வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

காபூல் விமான நிலையத்தை தாக்கிய ஐஎஸ்-கோரஷான்! தாலிபான்களின் திடீர் எதிரி.?. யார் இவர்கள்?

 Shyamsundar -   Oneindia Tamil News காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாலிபான்களையும், அமெரிக்க படைகளையும் இந்த அமைப்பு எதிர்த்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதோடு 80க்கும் அதிகமான நபர்கள் இதில் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க படையினர் 12 பேர் வரை இதில் மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பிற்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை.
இது ஐஎஸ் அமைப்பின் கிளைஅமைப்பு நடத்திய தாக்குதல் என்று தகவல் வருகிறது.

வெளியான காபூல் குண்டுவெடிப்பு வீடியோ யார்? யார்? இந்த தாக்குதலை ஐஎஸ் பிரிவின் கிளை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்பே அமெரிக்க அதிபர் பிடனும், அமெரிக்க உளவுத்துறையும் இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தனர். காபூல் விமான நிலையில் இருந்து அமெரிக்க படைகள் உடனே வெளியேறவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பும் தெரிவித்து இருந்தது.

இதனால் இந்த அமைப்பு மீது அமெரிக்க படைகள் கவனம் செலுத்தி வந்தது. தாக்குதல் தாக்குதல் இந்த நிலையில்தான் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது போலவே காபூலில் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் என்பது ஐஎஸ் அமைப்பு ஈராக்கிலும், சிரியாவில் வளர்ச்சி கண்ட பின் அவர்களின் வழியை பின்பற்றி உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். 2014ல் இந்த ஐஎஸ் அமைப்பில் இருந்து பிரிந்த சிலரும், பாகிஸ்தானில் இருந்து வந்த தாலிபான்களும் மற்ற சில முன்னாள் முஜாகிதீன் படையினரும் இணைந்து உருவாக்கிய குழுவாகும் இது.

ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை தலைவராக ஏற்றுக்கொண்டு இந்த இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் குழு உருவாக்கப்பட்டது.

அதன்பின் 2016ல் இந்த அமைப்பை ஐஎஸ் மத்திய பிரிவு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்த்தானின் வடக்கு பகுதியில் உள்ள குணார், நங்கார்ஹார், நுரிஸ்தான் ஆகிய பகுதிகளை தலைமையிடமாக கொண்டு இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் மிக மோசமான் தற்கொலை படையினர், ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்.
இந்த அமைப்பில் 1000 தற்கொலைப்படையினர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதலில் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படவில்லை. இரண்டுமே சன்னி இஸ்லாமை ஆதரிக்கும் அமைப்புகள் ஆகும். ஆனால் இவர்களுக்கு இடையில் கடந்த சில வருடங்களாக ஈகோ மோதல் ஏற்பட்டது. யார் தீவிரமான இஸ்லாமியர்கள், யார் செல்லும் ஜிஹாத் பாதை செல்லும் சரியானது என்று இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பிற்கும் தாலிபான் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பகை இருந்தது பகை இருந்தது மத்திய ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பிற்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதலில் தாலிபான்கள் வென்றது. அதில் இருந்தே இவர்களுக்கு இடையில் கடும் பகை இருந்து வந்தது. இதில் ஐஎஸ் மத்திய அமைப்பு தாலிபான்களுக்கு பதிலாக இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பை ஆதரித்து வந்தது. தாலிபான்களை சில ஐஎஸ் அமைப்பின் பிரிவினர் துரோகிகள் என்றும் கூட விமர்சனம் செய்து இருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்ற பின்பு இந்த அமைப்பு கண்டிப்பாக தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக தாலிபான்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பு தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடியே தற்போது காபூலில் மாபெரும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக