நியூஸ் 18 :மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார்.
பக்கத்தில் இருப்பவரிடம் அந்த விவரத்தை கேட்டுப்பெறுகிறார், நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசினார்.
இந்த கருத்து மகாராஷ்டிரா முழுவதும் சிவ சேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலம் முழுதும் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் உள்ள காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அரசியல் காரணங்களுக்காக உரிய நோட்டீஸ் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை மற்றும் மத்திய அமைச்சராக உள்ளார் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கு குறித்து தெரிவித்த ராய்காட் மாவட்ட நீதிபதி, ‘கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆராயும்போது கைது செய்யப்பட்டது நியாயமானதாகத் தெரிகிறது. ஆனால், நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான தேவை இல்லை. இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது. ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
Evlo views varudhu bro unga blog ku
பதிலளிநீக்கு