வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை

 சினிமா மாலைமலர் : தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகர் வடிவேலுவின் நிலத்தை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டு இருக்கிறார்கள்.
வடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை
வடிவேலு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டுப்பரமக்குடி கிராமத்தில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது.
இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் கிராமத்தில் உள்ளது.
அந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து, அவர்களது முன்னிலையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது.



மேலும் அந்த இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக