வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு தமிழ்நாடு பற்றிய சரியான புரிதல் இல்லை?

 Kandasamy Mariyappan  :    தமிழ்நாட்டில் 90s kidsன் புரிதல், சற்றே வேதனை தரக்கூடியதாக உள்ளது.
இன்றைய தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார நிலையை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்து, நாம் இன்னும் வளர்ச்சியடையவே இல்லை என்றும், நமது அரசியல் தலைவர்களின் ஊழல்தான் இதற்கு காரணம் என்றும் அவர்களை குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்புடன் இருப்பதை காண முடிகிறது.  
அந்த இளைஞர்களுக்கு, நான் மூன்று விஷயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
1. தயவுசெய்து இந்திய ஒன்றியத்தின் வடக்கு பகுதிகளுக்கு சென்று வாருங்கள். அல்லது அவர்களுடைய கல்வி, மருத்துவ, சமூக, பொருளாதார குறியீட்டை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
2. இன்று நீங்கள் பழம் பறித்து சாப்பிடும் இந்த பழத்தோட்டம், ஏதோ 60வதே மாதங்களில் உருவாக்கிய பழத்தோட்டம் இல்லை.
1912 முதல் பல தலைவர்களால், குச்சிகளை வேலியாக்கி, மண்குடத்தால் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்க்கப்பட்ட பழத்தோட்டம்.
இடையிடையே திரு. ராஜகோபால் போன்ற வெள்ளாடுகள் அவ்வப்பொழுது தோட்டத்தில் புகுந்த பொழுதும், பெரியார் என்ற கைத்தடி கொண்டு விரட்டி விட்டு, வளர்த்த பழத்தோட்டம்.

பழத்தோட்டத்தில் சில குறைகள் இருக்கலாம். அதனை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதுதான், நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் மட்டுமல்லாமல், நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் தொண்டும் ஆகும்.
3. அருகிலேயே ஒருவர் புதிதாக ஒரு பழத்தோட்டம் உருவாக்க நன்றாக இரும்பு வேலி அமைத்து, நமது பழத்தோட்டத்தை பார்த்து குறை பேசிக்கொண்டு இருக்கிறார்.
பழம் தரும் நம்முடைய பழத்தோட்டத்தை கிண்டலடித்து, உளவியல் ரீதியாக உங்களிடம் குழப்பம் விளைவித்து உங்களிடமிருந்து முழு சக்திகளையும் உறிஞ்சப் பார்க்கிறார்.
ஒருவேளை, மீண்டும் கூறுகிறேன் ஒருவேளை உங்கள் உழைப்பால் பழத்தோட்டம் உருவாகி, வளர்ந்து பழம் தரும் சமயத்தில், பழத்தோட்டம் அவர்களுக்காக வளர்க்கப்பட்டது என்று கூறுவதோடு, நீங்களோ உங்கள் சந்ததியினரோ உள்ளே நுழைந்தால் துப்பாக்கியால் சுடவும் தயங்க மாட்டார்கள்.
உதாரணம் மகராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் சென்று பாருங்கள், அப்பொழுது புரியும்.
Please don't get carried away by
RSS/BJP and
நாம் தமிழர்
ரஜினிகாந்த்
கமலஹாசன்
அன்புமணி.
மீள் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக