திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...??? கானா(Ghana) கார்த்தகீனியா - 25 - (இறுதிப்பதிவு)


புகச்சோவ்  :   கார்த்தகீனியா - 25  -  (இறுதிப்பதிவு) - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...???
கானா(Ghana)
ஆப்ரிக்காவில் ஆடி திருவிழா!!!!!
       அசாந்தி மற்றும் அகன், பாண்டிகளின் பண்டிகைகளில் ஆடி(Adae) திருவிழாவும் ஒன்று. வருடத்தை ஒன்பது பகுதிகளாக பிரித்திருக்கின்றனர் அசாந்தியினர்
40 - 42 நாட்களாக. இதில் வருட தொடக்கத்தில் வரும் திருவிழா ஆடிAdae ஆகும்.42 நாட்களுக்கிடையில் 21வது நாளில் வரும் திருவிழா Akwasidae அக்வாசிடே எனப்படுகிறது.
இதன் உச்சரிப்பு ஏகாதசியை ஒத்திருக்கிறது. 42 வது நாளில் வரும் திருவிழா Awukudae எனப்படுகிறது இது அமாவாசை நாளில் வருகிறது. முதல் திருவிழா ஆடி என்றும் வருட இறுதியில் வரும் 9 வது ஆடியானது Adae kese ஆடி கேசி எனவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

                ஆடி என்பதற்கு ஓய்வெடுக்குமிடம் எனப்பொருள். அதாவது சுடுகாடு. முன்னோர்க்கு திதி கொடுப்பதும், ஆவிகளை திருப்திபடுத்துவதும், காவல் தெய்வங்களுக்கு நன்றி சொல்வதுமே இந்த திருவிழாக்களின் நோக்கம். இந்த விழா நாட்களை எந்தவித மாற்றத்திற்கும் உட்படுத்தமுடியாது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைபிடித்துவரும் நம்பிக்கையை கைவிட முடியாதென்பதால். எந்த மதத்திற்கு மாறியவர்களாயினும் இந்த திருவிழாக்களில் கலந்தாகவேண்டும். முன்னாள் ஐநா சபை தலைவரான
கோபி அன்னான் அசாந்தி சமூகத்தவராவார். அவரும் இதில் கலந்தேயாகவேண்டும்.
        ஆடித்திருவிழா நாளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை வரை விழா நடக்கிறது
வீடு,சுற்றுப்புரங்களை சுத்தம் செய்து ஓபரம்பன் வீட்டின்முன்பு மக்கள் கூடுவார்கள். மாலை முதல் நடு இரவுவரையில் ஆவிகள் மற்றும் முன்னோர்களை புகழ்த்திப்பாடும் இசை மேளத்தோடு நடக்கும். Yam எனும் சேனைக்கிழங்கு மசியல் அல்லது Plantain எனப்படும் நேந்திரன்காய் மசியல் படைக்கப்படும். அதை ஓபரம்பன் உண்டபிறகு ஆவிகளுக்கு வீசுவார்கள். அந்நேரத்தில் மணியோசை இடைவிடாது ஒலிக்கப்படும்.
                பிறகு கறுபுநிற சேவல் மற்றும் ஆடு பலிகொடுக்கப்படும். அதன் ரத்தத்தை பரம்பன் அசாந்தினி (மன்னன்) எனப்படும் தலைவர்களின் நெற்றியிலும் மார்பிலும் பூசிவிடுவான் பூசாரி. பிறகு மகாராணி சேனை மசியல் சாப்பிடுவார். அதுமுடிந்ததும் பனங்கள்ளு அல்லது சாமையிருந்து தயாரிக்கப்படும் சாராயம் மன்னனின் ஆசனத்தின்மேல் அபிஷேகம் செய்யப்படும். அதன்பிறகு புலவர்களும் பாணர்களும் இறந்துபோன பண்டைய மன்னர்களின் புகழாஞ்சலிகளையும் பாடல்களையும் படிப்பார்கள். அந்நேரத்தில் மன்னனும் மக்களும் இசைமுழக்கத்திற்கேற்ப நடனமாடுவர். இரவு ஒருமணிவரையான ஆட்டம்பாட்டம் முடிந்தவுடன் பலிகொடுக்கப்பட்ட ஆட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களை உடனடியாக அகற்றிவிட்டு திரும்பிப்பார்காமல் வீடுதிரும்பிடுவர். வழியில் யார் அழைத்தாலும் மௌனமாக வீட்டிற்கு சென்றிடவேண்டும்.
               அக்வாசிடே. இத்திருவிழாவில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயத்திற்கான தயாரிப்புகளை செய்யவேண்டிய நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. வருடத்தில் வரும் திருவிழா நாட்கள் மேலும் குடும்ப விசேஷங்களுக்கான நாட்களும் மக்கள் முன் சொல்லப்படும் மேலும் ஏழைகளின் பிழைப்பிற்கான பணம் காணிக்கையாக எல்லோரிடமிருந்தும் வசூலிக்கப்படும். மன்னரும் பரம்பன்களும் பெருந்தொகையை தருவார்கள். குலதெய்வம் மற்றும் முன்னோர்(Akom) எனும் வழிபாட்டுமுறை கடைபிடிக்கப்படும். இது Abosom கடவுளை வணங்குவதாகும்.
                   மன்னனை பல்லக்கில் வைத்து மேளதாளம் முழங்க பெரிய சுடுகாட்டுக்கு தூக்கிவருவார்கள் மக்கள். அதனுடன் ராஜ நாற்காலியும் சகல மரியாதையுடன் எடுத்துவரப்படும். ஆசனத்தில் அசாந்தினி மன்னன் அமர்ந்து பொதுமக்களுடன் கைகுலுக்கும் சம்பிரதாயம் நடக்கும். சுடுகாடு சுத்தப்படுத்தப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடங்கும். பிறகு ஆசனத்தில் பண்டைய பெருமைமிகு மன்னனின் மண்டையோட்டை வைத்து பூசிப்பார்கள். மாமிசம் கலந்த உணவு மற்றும் முட்டை, மசித்த சேனை ஆகியவை முன்னோர்களுக்கு படைக்கப்படும். இதை WUTU வூட்டு என்றழைக்கிறார்கள்.
                     நாஞ்சில்நாடன் அவர்களின் மாமிசப்படைப்பு எனும் நூலில் இதை நீங்கள் காணலாம். நாஞ்சிலின் சிறுதெய்வ வழிபாடுகளிலொன்று வூட்டு என்பதாகும். சாமிக்கு மாமிச படையலிட்டு நடுஇரவில் விளக்குகளை அணைத்துவிட்டு உணவை உருட்டி மேல்நோக்கி வீசுவார்கள். அதை துர்தேவதைகள் பிடித்து உண்பதாக நம்பிக்கை. அதுபோல் இறப்பு சடங்குகளில் படையிடுகையில் சேனைக்கிழங்கு கூட்டு செய்வதை (சேனை எரிசேரி) குமரியில் இன்னமும் காணலாம். அதுபோலவே படையலிடும் உணவுகளில் ஆப்ரிக்கர்கள் உப்பு சேர்ப்பதில்லை நம்மைப்போலவே. ஆப்ரிக்கர்களின் விழாக்களில் மிக முக்கியமானது பெயர் சூட்டும்விழா. அதில் குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவாக சேனைக்கிழங்கு மசியல் உள்ளது. இங்கே பிறந்த குழந்தைக்கு சேனைவுடறதுன்னு ஒரு சாங்கியமே இருக்கு தமிழகத்தில்.
                அவுக்குடே திருவிழா புதன்கிழமை தொடங்கி வெள்ளியன்று முடிகிறது. இதில் பறைபோன்ற மேளம் அடிக்கப்படுகிறது. இவ்விழாவிலும் Wutu எனும் மாமிச படைப்பு முன்னோர்களுக்கு  படைக்கப்படுகிறது. இதை Wutu adae வூட்டு ஆடி என்றும் சொல்கின்றனர். இவ்விழா முன்னோர்களின் சட்டவிதிகளின்படி நாங்கள் நடப்போம் ஆகவே எங்களை காக்கவேண்டும் என்று  மக்கள் முன்னோரிடம் வேண்டும் சடங்காகும். இந்த நாட்களில் எவரும் வீட்டுக்குள் தங்கி இருப்பது முன்னோர்களின் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கும் என்கிற நம்பிக்கை அசாந்திகளிடமுண்டு.
             ஆடி கேசி விழா, இது இறந்துபோனவர்களுக்கான சாந்தியுண்டாக்கும் விழாவாகும். அக்டோபரில் வரும் அமாவாசை
(மஹாளய)நாளன்று கொண்டாடப்படுகிறது.இது நாட்டை புனிதப்படுத்துவதாக நம்பிக்கை. பரம்பன் மன்னன் ஆடு ஒன்றை தோளில் தூக்கிவருவார் அவரது பரம்புக்கு (அரண்மனை முற்றம்). அந்த ஆடு அரசனின் ஆசனத்துக்கு பலிகொடுக்கப்படும். பிறகு கடந்தவருட சுபீட்சத்துக்கும், விவசாய மகசூலுக்கும்
சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும் நல்ல பருவநிலைகளை தந்ததற்கும் சுடுகாட்டில் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படும். அங்கு திதி கொடுப்பதைப்போன்ற சாந்திகர்மங்கள் நடைபெறும். இதில் மன்னன் முதல் சாதாரண மக்கள்வரை கலந்துகொள்வர்.
                               இதன்பிறகு அசாந்தினியான மன்னர் பரம்பன்களுக்கும், ஓபரம்பன்களுக்கும் மற்றும் பூசாரி முக்யஸ்தர்களுக்கும் அரண்மனையில் விருந்தளிப்பார். இதில் அரண்மனை மகளிரின் நாட்டியமும் நடைபெறும். இவ்விழாவில் முன்பெல்லாம் நரபலி கொடுக்கும் வழக்கமிருந்திருக்கிறது. அதனால் பொதுமக்கள் இவ்விழா நடைபெறுகையில் மிகுந்த பயத்துடன் இருந்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மகா ஆடி எனப்படும் Great adae kese விழா கொண்டாடப்படுகிறது. இதில் விருதுகள் வழங்கும் நிகழ்வும், அரசனுக்காக பிரார்த்திக்கும் நிகழ்வும் முக்கியமானதாகும்.
                         மூன்று இனக்குழுக்கள் தவிர்த்த Oguaa ஆகுவா பழங்குடிகளுக்கான விழாவொன்றும் தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்பெயர் Fetu afahye பெட்டு அபாகை என்பதாகும். இது செப்டம்பரின் முதல் சனிக்கிழமை தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.  அநேகமா புரட்டாசி சனிக்கிழமையை ஒத்திருக்கிறது இவ்விழா. நாட்டில் நோய்நொடிகள் பரவாமலிருக்க மூலைமுடுக்கெல்லாம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
1, Adae ஜூலை மாத பண்டிகை. ஜூலையில்தான் ஆடி செவ்வாய் எங்க ஊர் (குமரி)அம்மன் சாமிகளுக்கு விசேஷம். ஆடி அமாவாசை பார்ப்பான் தர்பண ஏமாத்து செய்றநாள்.
2, ஆடிகேசி(Adae kese) அக்டோபர் அமாவாசை என்பது நம்ம ஊர் மஹாளய அமாவாசை.பார்ப்பான் கலெக்சன் பண்ற நாள்.
3, Fetu afahye பெட்டு அபாகை என்பது செப்டம்பரில் வரும் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் ராதா கல்யாண விசேஷமாக பார்ப்பான் கொண்டாடுறான்.
                          ஓபரம்பன்கள் போட்டோவை பாக்கறப்போ அப்படியே சாணக்கியனோட,பார்ப்பானோட டிரெஸ் மாதிரியே இருப்பதை உணரலாம்.
         கார்த்தகீனியா தொடரை இத்தோடு நிறைவுசெய்கிறேன். இதை புத்தகமாக வெளியிட்டபிறகு மீண்டும் எழுதலாமென்றிருக்கிறேன். தோழர்கள் பிடித்திருந்தால் கமென்ட் செய்யவும்.
நன்றி.....
No photo description available.

No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக