு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டுப்பரமக்குடி கிராமத்தில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது.
இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் கிராமத்தில் உள்ளது.
அந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து, அவர்களது முன்னிலையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் 450 ரவுடிகள் கைது

 BBC : தமிழ்நாடு முழுவதும் காவல்துறை நடத்திய சோதனையில் 450 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் ரவுடிகளைத் தேடும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் திடீர் சோதனையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கைகள் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு? இறப்பு விசாரணை அறிக்கை!

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மின்னம்பலம் : திமுகவின் கடலூர் எம்.பி.யான ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் வேலை செய்த தொழிலாளியின் மரண விவகாரத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று பாமக போராடி வருகிறது.
பிரேதப் பரிசோதனை வரட்டும், நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை. .
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திமுக எம்.பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனி. அங்கே மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் முந்திரியை ஹீட் செய்து உடைக்க பதப்படுத்திக் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார். எம்.பிக்கும் நம்பிக்கையானவராக இருந்துவந்தார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் கம்பெனியில் இருந்து முந்திரியைத் திருடி வெளியில் விற்பனை செய்துவந்ததாக தகவல் கேள்விப்பட்ட எம்.பி ரமேஷ், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மாலையில் கம்பெனிக்கு வந்து கோவிந்தராஜை அழைத்து விசாரித்துத் தாக்கியுள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 நக்கீரன் மருத்துவச் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
 மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக மத்திய அரசு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
 இந்த வழக்கு இன்று (24/09/2021) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 27% ஒதுக்கீட்டில் அவமதிப்பு வழக்குத் தொடுத்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டில் உத்தரவு பிறப்பித்தது எப்படி? இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தனது விசாரணை வரம்பை மீறியுள்ளதாகவே பார்க்க முடிகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தேவையில்லை" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இலங்கையின் கல் புத்தகம்... சிங்கள மொழியின் ஆதாரம்?

 செல்லபுரம் வள்ளியம்மை  : இலங்கை பொலநறுவையில்  உள்ள மஹியங்கனை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக  இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில்  நிசங்க மன்னரின்  ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர்  இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில்  3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக  7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது

அசாமில் போலீசார் சுட்டதில் இருவர் உயிரிழப்பு .. கடும் பதற்றம்

 Vigneshkumar  -  Oneindia Tamil  : திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போர் கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு அதில் community farmingஐ மேற்கொள்ளும் புதியதொரு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
இந்தத் திட்டத்திற்காக மாநிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அகற்றும் பணிகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சிபாஜ்ஹார் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை சுமார் 4500 பிகா நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த 800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

வியாழன், 23 செப்டம்பர், 2021

சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...? கானா(Ghana) .. அங்காளம்மா... கார்த்தகீனியா - 23

May be an image of 1 person and standing
May be an image of tree and nature

  புகச்சோவ்  கார்த்தகீனியா - 23 - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...?
கானா(Ghana)   ..  அங்காளம்மா...
            Indigofera tinctoria என்பது அவரி செடியாகும். இது இந்திய, குறிப்பாக தமிழகத்தின் நெசவாளர்கள் ஆதியில் உபயோகித்த நிறச்சாயமாகும். அவரியைப்போன்றே Woad எனும் தாவரத்தை நிறச்சாயமாக எகிப்தியர்கள் உபயோகித்துள்ளனர். கிமு 4500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தின் மம்மிகளை சுற்றும் துணியில் Flax Linen (சணலில் உருவாக்கப்படும் துணி)இந்த சாயத்தை ஊற்றி நிறமேற்றியிருக்கிறார்கள். இந்த Flax லினன் துணிகள் ஜார்ஜியாவில் 30000 வருடங்களுக்கு முன்பே உபயோகத்திலிருந்திருக்கிறது. 9000 வருடங்களுக்கு முன்னர் சிரியா மற்றும் எகிப்திலும், 5000 வருடங்களுக்கு முன்னர் இந்தியா சீனாவிற்கும் பொனீஷியர்களால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
                ஐஸ் ஏஜ் காலத்திற்கு பிறகு உண்டான ஆடையின் முக்கியத்துவம் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி முன்னேறியபோது சாயமேற்றும் கலாச்சாரம் உண்டானது. நெசவாளர்கள் இனக்குழுக்களில் இன்றியமையாதவர் ஆனார்கள். அதில் சாயமேற்றும் முறைகளுக்கு உலகமுழுவதும் உபயோகிக்கப்பட்டவை Terminalia வகை மரங்களாகும்.

10 காண்டெயினர்களை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும்...? குஜராத் - ஆப்கான் போதை கடத்தல் அதானி துறைமுகம் பாஜக அரசு .. கூட்டி கழிச்சு பாருங்க

“10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் பிடித்த மோடி அரசு?” : போதைப் பொருள் கடத்தல் மையமாகிறதா குஜராத்?

கலைஞர் செய்திகள் :நாட்டில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் பதவியை, மோடி அரசு கடந்த 18 மாதங்களாக நிரப்பாமல் உள்ளது ஏன்? என பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் முந்த்ரா துறை முகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 2 ஆயிரத்து 988 கிலோ 21 கிராம் ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள ஒரு முகவரியின் பெயரில் - இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெராயினை, முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (The Directorate of Revenue Intelligence -DRI) கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், போதைப் பொருள் பார்சலில் குறிப்பிட்டிருந்த விஜயவாடா முகவரிக்குச் சென்று, அங்கு வசித்து வந்த வைஷாலி, சென்னையைச் சேர்ந்த அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டி கே எஸ் மீது பி டி ஆர் - சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ஆக்‌ஷன் என்ன?

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?
PTR - DKS- MKS
மின்னம்பலம் : எதிர்க்கட்சிக்காரர்களை கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் விமர்சிக்கும் திமுகவைச் சேர்ந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுகவின் மாநிலங்களவை எம்பி டி.கே.எஸ். இளங்கோவனையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். இது தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் அந்த ட்விட்டர் பதிவை நீக்கியிருக்கிறார் பி.டி.ஆர். தியாகராஜன். இது திமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களாகவே நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் செப்டம்பர் 17 ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய நிதியமைச்சரின் நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் வாய்கிழிய விமர்சிக்கும் பி.டி.ஆர் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு நேரில் ஏன் செல்லவில்லை என்று பாஜகவினரும், அதிமுகவினரும் சமூக தளங்களில் கேள்வி எழுப்பினர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 97,831 வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

 puthiyathalaimurai.com : தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது. முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்

ஸ்டாலினுக்கு துரை வைகோ உருக்கமான கோரிக்கை.. உங்க அண்ணன் தான் வைகோ... அவரை நீங்கதான் அரவணைக்கனும்.

  Oneindia Tamil News :   சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்துக்கொள்ள வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்திருக்கிறார் துரை வைகோ.
சென்னையில் நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், வைகோ பிறந்தநாளை ஆண்டுதோறும் தமிழர் தலை நிமிர்வு நாளாக கொண்டாட வேண்டும் என மதிமுகவினருக்கு துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
மதிமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முப்பெரும் விழா இந்தாண்டு சென்னையில் நடைபெற்றது. ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கூறியிருந்தது போல், மதிமுக முப்பெரும் விழாவுக்கு வைகோவின் மகன் துரை வைகோ தான் தலைமை தாங்கியிருந்தார்.
 உடல்நிலை கருதி வைகோ பங்கேற்க வாய்ப்பில்லை என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.
அதேபோல் தான் நடந்தும் உள்ளது. வைகோ பிறந்தநாள் வைகோ பிறந்தநாள் வைகோவின் பிறந்தநாளான இன்று, அதாவது செப்டம்பர் 22-ம் தேதியை தமிழர் தலை நிமிர்வு நாளாக இனி வருடந்தோறும் கட்சியினர் கொண்டாட வேண்டும் என துரை வைகோ கேட்டுக்கொண்டார்.

இலங்கை தமிழர்களின் பௌத்த அடையாளங்கள் யாழ்ப்பாணம் கந்தர் ஓடை பௌத்த பீடம்

யாழ்ப்பாணம் கந்தரோடை (கந்துருகொட) விகாரைகள்
கந்தர் ஓடை  பௌத்த பீடம்

.tamilmirror.lk/- ஜெரா  :  இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும் பௌத்த மயமாக்கப்பட்டு வருவதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன
இது குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது
வடக்கில் பௌத்தம் நிலவியது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என, வட பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பௌத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே, அது சிங்களவருடையது என்கிற சிந்தனை, நம் மத்தியில் உண்டு.
அரச மரத்தையும் சாந்த முனியையும் பார்த்தவுடனேயே, ஆக்கிரமிப்பின் அடையாளமாக அவற்றை நோக்கும் மனநிலையை, சிங்கள - பௌத்த அரசியல், நம்மில் திணித்துவிட்டிருக்கிறது.  முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால், அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மனநிலையைத் தமிழருக்கு,

இலங்கையின் அரசியல் கற்பித்துவைத்துள்ளது.
ஒரு பெருந் தத்துவம், மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது.

புதன், 22 செப்டம்பர், 2021

மனித உரிமை மீறல், படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்புகூற வேண்டும்- எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி!

elukathir.lk : இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், படுகொலைகளுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்புகூற வேண்டும் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர், அமெரிக்காவின் கைப்பாவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உந்துதலின் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்;று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பானது, கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. 2015ஆம் ஆண்டில் தேர்தலிலும் கூட்டமைப்பின் வாக்குவங்கி சரிவடைந்தது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேசத்திலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புகளுக்கும் இங்கு ஏதாவது ஒரு விடயத்தை விற்பனை செய்யாவிட்டால் அவர்களால் தொடர்ந்தும் இயங்கமுடியாது. கூட்டமைப்பின் பலரது பிள்ளைகள் இன்று மேற்குலக நாடுகளில் உள்ளனர். அவர்களை அங்கு கவனிக்க வேண்டுமென்றால் இங்கு இதுபோன்ற பிரச்சினைகளை விற்பனை செய்ய வேண்டும். அதேபோல வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரிச் சென்றுள்ளவர்கள் இங்கு பிரச்சினை இல்லை என்றால் திருப்பியனுப்பப்படுவார்கள்.

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் - வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: குத்திக்கொன்ற 17 வயது மகள்

BBC : தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 40 வயதாகிறது.
இவர் தன்னுடைய மனைவி இறந்த நிலையில் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். வெங்கேடசனின் மூத்த மகள் சென்னையில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகள் அவலூர்பேட்டையில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மர்மமான முறையில் கத்தியால் மார்பில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தததாகவும், அதைக் கண்ட அவரது இரண்டாவது மகள் அதிர்ச்சியுற்று கூச்சலிட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பம்

 மாலைமலர் :    முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோயிலுக்குள் தலித் குழந்தை நுழைந்ததால் தந்தைக்கு ரூ.23,000 அபராதம்... கர்நாடகாவில்

 Vignesh Selvaraj கலைஞர் செய்திகள்   :  கோயிலுக்குள் தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை நுழைந்ததற்காக அக்குழந்தையின் தந்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ளது மியாபுரா கிராமம்.
அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்றுள்ளார்.
அந்தக் கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்கு ஆதிக்க சாதியினர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று குழந்தைக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
அப்போது அக்குழந்தை கோயிலுக்குள் ஓடிவிட்டுத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், தலித் சமூக குழந்தை கோயிலுக்குள் நுழைந்ததைக் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளனர். தலித் குழந்தை நுழைந்ததால் கோயிலுக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.

3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?

ஆப்கானிஸ்தான் போதைப்பொருள்
ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது
BBC :  இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் சென்னை தம்பதியை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர்.
அந்த கன்டெய்னர்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அதானியின் துறைமுக கண்காணிப்பில் வரலாறு காணாத போதை பொருள் கடத்தல் ... பாஜகவின் இருப்புக்கு போதையடிமைகள் தேவை

May be a Twitter screenshot of 1 person and text that says 'Srivatsa @srivatsayb 35m 59 grams of weed got Rhea jailed with NCB, ED, IT, CBI & Media behind her. BJP's Pamela Goswami was caught with 100 grams of Cocaine. But there was no NCB, ED, CBI case! Now, 3000 kg of Heroin worth ₹21,000 crores seized at Adani's Mundra Port. Where is NCB, ED, CBI & Media?! 86 921 2,225'

காஃபி டே சித்தார்த் தற்கொலையே, ஒரிசா துறைமுகத்தின் லாஜிஸ்டிக்ஸ் அவருடைய கண்ட்ரோலில் இருந்ததுதான்! அதானிக்கு துறைமுகம் கைவசமாகியும், 12600 கோடி மதிப்புள்ள லாஜிஸ்டிக்கல் கார்கோ பிஸ்னஸ் சித்தார்த்தின் கையிலிருந்ததாக சொல்லப்படுகிறது.

 புகச்சோவ்  :     போதை ராஜாங்கம்...!
கொலம்பியா, வெனிசுலாவிற்கு ஏற்றுமதியாகிற பாப்பின்ஸ்கள் வெகுகாலமாக விடுதலைப்புலிகளின் உதவியோடுதான் நடந்தது. அதன்பிறகு பாக்கிஸ்தான் மட்டும் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தது. ஹைக்ளாஸ் மாரிஜுவானா பாப்பின்ஸ்கள் பிஸ்னஸில் கொழிக்கும் பணத்தை இப்போது பங்குபோட தயாராகியுள்ளது இந்தியா!
கடந்த ஆறேழு வருடங்களாக, இந்தியாவின் மூலைமுடுக்குகளிலுள்ள குக்ராமங்களில்கூட, உயர்ரக ஹெராயினும், கொக்கெய்னும், பிரவுன்சுகரும், அபினியும் சரளமாக புழக்கத்திலுள்ளதை, நான்காண்டுகள் முன்பே பதிவுசெய்திருந்தேன். இந்த தாராள புழக்கத்திற்கு காரணம் என்ன!?
அரசியலில் மதவாத பாஜக நீடித்திருப்பதற்கு, போதையடிமைகள் தேவை! அதுபோல, பெருமுதலாளிகளின் அரசாதவுடனான கொள்ளையை, மக்கள் உணராதிருக்கவேண்டுமானால், நாட்டில் அதிரடி நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்கு, இந்தியர்களை கனமான போதையில் வைத்திருப்பதே சிறந்தவழி!
இந்திய மக்கள் அறியாத வரலாற்று புதைமங்கள், ஏகாதிபத்திய சுடுகாடுகளில் உண்டு,

குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஆப்கான் ஹீரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது 21 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதி

 ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ  ஹீரோயின் போதை பொருள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டது  
இதன் பெறுமதி சுமார்  21 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது
தாலிபான்களின் தொழில் அமோகம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தேர்தலில் மீண்டும் வெற்றி! அறுதி பெரும்பான்மை இல்லை ஆனாலும் ஆபத்து இல்லை

BBC : கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி- தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும்

 மாலைமலர் : தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளன.
சென்னை:  தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.
புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ந்தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் நடத்தும் முந்திரி ஆலையில் தொழிலாளி மர்ம மரணம்.. ராமதாஸ் பகீர் புகார்

கடலூர் : கொலை வழக்கில் திமுக எம்பி மீது வழக்கு பதிவு.! - Seithipunal

Velmurugan P   -   Oneindia Tamil :  கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் நடந்த தொழிலாளர் மரணம் தொடர்பாக கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிந்த நிலையில், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலன் தந்த புகாரின் பேரின் பேரில் கடலூர் எம்.பி உள்ளிட்ட 5 பேர் மற்றும் பிறர் மீது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

 மாலைமலர் : தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்கு என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார்.விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
அந்த அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளை பெறுவதற்காக இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர் அனைவர்க்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட்டை ரத்து செய்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்..' ஏகே ராஜன் குழு அறிக்கையின் பரிந்துரைகள்

Vigneshkumar  -  Oneindia Tamil   :  சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கையை எடுக்கத் தொடங்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஏகே ராஜன் குழு ஏகே ராஜன் குழு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் நீட் ரத்தை ஒரு வாக்குறுதியாகவே திமுக அளித்திருந்தது.

நீட் எதிர்ப்பில் முன்னோடியான தமிழ்நாடு : மேற்குவங்கத்தில் ஆர்ப்பாட்டம்!

நீட் எதிர்ப்பில் முன்னோடியான தமிழ்நாடு : மேற்குவங்கத்தில் ஆர்ப்பாட்டம்!

மின்னம்பலம் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்று, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு நீட் தேர்வுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பது போன்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு மட்டுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மற்ற மாநிலங்களில் ஆதரவு இருக்கிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவினரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோ, கொல்கத்தாவில் கடந்த சனிக்கிழமை, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

திங்கள், 20 செப்டம்பர், 2021

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - 20.9.1924. to 20.9.1024 ஆர் பாலகிருஷ்ணன்

May be an image of 1 person
May be an image of text that says 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் ஆர். பாலகிருஷ்ணள்'

Subashini Thf  : Illustrated London News ஆய்விதழில் சர் ஜோன் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924. அதாவது இதே இன்றைய நாள். வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓரு நாள்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - புத்தக விமர்சனம்
நூல் : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
நூலாசிரியர்:  ஆர் பாலகிருஷ்ணன் இஆப  : தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இன்று பரவலாகத் தமிழ் மக்கள் சூழலில் எழுந்துள்ளது.
இந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் தற்காலம் வரத்தொடங்கியுள்ளன.
அத்தகைய முயற்சிகளில் சிந்துவெளி பண்பாடு, வரலாறுபற்றியன தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து வெளிவரும் நூல் முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. 

சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு! ஐ நாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

BBC :  'இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர், அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, ஐநா தலைமையகத்தில், பொதுச் செயலாளரை நேற்றைய தினம் (செப்டம்பர் 19) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தந்தி டிவி : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது உள்ளிட்டவையை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதேபோல் சென்னை மயிலாப்பூரில் மக்களவை எம்.பி கனிமொழி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கனிமொழி, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு கட்டாயம் உள்ளிட்டவையை கொண்டு வந்து மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் அந்த அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாராயணபுரம்

மலைத்தொடர்
விகடன் - அ.கண்ணதாசன்  : மலைத்தொடர்..    புதிய கற்காலத்தில், மிகப்பெரிய இனக்குழுவாக இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள், தங்களின் ஆயுதங்களைத் தீட்டுவதற்காகப் பயன்படுத்திய இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கப் பெறும் ஒவ்வொரு தொல்லியல் பொருளும், சின்னங்களும் ஓவியங்களும் நம்மிடையே வியப்பை ஏற்படுத்துவதோடு,
நம் முன்னோர்களின் பண்டைய கால வாழ்வியலை மேன்மேலும் எடுத்துரைத்து வருகின்றன. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாராயணபுரம் பகுதியில் உள்ள மலைக்குன்று ஒன்றில் புதிய கற்கால மனிதர்கள் தங்களுடைய ஆயுதங்களைக் கூர்மை செய்வதற்காக (பட்டை தீட்டுதல்) பயன்படுத்திய இடம் கண்டறியப்பட்டுள்ளது.
கருவிகளைப் பட்டை தீட்டிய போது ஏற்பட்ட அக்குழிகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தாய் தந்தை உட்பட 11 பேர் மீது வழக்கு

 siva| - வெப்துனியா : நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதும் இவரது படம் மிகப் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்
இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தந்தை தாய் ஆகிய இருவர் கூட தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவுக்குள் பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்?

மத்திய அமெரிக்க குடியேறிகள்

BBC : அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள். இவர்களை திருப்பும் அனுப்பும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த பணி எட்டு நாட்கள்வரை ஆகலாம் என்று அதிகாரிகள் அசோசியேட்டட் பிரெஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவின் விவகார வீடியோ! அவர் இல்லையாம்!

Vigneshkumar - Oneindia Tamil :   பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா. இவர் கடந்த 2011-2012 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்துள்ளார்.
அதேபோல 2014ஆம் ஆண்டு முதல் ரயில்வே தொடங்கி சட்டத்துறை என பல்வேறு அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் சதானந்த கவுடா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
கர்நாடக பாஜகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான 69 வயதாகும் சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ நேற்று மாலை இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

எம்ஜியார் அடியாள்ன்னா சும்மாவா? ஒரு சாராய ரவுடிக்கு கஜானாவை திறந்து விட்ட பொன்மன பம்மல்


 ஆலஞ்சியார் 
:   கோவில் ஆக்ரமிப்புகள் அகற்றபட்டும், அத்துமீறி கையகபடுத்தியவை மீட்கபட்டும் வருகின்றன ..வக்ப் நிலங்கள் பெருமளவில் சிலரின் ஆதிக்கத்தில் இருப்பது கண்டறியபட்டிருக்கிறது விரைந்து மீட்கபடும்.. கல்விச்சாலைகள் ஆக்ரமிப்புகள்  மீட்கபடுவது மகிழ்ச்சி தருகிறது ..சரியான நபரிடம் ஆட்சியை தந்திருக்கிறார்கள் மக்கள்
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கொப்ப அறநெறிமாறாத அரசு அமைந்திருக்கிறது ..
.ஜேப்பியார் ..
எம்ஜிஆரின் அடியாள் என்று அறியபட்டவர் யாரையாவது மிரட்ட வேண்டுமெனில் ஜேப்பியாரை தான் எம்ஜிஆர் அனுப்புவார்..
ஜெயலலிதா குடும்பவாழ்க்கைக்கு ஆசைபட்டு சோபன்பாபுவோடு இருந்தபோது அவரை மீடக ஜேப்பியாரைதான் அனுப்பினார்  அதை ஜேப்பியாரே சொல்லியும் இருக்கிறார் ..
இடையில் அடைக்கலம் தந்த ஜெய்சங்கரிடமிருந்து மீட்டு ஒரிரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு எம்ஜிஆரிடம் சேர்த்ததாக அவர் எழுதியது ஞாபகம் வருகிறது ..

ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு தாலிபான் தடை விதித்தது

காபூலில் ஒரு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்.

BBC :  வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள்.
ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர்.
'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுமி பிபிசியிடம் தெரிவித்தார். மற்ற மாணவிகளோ அவர்கள் வாழ்வு நாசமாக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபன்கள், பெண்களை பள்ளி சென்று படிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர்.

தலிபான் + புலி பயங்கரவாதத்திற்கும் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நியமனத்திற்கும் தொடர்பு உண்டா

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்: உலகளாவிய பின்னணி!

மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்த ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது.
ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு அதேநேரம் தமிழ்நாட்டின் ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடனே முதல் சந்தேகத்தை எழுப்பியவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
“ கல்வியாளர்கள், அரசியல் சட்ட நிபுணர்களையே ஆளுநர்களாக நியமித்து வந்த நிலையில் பாஜக அரசு இந்த மரபில் மாற்றம் கொண்டுவந்து காவல்துறை அதிகாரிகளையும் உளவுத் துறை அதிகாரிகளையும் ஆளுநர்களாக நியமிக்கிறது. இது ஜனநாயக கோட்பாட்டுக்கு சரியானதாக தெரியவில்லை. ஏற்கனவே புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான கிரண் பேடியை துணைநிலை ஆளுநராக நியமித்து அவர் மூலம் அங்கே இருந்த ஜனநாயக ரீதியான காங்கிரஸ் அரசுக்கு தொந்தரவு கொடுத்தது பாஜக. இப்போது அதே போல உளவுத்துறை பின்னணியைக் கொண்ட ரவீந்திர நாராயண ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் கே எஸ் அழகிரி.

பஞ்சாப் மாநில முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி ( தலித் சீக்கியர்)! Saranjit Singh Sunny elected Punjab Chief Minister

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியையும், தனது தலைமையிலான அமைச்சரவையையும் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் நேரில் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, இன்று (19/09/2021) பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை (58 வயது) சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசியல் தலைவர்களின் யூடியூப் வருமானம் ஒரு பார்வை.

யூடியூப் வருமானம்

Vikatan : சமீபத்தில் நிதின் கட்கரி யூடியூப் தனக்கு மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் வரும் என்று தெரிவித்திருந்தார். மற்ற அரசியல் தலைவர்களின் யூடியூப் வருமானம் ஒரு பார்வை.
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது கொரோனா கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கொரோனா பொது முடக்க காலத்தில் நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன். ஒன்று வீட்டில் சமையல் செய்யத் தொடங்கினேன். இரண்டாவது கருத்தரங்கங்களை இணையவழியில் நடத்தினேன் என்றார்.
அந்த அனைத்து இணையவழி கருத்தரங்கங்களின் வீடியோக்களையும் எனது யூடியூப் சேனலில் வெளியிட்டேன்.
அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிகளவிலானப் பார்வையாளர்கள் அந்த வீடியோக்களைப் பார்த்தனர்.
இதனால் யூடியூப்பில் இருந்து வருமானம் வரத் தொடங்கியது. தற்போது ஒவ்வொரு மாதமும் யூடியூப்பில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் வருகிறது என்று பேசியிருந்தார்.

நீட் தற்கொலை: வேலூர் செளந்தர்யாவின் கலைந்து போன கனவு - இதுவரை 16 மாணவர்கள் பலி

நீட் மரணங்கள்

நடராஜன் சுந்தர்  -      பிபிசி தமிழுக்காக  :  நான்கு பெண் பிள்ளைகளில் முதல் மூவரும் படிக்கவில்லை, கடைசி பிள்ளையின் மருத்துவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் யாருக்காக அவர்கள் கஷ்டப்பட்டார்களோ அந்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டார். வேலூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் குடும்பம், அவர்கள் கண்ட கனவு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த ஞாயிறு (செப்டம்பர் 12) அன்று நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம்! தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு

 மாலைமலர் : தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
ஒன்றிய  அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பத்தை சேர்க்கும்படி முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், தமிழர்களின் வீர விளையாட்டான  சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த  பெருமை எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்.