ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தமிழ்நாட்டின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம்! தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு

 மாலைமலர் : தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
ஒன்றிய  அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பத்தை சேர்க்கும்படி முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், தமிழர்களின் வீர விளையாட்டான  சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த  பெருமை எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக