மின்னம்பலம் :இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம், இனி மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு ரூ.108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.
இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
சனி, 28 ஆகஸ்ட், 2021
இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்! அகதிகள் முகாம், இனி மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும்
ஜால்றா போடுவோர்க்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை : தலைவர்கள் புகழ் பாடாதீர்கள்.. நடவடிக்கை எடுப்பேன்!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கடுத்த நாளான 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று (27/8/2021) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தொடக்க நாளிலேயே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதேபோல் அமைச்சர்களுக்கும் எனது கண்டிப்பான வேண்டுகோள். நீங்கள் பதிலளிக்கும் நேரத்தில் உங்களது உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நம்முடைய முன்னோடிகளின் பெயர்களை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. பதில் அளித்து பேசுவதற்கு கூட சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கேள்வி நேரத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.
எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி!
மின்னம்பலம் : எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி செய்து தரப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (ஆகஸ்ட் 28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “நாகை, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 100 சதவிகித மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நுண்ணீர் பாசன வசதி செய்து தரப்படும். 'விவசாயிகளுடன் ஒரு நாள்' எனும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். இதன்மூலம் அந்தந்த பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு அதைத் தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.
புதிய மேம்பாலம் இடிந்து விழுந்தது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு
மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும், நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ஒரு தூணிலிருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் சிக்கினர்.
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கமும், டெல்லி பல்கலைக்கழகத்தின் விளக்கமும்; – ஒரு பார்வை
தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி, வங்க எழுத்தாளர் மறைந்த மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகள் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன. பாமாவின் ‘சங்கதி’, சுகிர்தராணியின் ‘கைம்மாறு’, ‘என்னுடல்’ ஆகிய படைப்புகளும் வங்க எழுத்தாளர் மறைந்த மகாஸ்வேதாதா தேவியின் ‘திரௌபதி’ என்ற படைப்பும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றைப் பல்கலைக்கழகம் திடீரென நீக்கியிருக்கிறது.
‘இந்தப் படைப்புகளைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கும் முடிவை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக்குழு எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு, பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக்குழு உறுப்பினர்கள் 15 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி இந்தப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களுக்குத் தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன’ என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம்- சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்பு
மாலைமலர் : திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம்- சட்டசபையில்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதற்கு காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க, ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்த நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க எதிர்ப்புதெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் எண்டமிக் நிலையை அடைந்துவிட்டதா இந்தியா? நிபுணர்கள் தரும் விளக்கம்
பிபிசியின் சோயா மாட்டீன் எண்டமிக் நிலை இந்தியாவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்று ஆராய்கிறார்.
ஒரு நோயின் எண்டமிக் கட்டம் என்று எதை சொல்கிறோம்?
ஒரு நோய் குறிப்பிட்ட பகுதியைவிட்டு நீங்காமல் இருந்தாலும் அதன் தாக்கம் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் நிலையை அடைவதையே எண்டமிக் என்கிறோம்.
இந்தியா கொரோனா வைரசின் ஒருவித எண்டமிக் நிலையை அடைந்திருப்பதாக செளமியா சுவாமிநாதன் தெரிவித்த இந்த கூற்று, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி கொரோனா முடக்கநிலை கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் சூழலில் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை இருந்த நிலையில் தற்போது அது 25 ஆயிரமாக குறைந்துள்ளது.
மதன் ரவிச்சந்திரன் சேகரித்த பல ஆதாரங்களும் பலே வீடியோக்களும் 3 TB ஹார்டு டிஸ்க் சிக்கியது?
Balasubramania Adityan T திடீர் திருப்பம்... மதன் ரவிச்சந்திரன் கொளுத்திப் போட்ட ஊசி வெடிகளாலும், கொளுத்திப் போட உள்ள அணுகுண்டுகளாலும் மொத்த ஆர்எஸ்எஸ் கழக சிண்டிகேட்டே ஆடிப் போய் உள்ளது.
இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரனை மாஜி ஐபிஎஸ் கூலிப்படைகளை வைத்து தேடிக் கொண்டு உள்ளனர் சிண்டிகேட்டுகள்.
இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சேகரித்த பயங்கர ஆதாரங்களேம், பலே வீடியோக்களும் சிண்டிகேட்களால் அபகரிக்கப்பட்டு விடக்கூடாது எனும் பொது நல நோக்கிலும், மூத்த பத்திரிக்கையாளர் குடும்பம் என்கிற முறையிலும் என்னிடம் ஒரு நண்பர் மூலமாக 3 TB ஹார்டு டிஸ்க்கை கொடுத்து உள்ளார்.
நேற்று இரவு தூங்காமல் பல ஆவணங்களை கண்டு என் தூக்கமும் தொலைத்து விட்டது. இந்த ஆவணங்களுக்கும் பங்கம் வந்து விடக்கூடாது என்று என் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி பாதுகாக்க சொல்லி உள்ளேன்.
பெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது: சீமான் அறிவுரை
Rayar A - e Oneindia Tamil News : நெல்லை: பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது என்று நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக நெல்லையில் நிருபர்களிடம் பேட்டியளித்த சீமான் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் .
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை தமிழக அரசு மூட வேண்டும்.
இந்த சிறப்பு முகாம்களை அமைத்தது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான். 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் கால தாமதமானது.
இருப்பினும் அதனை வரவேற்கிறோம்.
கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்: மேல் விசாரணை நடத்த போலீஸுக்கு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றம்
Shyamsundar - Oneindia Tamil News : சென்னை: கோடநாடு வழக்கில் போலீசுக்கு மேல் விசாரணைநடத்த அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் சயான், தன்பால் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலங்கள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் மீண்டும் மறுவிசாரணை செய்து வருகிறது.
பெயிலில் வெளியே வந்து ஊட்டியில் இருக்கும் சயானிடம் ஏற்கனவே ஊட்டி போலீசார் கடந்த வாரம் மறுவாக்குமூலம் வாங்கிவிட்டனர். அதேபோல் தனபாலிடமும் வாக்குமூலம் வாங்கிவிட்டனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடப்பதாக இருந்தது.
இவர்கள் வழங்கிய வாக்குமூலம் இன்று ஊட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு சயான் இன்று நீதிமன்றத்திலும் முக்கிய வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மொத்தமாக ஊட்டி நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் இன்று கோர்ட்டில் விசாரணை நடத்தப்படாமல் வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்க.. தாலிபான்களிடம் உதவி கேட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்?.. Jaish-e-Mohammed Masood met taliban, Seeks ‘Help’ In Kashmir:
Rayar A - e Oneindia Tamil News காபூல்: இந்தியாவுக்கு ஒருபக்கம் பாகிஸ்தான் எல்லைகளை அத்துமீறியும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் மூக்கை நுழைத்தும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.
மற்றொரு புறம் சீனாவும் எல்லையில் பிரச்சினையை கிளப்பி வருகிறது.
நிலைமை இப்படி இருக்க ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியாவுக்கு கூடுதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் காலூன்றிய பிறகு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஊகங்கள் கிளம்பி வருகின்றன.
இந்த நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மவுலானா மசூத் அசார் தாலிபான்ககளை சந்தித்தாக தகவல்கள் கூறுகின்றன
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த ஆப்கானின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கீனா கர்கரை திருப்பி அனுப்பிய பாஜக அரசு
யவன குமாரன் : மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கீனா கர்கரை 20 மணி நேரம் அலைக்கழித்து டெல்லிக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறது இந்திய ஒன்றியம்.
ஒரு பெண் MP அதுவும் டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்.ஏன்?
ஏனென்றால் ஆப்கான் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்தியா புகலிடம் தரக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளது தாலிபான்.
தொடைநடுங்கி மோடியின் அரசும் உத்தரவு எசமான் என்று தாழ் பணிந்துள்ளது.
போகும்போது இது மஹாத்மா காந்தியின் இந்தியா அல்ல என்று கூறி காறி துப்பி விட்டு போயிருக்கிறார்.உண்மைதானே அவரை கொன்ற கோட்ஸே கூட்டத்தின் கையில் அல்லவா இப்போது இந்தியா சிக்கியிருக்கிறது.
ரோலிங் ஸ்டோன் ஊடகமும் எஞ்சாமி எஞ்சாமி அறிவும்
Kay Vee : செல்லாது செல்லாது =
ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் இந்திய பதிப்பு இன்று அறிவு புகைப்படத்துடன் ஒரு Digital Cover வெளியிட்டுள்ளது .
அதாவது இந்த அட்டைப்படம் அச்சில் வராது ஆனால் அவர்களின் சமூக வலைதளத்தில் வரும் . இது வழக்கமான ‘மக்கள் தொடர்பு’ கண்துடைப்பு என்பதை தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.
புதிதாக பாடல் வெளிவரும் சமயம் இது போன்ற அட்டைப்படம் வருவது இயல்புதான் என்று ஒரு சாரார் கூறுகின்றனர் .
( புதிய சினிமா படம் வெளியாகும் போது அந்த நடிகரின் பேட்டி பல ஊடகங்களில் வருமே அது போல ) . ஆனால் அப்படியான கட்டுரையை அந்த எல்லையோடு அதாவது புதிய பாடலை புரமோட் செய்வதோடு நிறுத்தியிருக்க வேண்டும் .
ஒட்டு மொத்த தமிழ் பாடகர்கள் குறித்தும் அறிவு குறித்தும் அவர் பங்களிப்பு குறித்தும் சிலாகித்து எழுதிவிட்டு படம் மட்டும் போடாதது தான் glaring omission .
கல்யாண வீட்டில் ஒன்று மொய் வாங்காமல் ஒருக்க வேண்டும் அல்லது அப்படி வாங்கினால் மொய் வைத்தவர் பெயர் அறிவிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு புரமோவை ஒரு பத்தி அல்லது கவர் ஸ்டோரி போலவோ காட்ட முயற்சித்திருக்கக்கூடாது .
நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 படப்பிடிப்புக்கு மீண்டும் ஆரம்பம்! ரெட் கார்டு நீக்கம்… உற்சாகத்தில் வடிவேலு! நடந்தது என்ன?
தினகரன் :சென்னை: நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 திரைப்படத்தின் பிரச்சனை தீர்ந்தது. நடிகர் வடிவேலு, தயாரிப்பு நிறுவனம் எஸ் பிக்சர்ஸ் இடையிலான பிரச்சனை தீர்ந்தது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி என படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நடைபெறவில்லை. வடிவேலு, எஸ் பிக்சர்ஸ் பிரச்சனை தீர்ந்தால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது
விகடன் நா.கதிர்வேலன் அதியமான் ப : இன்று லைகா நிறுவனத்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டதால் நெடுநாளாக நீடித்துவந்த இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது.
‘வடிவேலு ரிட்டன்ஸ் எப்போது?!’ கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் பலரது கேள்வியாகவும், விருப்பமாகவும் இருந்து வருகிறது. அவரது ஆள் டைம் ஹிட்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் மீம் டெம்ப்ளேட்களில் வலம்வந்துகொண்டிருந்த வடிவேலுவின் ரியாக்ஷன்களுக்கும் வெர்ஷன் 2.0 வரப்போகிறது.
ஆம், வடிவேலுவின் டரியல் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.
23ம் புலிகேசி வெற்றிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய 24ம் புலிகேசி திரைப்படம் பல்வேறு தயாரிப்பு சிக்கல்களால் நின்றுபோனது. இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தினர் இடையே மோதல் நிலவிவந்தது.
இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு- புதிய வீடுகள், கல்வி உதவி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாலைமலர் : 1983-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
“கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று வெளியிட நான் விரும்புகிறேன்.
இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.
ஆப்கானிஸ்தானில் கனடா பிரான்ஸ் மக்களை மீட்கும் பணி இன்றோடு நிறுத்தம்
தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை அழைத்து வரும் பணியை இன்று மாலைக்குப் பிறகு தொடர முடியாது என கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் அறிவித்துள்ளது.
பாரிஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து, அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது.
அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் அந்த நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள், விமானம் மூலமாக தங்கள் நாட்டு மக்களையும், தகுதி உள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
மேலும் வரும் 31 ஆம் தேதியோடு ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணி நிறுத்தப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கவும், மக்களை வெளியேற்றவும் அனுமதிக்க முடியாது என்று தலீபான் தரப்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு தமிழ்நாடு பற்றிய சரியான புரிதல் இல்லை?
Kandasamy Mariyappan : தமிழ்நாட்டில் 90s kidsன் புரிதல், சற்றே வேதனை தரக்கூடியதாக உள்ளது.
இன்றைய தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார நிலையை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்து, நாம் இன்னும் வளர்ச்சியடையவே இல்லை என்றும், நமது அரசியல் தலைவர்களின் ஊழல்தான் இதற்கு காரணம் என்றும் அவர்களை குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்புடன் இருப்பதை காண முடிகிறது.
அந்த இளைஞர்களுக்கு, நான் மூன்று விஷயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
1. தயவுசெய்து இந்திய ஒன்றியத்தின் வடக்கு பகுதிகளுக்கு சென்று வாருங்கள். அல்லது அவர்களுடைய கல்வி, மருத்துவ, சமூக, பொருளாதார குறியீட்டை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
2. இன்று நீங்கள் பழம் பறித்து சாப்பிடும் இந்த பழத்தோட்டம், ஏதோ 60வதே மாதங்களில் உருவாக்கிய பழத்தோட்டம் இல்லை.
1912 முதல் பல தலைவர்களால், குச்சிகளை வேலியாக்கி, மண்குடத்தால் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்க்கப்பட்ட பழத்தோட்டம்.
இடையிடையே திரு. ராஜகோபால் போன்ற வெள்ளாடுகள் அவ்வப்பொழுது தோட்டத்தில் புகுந்த பொழுதும், பெரியார் என்ற கைத்தடி கொண்டு விரட்டி விட்டு, வளர்த்த பழத்தோட்டம்.
காபூல் விமான நிலையத்தை தாக்கிய ஐஎஸ்-கோரஷான்! தாலிபான்களின் திடீர் எதிரி.?. யார் இவர்கள்?
Shyamsundar - Oneindia Tamil News காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாலிபான்களையும், அமெரிக்க படைகளையும் இந்த அமைப்பு எதிர்த்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதோடு 80க்கும் அதிகமான நபர்கள் இதில் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க படையினர் 12 பேர் வரை இதில் மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பிற்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை.
இது ஐஎஸ் அமைப்பின் கிளைஅமைப்பு நடத்திய தாக்குதல் என்று தகவல் வருகிறது.
காபூல் குண்டுவெடிப்புகளில் 60 பேர் பலி, 140 பேர் காயம்: நடந்தது என்ன?
BBC : ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலின் விமான நிலையத்தில் நேற்று மாலை நேரத்தில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் 140 பேர் காயமடைந்தனர்.
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும்.
இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.
வியாழன், 26 ஆகஸ்ட், 2021
கே.டி. ராகவன் - அண்ணாமலை மீது மதன் ரவிச்சந்திரன் அடுக்கும் புகார்கள் - புதிய ஆடியோ வெளியீடு
BBC - tamil : தமிழ்நாடு பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக யூ டியூபர் மதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையுடன் பேசியபோது தான் பதிவு செய்ததாகக் கூறி சில ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் தனது 'மதன் டைரி' என்ற சேனலில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, கே.டி. ராகவன் தனது கட்சிப் பதவியை விட்டு விலகினார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கட்சி அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அதில், தன்னை சந்தித்த மதனிடம் வீடியோக்களை காண்பித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிய பிறகும் மதன் அவற்றை வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று ..அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானது! சுகாதாரத்துறை” - ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன
கலைஞர் செய்திகள் - ஜனனி : அடுத்த மாதத்திற்கு ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தில் பண்டிகையால் தொற்று அதிகரித்தது போன்று, நம் மாநிலத்தில் அதிகரிக்காத வண்ணம் அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசு
மாலைமலர் :ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டு இருப்பதால், டெல்லியில் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்காக மின்னணு விசாவை (இ விசா) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், அவர்கள் தற்போது இந்தியாவில் இல்லாதபட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இனிமேல், மின்னணு விசாவில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். மத வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மின்னணு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டு இருப்பதால், டெல்லியில் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு- சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மாலைமலர் : அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது போல் ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது போல் ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை, தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது
தாலிபான்களால் ஆப்கனில் ஒரே வாரத்தில் 80 சதவீதம் குறைந்த தடுப்பூசி பணிகள்!
தினமலர் : காபூல்:ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரே வாரத்தில் கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் 80% குறைந்துவிட்டதாக, யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் ஆப்கனுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாதி விரைவில் காலாவதியாகிவிடும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கியதிலிருந்து ஆப்கனில் தலிபான்கள் வலுப்பெற தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாகாணங்களை கைப்பற்றியவர்கள், ஆகஸ்ட் 15 அன்று காபூலை கைப்பற்றினர்.
அதற்கு முந்தைய வாரம் 30 மாகாணங்களில் 1,34,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும்,
இந்த எண்ணிக்கையானது 30,500 ஆக குறைந்ததாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 23-ல் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஆப்கனில் கடந்த ஜூன் மாதம் போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தலிபான்கள் திட்டமிட்டு சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு போலீசார் கூறினர். தடுப்பூசி மூலம் அமெரிக்கா ஆப்கானியர்களை கண்காணிக்க நினைப்பதாக தலிபான்களிடம் கருத்து உண்டு.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்
மாலைமலர் : மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார்.
ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு: அமைச்சர்!
மின்னம்பலம் :நடப்பு ஆண்டில் ரூ.11,500 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப் பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 25) தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவுத் துறை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கடந்த 10 ஆண்டுக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.60,640 கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 மத்திய கூட்டுறவு வங்கிகளைத் தவிர 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின.
மேலும், 475 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத்தில் இருந்தன. அடுத்து திமுக ஆட்சியில் 23 வங்கிகள் மட்டுமின்றி, 3,900க்கும் கூடுதலான சங்கங்கள் லாபத்தில் கொண்டு வரப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 4,000 கிடங்குகள் கட்டப்பட்டதாக உறுப்பினர் தெரிவித்தார். இதில் 90 சதவிகித நிதி நபார்டு வங்கிக்கானது. கட்டப்பட்ட கிடங்குகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் டன் நெல்லை வைக்கக்கூடிய அளவுக்குக் கிடங்குகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
தாமிரபரணி பாயும் வழியெல்லாம் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது
Sundar P : தாமிரபரணி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல், ஆத்தூர் வழியாக கடலை நோக்கி பயணிக்கிறது.
வழியெல்லாம் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது இந்த நதி.
தோண்டத் தோண்ட ஆச்சர்யம்.
கொற்கையும் ஆதிச்சநல்லூரும் பிரமிக்க வைக்கின்றன.
மேற்குலகில் நாகரிகம் வளர்ச்சி அடையாத அந்தக் காலகட்டத்தில் இங்கே மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கட்டி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கொற்கை...
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது கொற்கை. ஊர் முகப்பில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மரம். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் என்கிறார்கள்.
அதன் கீழே சில கற்சிலைகள் இருக்கின்றன.
ஆள் அரவமற்ற தெருக்கள்,
சிறு பள்ளிக்கூடம்,
ஆளே இல்லாத ஒரு தேநீர் கடை என சிற்றூராக காட்சியளிக்கிறது கொற்கை.
இந்தச் சாலையிலா முத்துக்களை குவித்து வைத்து விற்றார்கள்? ஆயிரக்கணக்கில் அரேபியக் குதிரைகள் வந்திறங்கிய துறைமுகமா இது?
எங்கே அந்த கடல் அலைகள்?
புதன், 25 ஆகஸ்ட், 2021
அமரர் மங்கள சமரவீரா! பேரினவாதக் கோட்பாட்டு அரசியலுக்கு மாற்றாக சிந்தித்த மாபெரும் தலைவர்
Nadarajah Kuruparan : மாயைக்குள் சிக்கியிருந்த வேளை அருகிருந்த நீ, தெளிவடைந்து ஒன்றாய் எழுந்த போது எங்கு சென்றாய் மங்கள? இறுதி நிகழ்வில் ஆகாயத்தை நோக்கும் சந்திரிக்கா!
மங்களவின் இளநிலை தாராளவாதத்தை, இனவாதம் ஆட்கொண்டது – முதுநிலை தராளவாதத்தை கொரோனா பலிகொண்டது!
முன்னாள் அமைச்சர் காலம் சென்ற மங்கள சமரவீர 1994 முதல், 2004வரை சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவுடன் நெருக்கமாக இருந்தார்.
இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சரவையின் பிரதான அமைச்சராகவும், யுத்தத்தை வழிநடத்திய சந்திரிக்காவின் வலதுகரமாகவும் இருந்தார்.
புலிகளுடனான சமாதானப் பேச்சவார்த்தையின் போது ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பிரதான 3 அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்தெடுத்தமை உட்பட பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில் பங்காளராக விளங்கினார்.
எனினும் சந்திரிக்கா அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் அவருடன் முரண்பட்டார்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டது நியாயமானதுதான் - மாவட்ட நீதிபதி உறுதி
நியூஸ் 18 :மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார்.
பக்கத்தில் இருப்பவரிடம் அந்த விவரத்தை கேட்டுப்பெறுகிறார், நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசினார்.
இந்த கருத்து மகாராஷ்டிரா முழுவதும் சிவ சேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலம் முழுதும் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் உள்ள காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
கார் உற்பத்தியாளர்களின் வசதிக்காக மோடியரசின் பழைய கார்களை நொறுக்கும் திட்டம்
இப்போதைய ரெஜிஸ்ட்ரேஷன் சுழற்சி என்பது தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 ஆண்டுகளாகவும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 10 வருடங்களாகவும் உள்ளது.
நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசியை, நேற்று அதிகாரப்பூர்வமாக குஜராத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் கார்களுக்கான இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிஸியை அறிமுகம்அறிமுகம் செய்திருக்கிறார் மோடி. குஜராத்தில் உள்ள அலாங்க் (Alang)தான் இந்த Vehicle Scrapping–க்கு மையப் புள்ளியாக இருக்கப்போகிறது.‘இந்த கார் அழிப்புக் கொள்கையானது, சாலைகளில் ஓடத் தகுதியற்ற மற்றும் மாசுவை உண்டாக்கும் வாகனங்களையும் நீக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதை நான் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். சுற்றுச்சூழலிலும் இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிதான் இது. இதன் மூலம் 10,000 கோடி ரூபாய் முதலீடும், பல பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். மேலும் 40% உற்பத்திப் பொருட்களின் விலையை மட்டுப்படுத்தலாம். 22,000 கோடி மதிப்புள்ள ஸ்டீல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இங்கே நாமே ஸ்க்ராப் செய்வதால், இறக்குமதி தேவையைக் குறைக்க முடியும். இதன் முதற்கட்டமாக குஜராத்தில் கார்களை ஸ்க்ராப்பிங் செய்வதற்கான கட்டமைப்பு வேலைகள் தொடங்கப்படும்’’ என விர்ச்சுவல் தொடக்க விழாவில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
திருவண்ணாமலை: 1000 ஆண்டுகள் பழைமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு… சிற்பம் கூறும் சேதி என்ன?
ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்!
புதிய தலைமுறை :ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றிய சையத் அஹ்மத் ஷா சதத் ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படங்கள் அல்-ஜசீரா அரேபியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் டெலிவரி போயாக அவரை காட்டும் புகைப்படங்கள் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலானது.
சையத் அஹ்மத் ஷா சதத், ஸ்கை நியூஸ் அரேபியாவுடன் இது தொடர்பில் பேசியதாகவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் அவருடையது என்பதை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ.க தலைவர்களின் மீது பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத சங்கிகள்
kalaingar seythikal : : பா.ஜ.கவினர் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது புதிதல்ல. குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதுமட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் நாடுமுழுவதுமே பா.ஜ.கவினர் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக, பா.ஜ.கவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் புகார்களில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் விதிவிலக்கல்ல என்பது போல தற்போது பா.ஜ.கவின் மாநிலச் செயலாளர் மீது பாலியல் புகார் ஒன்று பூதாகரமாகியுள்ளது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் பேசும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கிடு செய்யவேண்டாம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மின்னம்பலம் : நடைபெற்றுவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் பேசும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கிடு செய்யவேண்டாம் என்று சட்டசபையிலேயே உத்தரவு போட்டுள்ளார் முதல்வர்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றத. இதில் இரு துறைக்கும் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் பேசி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தனர்.
கடந்த காலங்களில் துறை ரீதியான மானிய கோரிக்கையின் போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விவாதம் செய்யாத, அளவுக்குக் கூச்சல் குழப்பம் செய்து உரிமையை மறுப்பார்கள். இதுதான் நடைபெற்று வந்தது.
உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நடைபெற்ற ஆட்சியில், மானிய கோரிக்கையின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தைத் துவங்கும்போது, பெஞ்சைத் தட்டி சத்தம் போட்டுப் பேசுவதை மறிப்பார்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள். இதை சம்பந்தப்பட்ட அமைச்சரும் கண்டுகொள்ளாமல் படித்துக்கொண்டிருப்பார். அந்த கோபத்தில் பலமுறை வெளிநடப்பு செய்தது உண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள்.
பார்ப்பனர்கள் மீது வெறுப்பு பிரசாரம்? சமூக ஊடகங்களில்
செல்லபுரம் வள்ளியம்மை : ஆரிய பார்ப்பனீய கோட்பாடுகள் தவறானவை என்பது இன்று உலகம் முழுவதும் ஓரளவு ஏற்று கொள்ளப்பட்ட உண்மையாகும்
குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆரிய பார்ப்பனீய சக்திகள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்களின் கோட்பாடுகள் எவ்வளவு மோசமானவை என்பதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது
முன்பெல்லாம் சமஸ்கிருதம் ஆரியம் பார்ப்பனீயம் பற்றி எல்லாம் மேலை நாட்டவர்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
காலகாலமாக போலியாக கட்டி எழுப்பப்பட்ட போலி பிம்பத்தை அவர்கள் நம்பி இருந்தார்கள்
அந்த ஆயிரம் ஆண்டு ஆரிய கலாச்சாரத்தின் காட்டுமிராண்டி முகத்தை கடந்த எழுவருட பாஜக ஆட்சி நிர்வாணமாக காட்டிவிட்டது
மோடியரசின் மதவெறியாகட்டும் வடமொழி வெறியாகட்டும் பொருளாதார தகிடு தந்தங்கள் ஆகட்டும் . எல்லாமே ஒரே செய்தியைத்தான் சொல்கிறது
ஆரியம் என்பது ஒரு பேரழிவு கருத்தியல் என்பதுதான் அது.
மெல்ல மெல்ல உறுதியாக திராவிட கருத்தியல் ஆழமாக வேரூன்றி கொண்டிருக்கிறது
உலகம் கண்ணை திறந்து பார்த்து அதிசயிக்க தொடங்கி இருக்கிறது
மோடியரசுக்கு எதிராக எழுந்த மாநில அரசுகளின் எழுச்சிகளை உலகம் அவதானித்து கொண்டுதான் இருக்கிறது
ஆரிய கருத்துக்களின் அடிப்படை தூள் தூளாக நொறுங்கி கொண்டு இருக்கிறது
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021
பாஜக ராகவன் செக்ஸ் லீக்ஸ் பற்றி சமூக ஊடக லீக்ஸ் என்ன சொல்கிறது?
முதல்ல தனி நபர் செக்ஷுவல் பொது சமூக பேசு பொருள் இல்லை ..
ஆனா அதில் அவரவர் சார்ந்த கட்சி அல்லது அதிகார பலம் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது தான்.
2 .இதுல பி ஜே பி கட்சிக்கு சேரும் மகளிர் பாலியல் ரீதியா அட்ஜஸ் செய்து கொள்ள நேர்வத வெளிக் கொண்ர தான் இந்த வீடியோன்னு மதன் சொல்றார் . பி ஜே பி ல எத்தனை பெண்கள் சேர்ந்தார்கள்? ..
ஆள் கிடைப்பதே கஷ்ட்டம் ..அவர்களே வெத்தலை பாக்கு வச்சு அழைத்தாலும் பெண்கள் சேர தயார் இல்லை ..அதுல பாலியல் தொல்லையை அட்ஜஸ் செய்துட்டு
அந்த கட்சில சேர அளவு தமிழ் நாட்ல கட்சி பஞ்சம் வந்துடுச்சா ? .
3 . வீடியோ இருக்குன்னு மதன் சொன்னப்ப அண்ணாமலை அதை குறித்து ஏன் போலிஸ் கம்ப்ளைண்ட் தரல ? .அது தான அது ஒரு ஐ பி எஸ் ஸோட செயலா இருக்க முடியும்.? .
4 ..இதில் திமுக வ இழுத்து ஏன் மதன் பேச்றார் ? ..ஊர்ல எவன் தப்பு செய்தாலும் திமுக பேர்ல எழுதும் இந்த செயலை பி ஜே பி தவிர வேறு யார் திட்டமிட்டு செய்ய முடியும் ..ஆக இது அண்ணாமலை ஆடும் கேம் .
தமிழ்நாட்டின் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள்!. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்....
மின்னம்பலம் : திமுக தனது தேர்தல் அறிக்கையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்தார்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற நகராட்சி வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 48.45 %ஆகும். இது 2021ஆண்டு சூழலில் 53 சதவிகிதமான உயர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர் நேரு, "மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்று மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
பாஜக கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ லீக் ... ராஜினாமா
மாலைமலர் :என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன் என்று கே.டி. ராகவன் கூறி உள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன். முன்னணி நிர்வாகியான இவர் கட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமானவர்.
இவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பாலியல் வீடியோ ஒன்று வைரலாகி பரவி வருகிறது. இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோவை வெளியிட்டவர் பா.ஜனதாவில் பல ஆண்டுகளாகவே பாலியல் சீண்டல்கள் நடப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்கியும், முக்கிய நிர்வாகிகள் என்பதால் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து இருப்பதாகவும், இதே போல் மேலும் சிலரது வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவால் அதிர்ச்சி அடைந்த கே.டி. ராகவன் உடனடியாக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்! கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
திரு .மங்கள சமரவீரவுக்கு கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
பின்னர் அவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
newsfirst.lk : Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமானார்.
COVID தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவி வகித்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையும், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையும் அவர் வௌிவிவகார அமைச்சராக செயற்பட்டார்.
இதனைத் தவிர, மேலும் பல அமைச்சுப் பதவிகளை ஏற்று மங்கள சமரவீர ஆற்றிய சேவை காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
கொடநாடு கொலை சட்டமன்ற விவாதம்: எடப்பாடி எதிர்க்கும் மர்மம்!
மின்னம்பலம் : கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (ஆகஸ்டு 23) கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார்.
கொடநாட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை, மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான கூடுதல் விசாரணை செய்ய தற்போதைய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில்தான் ஆகஸ்டு 18 அன்று சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக கொடநாட்டு எஸ்டேட் பிரச்சினையை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி முன்னரே அனுமதி பெற்று பேசவேண்டும் என்று சபாநாயகர் சொன்னபோது,
அதை மறுத்து வெளிநடப்பு செய்தார். வெளியே வந்து, “கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சேர்க்க சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக ஆகஸ்டு 19 ஆம் தேதி ஆளுநரையும் சந்தித்தார்.
சென்னை சுகேஷ் சந்திரா ரெய்டு.. 2 கிலோ தங்கம், 20 கார், பீச் ஹவுஸ் பங்களா பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி
Shyamsundar - Oneindia Tamil News : சென்னை: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திராவின் சென்னை கானாத்தூர் வீட்டில் இருந்து 20 சொகுசு கார், 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரூபாய் பணம் என்று பல்வேறு கணக்கில் வராத சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா மீது வழக்கு உள்ளது.
இதற்கு ரூ. 50 கோடி லஞ்சம் பெற்றது உட்பட பல்வேறு பண மோசடி வழக்குகள், ஏமாற்று வழக்குகள் இவர் மீது உள்ளது.
பெரிய அரசியல் தலைவர்களின் மகன் என்று கூறி பல்வேறு மோசடிகளை செய்து ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீது புகார் உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்று கூறி அரசுக்கு வாகனம் வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் உள்ளது.
பெங்களூரிலும் இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன.
60க்கும் அதிகமான மோசடி வழக்குகள், ஆள்மாறாட்ட வழக்குகள் இவருக்கு எதிராக பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அதேபோல் இவரின் காதலி நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து பல இடங்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் உள்ளது.
திங்கள், 23 ஆகஸ்ட், 2021
அகதிகளின் குடியுரிமை கோரிக்கையும் தாயகம் திரும்பியோரின் குடியுரிமை விடயமும்
ந. சரவணன் : அகதிகளின் குடியுரிமை கோரிக்கையும் அடிப்படை புரிதலற்றவர்களின் பரப்புரையும்....
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அசாதாரண நிலை உருவாகும்போது,
அங்கிருக்கும் மக்களில் தங்கள் நாட்டு மக்களும் இருப்பதை உணர்ந்த உலகின் பல நாடுகள், அந்தந்த நாட்டவர்களை பாதுகாப்பாக தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தன,
அதில் நாடுகளின் தூதுவர்களாக இருந்தவர்கள், ராஜாங்க ரீதியான அதிகாரிகள், மற்றும் ஏதாவதொரு காரணத்தின் பொருட்டு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்றவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய செயற்பாடாகவே இருந்தது.
பொதுவாக இயற்கை பேரிடர், கொரோனா பெருந்தொற்று காலங்களிலும்கூட தன் நாட்டு மக்களுக்காக உலக நாடுகள் இதுபோன்றதொரு ஏற்பாட்டை செய்தது,
அப்படியான ஏற்பாட்டை, இந்தியா இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் நடக்கும்போது செய்திருக்க வேண்டும்.
1964, மற்றும் 1974 ல் நடைப்பெற்ற இந்தியா இலங்கை ஆகிய இரண்டு நாட்டு ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கு நாடு திரும்ப வேண்டிய 6 இலட்சம் பேரில் 1983 வரை 4 இலட்சத்து 61 ஆயிரம் மட்டுமே நாடு திரும்பியிருந்தனர். போர் சூழல் காரணமாக அவர்களால் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. இந்திய தூதரகம் செல்வதோ,அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அலுவலகம் செல்வதோ, இந்தியா வருவதற்கான அனுமதி மற்றும் பயண ஆவனங்களை பெறுவதோ என அனைத்திலும் சிக்கல் இருந்தது,அந்த நேரத்தில் இந்தியா தன் நாட்டு மக்கள் நாடு திரும்புதலில் உள்ள சிக்கலை தீர்க்க முன்வந்திருக்க வேண்டும், அதை செய்யவில்லை.
தாலிபான்களுக்கு அடிபணிய மறுக்கும் பஞ்ச்ஷிர் போராளிகள் -பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா?
மாலைமலர் :ஆப்கானிஸ்தானில் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள போராளி குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதுடன் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களிடம் மண்டியிட மறுத்ததுடன், சண்டையிடவும் தயாராக உள்ளது.
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990ம் ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய தலிபான்களால் கூட பஞ்ச்ஷிரை நெருங்க முடியவில்லை.
தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது
கி.பிரியாராம் கிபிரியாராம் : தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது!
தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
அவற்றை விரிவாக பார்ப்போம்.
1. எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம் கொடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.
உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.
அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.
சிறுவன் உயிரிழப்பு : அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
மின்னம்பலம் : விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் ஊன்றியபோது உயிரிழந்த சிறுவன் விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திமுக கட்சியின் நிர்வாகி பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
திருமண விழாவுக்கு சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்பட்டிருந்தார்.
மதவெறியில் அல்லாவிடம் தொழுகை நடத்துவதாக சாலைகளில் நாடகம் நடத்தினீர்கள்
Kulitalai Mano : BJP behind RSS is very poisonous effort in india .இது யாருக்கு தெரியலைன்னாலும் பரவாயில்லை
இந்திய முஸ்லிம்களுக்கு தெரியவேண்டும்
வெளிப்படையா பேசுவதென்றால் உங்கள் டகால்டி வேலைக்கெல்லாம் முடிவுரை எழுதபபட்டுவிட்டது
எழுதியது ஆர்எஸ்எஸ்
அந்த முயற்சி வெற்றி பெற காரணம் உங்கள் மத நடவடிக்கைகள்
இதை இனியும் மறுத்து பேசி முற்றாக அழிந்து போய்விடாதீர்கள்
பாக் பிரிவினையின் போது நடந்த நவகாளி நிலைமையை ஒரே நிமிடத்தில் இந்தியா முழுக்க அரங்கேற்ற இன்றைககு தீயசக்திகளால் முடியும்
உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள்
இந்திய முஸ்லிம்களுக்கும் மற்றைய உலக முஸ்லிம்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு
ஆனால் கடந்த 15அல்லது 20ஆண்டுகளாக நீங்கள் அவர்களை காப்பியடிக்க ஆசைப்பட்டு இந்திய தலிபான்களாக வேசம் கட்ட ஆரம்பித்தில் ஆரம்பித்தது உங்கள் சரிவு
RSS என்பது ஒரு சிறு புற்று .அதில் பார்ப்பன பாம்புகள் மட்டுமே இருந்தது
அந்த பாம்புகள் மற்ற ஜீவராசிகளையும் விச ஜந்துக்களாக்கி காவி சங்கி யாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறது
காரணம் முஸ்லிம்கள் அனைவருமே[ நல்ல மனிதர்களும் கூட என்பது அதிர்ச்சி தகவல் ]பச்சை சங்கிகளாக மாறியதனால்தான்
உடைகளை ஈரானியன் போல் அணிய ஆரம்பித்தீர்கள்
சிறு பெண்குழந்தைகளுக்கும் புர்கா போட்டீர்கள் திணித்தீர்கள் வலுக்கட்டாயமாக்கினீர்கள்
இனி பானிபூரி சாப்பிடும் போதெல்லாம் இதானே ஞாபகம் வரும்” : வைரல் வீடியோ
கலைஞர் செய்திகள் :பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பக்கெட்டில் கலக்கும் காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத் நடித்த ‘காதல்’ திரைப்படத்தில் ஒருவர், தனது முதலாளியின் நண்பர் மேல் உள்ள கோபத்தில் குளிர்பானத்தில் சிறுநீர் கழித்து அவருக்குக் குடிப்பதற்குக் கொடுப்பார்.
அதைக் கண்டுபிடித்த முதலாளியின் நண்பர் அவரை பின்னி பெடலெடுத்திருப்பார்.
கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் அரங்கேறியிருக்கிறது.
சாலையோர கடைகளுக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை . சிலர் ருசிக்காகவும் சிலர் குறைவான விலை என்பதாலும் சாலையோரக் கடைகளில் சாப்பிடுவார்கள்.
பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நக்கீரன் :தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது போன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.
பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று செயல்படுத்தக் கோருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களுக்கு 1000 பஸ்கள் இயக்கம்- 4 மாதங்களுக்கு பிறகு பயணிகள் மகிழ்ச்சி
மாலைமலர் : சேலத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பஸ் சேவை இன்று தொடங்கி உள்ளது.
வெளி மாநிலங்களுக்கு 1000 பஸ்கள் இயக்கம்- 4 மாதங்களுக்கு பிறகு பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மேலும் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்ற பொதுப்போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்தன. நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.
அந்த மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதற்கிடையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மே, ஜூன் மாதங்களில் தீவிரம் அடைந்தது. அதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜூலை மாதத்தில் இருந்து படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கின. அதனால் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...??? கானா(Ghana) கார்த்தகீனியா - 25 - (இறுதிப்பதிவு)
புகச்சோவ் : கார்த்தகீனியா - 25 - (இறுதிப்பதிவு) - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...???
கானா(Ghana)
ஆப்ரிக்காவில் ஆடி திருவிழா!!!!!
அசாந்தி மற்றும் அகன், பாண்டிகளின் பண்டிகைகளில் ஆடி(Adae) திருவிழாவும் ஒன்று. வருடத்தை ஒன்பது பகுதிகளாக பிரித்திருக்கின்றனர் அசாந்தியினர்
40 - 42 நாட்களாக. இதில் வருட தொடக்கத்தில் வரும் திருவிழா ஆடிAdae ஆகும்.42 நாட்களுக்கிடையில் 21வது நாளில் வரும் திருவிழா Akwasidae அக்வாசிடே எனப்படுகிறது.
இதன் உச்சரிப்பு ஏகாதசியை ஒத்திருக்கிறது. 42 வது நாளில் வரும் திருவிழா Awukudae எனப்படுகிறது இது அமாவாசை நாளில் வருகிறது. முதல் திருவிழா ஆடி என்றும் வருட இறுதியில் வரும் 9 வது ஆடியானது Adae kese ஆடி கேசி எனவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் ராணி சோராயா: பெண்ணுரிமையை முன்னெடுத்த அரசியு. Last King of Afghanistan (1933-1973) - King Zahir Shah
1919 இல் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது, அவரது மனைவி சோராயா தார்சியின் கருத்துக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. பல நூற்றாண்டுகளாக பிற்போக்கான மற்றும் பழமைவாத கலாச்சாரத்தில் வாழும் ஒரு நாட்டிற்கு இந்த எண்ணங்கள் புதியவை.
சில வருடங்களுக்குப் பிறகு, அமானுல்லா கான் தனது பட்டத்தை அமீரிலிருந்து பாட்ஷா என்று மாற்றி ஆப்கானிஸ்தானின் ஷா ஆனார்.
அமானுல்லாவின் ஆட்சி 1929 வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் அவரும் ராணி சோராயாவும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர்.
1926 இல், அமானுல்லா கான் ஒரு அறிக்கையில், ‘நான் மக்களின் ராஜாவாக இருக்கலாம், ஆனால் கல்வி அமைச்சர் என் மனைவிதான்’ என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து, ஆப்கானிஸ்தானில் சோராயாவின் பங்கை தெளிவாக்கியது.
"கடவுளின் அன்னை" போர்த்துக்கீசிய மொழியில் “Madre de Deus” என்ற பெயர் மதராஸ் என்று மருவியது
மதுரை மன்னன் : சென்னை மாகாணத்தின் தலைநகரமும்,
தற்கால தமிழகத்தின் தலைநகரமுமான,
சென்னை உருவான தினம் இன்று. ( 22 ஆகஸ்ட் 1639 )
கிழக்கிந்திய கம்பெனியைச்சேர்ந்த Francis Day, Andrew Cogan ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜெயின்ட் ஜார்ஜ்கோட்டை (Fort St George - தற்போதைய சட்டசபை) உள்ள இடத்தை வாங்கினார்கள்.
அந்த இடத்தை விற்ற வந்தவாசியை ஆண்ட வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட அய்யப்ப நாயக்கர் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka) என்பவரின் நினைவாக இந்நகருக்கு சென்னை எனப்பெயரிட்டனர்.