வியாழன், 23 செப்டம்பர், 2021

சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...? கானா(Ghana) .. அங்காளம்மா... கார்த்தகீனியா - 23

May be an image of 1 person and standing
May be an image of tree and nature

  புகச்சோவ்  கார்த்தகீனியா - 23 - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...?
கானா(Ghana)   ..  அங்காளம்மா...
            Indigofera tinctoria என்பது அவரி செடியாகும். இது இந்திய, குறிப்பாக தமிழகத்தின் நெசவாளர்கள் ஆதியில் உபயோகித்த நிறச்சாயமாகும். அவரியைப்போன்றே Woad எனும் தாவரத்தை நிறச்சாயமாக எகிப்தியர்கள் உபயோகித்துள்ளனர். கிமு 4500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தின் மம்மிகளை சுற்றும் துணியில் Flax Linen (சணலில் உருவாக்கப்படும் துணி)இந்த சாயத்தை ஊற்றி நிறமேற்றியிருக்கிறார்கள். இந்த Flax லினன் துணிகள் ஜார்ஜியாவில் 30000 வருடங்களுக்கு முன்பே உபயோகத்திலிருந்திருக்கிறது. 9000 வருடங்களுக்கு முன்னர் சிரியா மற்றும் எகிப்திலும், 5000 வருடங்களுக்கு முன்னர் இந்தியா சீனாவிற்கும் பொனீஷியர்களால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
                ஐஸ் ஏஜ் காலத்திற்கு பிறகு உண்டான ஆடையின் முக்கியத்துவம் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி முன்னேறியபோது சாயமேற்றும் கலாச்சாரம் உண்டானது. நெசவாளர்கள் இனக்குழுக்களில் இன்றியமையாதவர் ஆனார்கள். அதில் சாயமேற்றும் முறைகளுக்கு உலகமுழுவதும் உபயோகிக்கப்பட்டவை Terminalia வகை மரங்களாகும்.


Terminalia latifolia - வெக்காலி, நுன்னறா
Terminalia eliptica(Arjuna) - மருத மரம்
Terminalia chebula - கடுக்காய் மரம்
Terminalia macroptera - கருமருது(போதி)
Terminalia avicemioides - மகாகனி
மற்றும்
Compretum glutinosum - கண்டகரா ஆகிய மரவகைகளாகும்.
                இதில் Terminalia macroptera எனும் கருமருது மரமான போதியின் கீழேதான் புத்தனுக்கு ஞானோதயம் கிடைத்ததாக தேராவத பௌத்தம் கூறுகிறது. ஆப்ரிக்காவின் பெரும்பான்மை நாடுகளில் மருதமரத்துக்கு போதி(Bodhi),பூதி (Boodhi),பூதேவி(Bodhevi)என்றே பெயர். கானாவின் 30 சிற்றரசுகளிலும் மருதமரங்களை மருத்துவத்துக்காகவும் மற்றும் சாயம் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.
          தோழர் Manickvelu Manickamsako Mani அவர்கள் காற்றின் தன்மையை அறிய தமிழர்கள் கைக்கொண்ட வழியென்ன என்று கேட்டிருந்தார். கருமருதுவின் இலைகளின் பின்பக்கம் காற்றின் ஆக்ஸிஜன் அளவை பொறுத்து கரும்பச்சை, கருநீல நிறத்துக்கு மாறும் தன்மைகொண்டது. மேற்காப்ரிக்கர்கள் முன்னோர் வழிபாட்டில் மருதமரத்துக்கும்
வெக்காலி மரத்துக்கும் பெரும்பங்குண்டு
பாம்பராவில் நடக்கும் விழாக்களில் வெக்காலி,மருதமரங்களின் அடியில்தான் படையலிடுகின்றனர்.
              Bogolanfini எனும் துணிவகை ஆப்ரிக்காவில் பிரபலமானது.இதன் சாயமேற்றும் முறை Mud cloth எனப்படும்
களிமண்ணை Fermentation செய்வதன் மூலம் மஞ்சள் நிறமேற்றப்பட்டு பிறகு Angoulemme or n'galama எனும் வெக்காலி மர இலை,பூக்களை அரைத்து உருவாக்கப்படும் பலவித வர்ணங்களை கொண்டு சித்திரங்கள் வரைகின்றனர். பிறகு ப்ளீச் செய்வதன் மூலம் இடையிலிருக்கும் மஞ்சள் நிறத்தை அகற்றிவிடுகிறார்கள்.துணியின் அடிப்பாகம் அலசலுக்குப்பிறகு வெளிறிய ஊதாநிறத்தையடைகிறது.
                 அங்காளம்மா மரம் என ஆப்ரிக்கர்களால் அழைக்கப்படும் வெக்காலி மரம் கிபி 750 ல் கானாவின் மன்னனான காயாமகன் என்பவனால் வெட்டப்படக்கூடாத மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம்ப மருது சகோதரர்கள் கதையை ஒத்திருக்கிறது. நெசவாளர்கள் வசிக்கிற இடமெல்லாம் அங்காளம்மா மரமும், மருதமரமும் போற்றி வளர்க்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கிமு 600 ல் அங்காளம்ம என்றொரு பகுதியில் சாயமேற்று நிலையம் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.
                     நம்ப மருதாசலங்காவில் தலமரமாக மருதுதான் உள்ளது. நமது அம்மன் சாமிகளான அங்காளம்மனும், வெக்காலியம்மனும் ஆதிகாலத்தில் நெசவுத்தொழில் அதிகமாக நடந்துவந்த பகுதிகளில்தான் அதிகமாக வீற்றிருப்பதை காணலாம்.  முன்னோர் வழிபாடுகளில் ஆடு,கோழிகளை செனகல் பகுதி மக்கள் பலிகொடுப்பதை போலவே மேல்மலையனூர் மற்றும் பாண்டியில் அங்காளம்மனுக்கு பலிகொடுக்கும் வழக்கமுள்ளது. மயானக்கொள்ளை என்று அதற்குபெயர்
                   இந்தியாவில் Terminalia chebula எனும் கடுக்காய் மரம் சாயமேற்றுதலில் அதிகமாக பயன்படுகிறது. காளஹஸ்தி, சிக்கநாய்கன்பேட்,ஆரணி,காஞ்சியில் வெக்காலி மற்றும் மருதமரங்கள் சாயமேற்றுதலுக்கு பயன்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்,திருவண்ணாமலை பகுதிகளில் இவை அதிகமுள்ளன. திருப்பெரும்புதூரில் மருதமரங்களை நான் கண்டுள்ளேன்.
         Angalemme,Angoulemme,n'galama எனும் ஆப்ரிக்க சொல்லில் தமிழகத்து வேர் உள்ளது மறுக்கமுடியாத உண்மை. வெக்காலி மரத்தின் ஒருவகை Kantakara எனப்படும் இதன் தமிழ்பெயர் தெரியவில்லை. ஆண்மையுணர்ச்சிக்கு இம்மரத்தின் காய்களை அரைத்து தேனீர் போன்று ஆப்ரிக்கர்கள் அருந்துகின்றனர்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் சங்கராபரணி நதிக்கரையில் அமைந்திருப்பதுபோல் ஆப்ரிக்காவின் பாம்பராவிலுள்ள சங்கராணி நதிக்கரையில்தான் போகலன்பினி முன்னோர் வழிபாட்டு திருவிழா நடக்கிறது. இதில் மரக்கா சோனகர்கள் முகமூடியணிந்த வேடமிட்டு கேரளத்தின் கதகளிபோன்ற நடனமொன்றை ஆடுகின்றனர். கதை பாடுபவர் நிறுத்தியதும் ஆடுபவர் ஆட்டத்தை தொடங்குவார். ஆட்டத்தை நிறுத்தியதும் கதை சொல்பவர் பாட ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட கதகளி,ஓட்டந்துள்ளல், காணியாட்டம் போல இருக்கிறது.
சில Terminalia வகை மரங்களின் படங்கள் மருது,கருமருது,வெக்காலி, கடுக்காய்,கண்டகரா கீழே தரப்பட்டுள்ளது.....   May be an image of tree and nature

May be an image of natureMay be an image of bird, nature and tree

No photo description available.

 May be an image of nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக