திங்கள், 20 செப்டம்பர், 2021

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தந்தி டிவி : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது உள்ளிட்டவையை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதேபோல் சென்னை மயிலாப்பூரில் மக்களவை எம்.பி கனிமொழி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கனிமொழி, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு கட்டாயம் உள்ளிட்டவையை கொண்டு வந்து மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் அந்த அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக